அறிவியல் ஆயிரம்: இளைஞரை மிஞ்சும் குழந்தை | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

சிறப்பு பகுதிகள் செய்தி

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்: ஞாபகம் இருக்கிறதா

பதிவு செய்த நாள் : அக் 15, 2018
Advertisement


ஞாபகம் இருக்கிறதா

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்ட மக்களை காண்கிறோம். தவிர அலைபேசி, 'டிவி', விளம்பர பதாகைகள் மூலமும் பல நபர்களை பார்க்கிறோம். அவர்களின் முகங்களை ஞாபகப்படுத்தி அறிகிறோம். பாரிசில் இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஒருவர் வாழ்க்கையில் சராசரியாக, 5 ஆயிரம் பேரின் முகங்களை ஞாபகம் வைக்கின்றனர் என கண்டறிந்து உள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்கள் 1000 முதல் 10,000 பேரின் முகங்களை ஞாபகம் வைத்திருந்தனர்.


தகவல் சுரங்கம்: 'நாகலாந்து காந்தி'

வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் சமூக சேவையில் ஈடுபட்டு, அம்மாநில மக்களால் 'நாகலாந்து காந்தி' என அழைக்கப்பட்டவர் நட்வர் தக்கார். இவர் அக்,. 7ல் மறைந்தார். மகாராஷ்டிராவில் இருந்து 23 வயதில், சமூக பணிக்காக நாகலாந்துக்கு குடிபெயர்ந்தார். 1955ல், 'நாகலாந்து காந்தி ஆசிரமம்' என்பதை தொடங்கினார். அப்போது ராணுவத்துக்கும் - நாகா புரட்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்தது. களத்தில் இறங்கிய இவர், காந்திய கொள்கைகளை பரப்பி, மக்களிடம் அமைதியை ஏற்படுத்தினார். பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X