Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

டீ கடை பெஞ்ச்

பதிவு செய்த நாள் : ஜூன் 24, 2018
Advertisement
 டீ கடை பெஞ்ச்

கைதிகளுக்கு கேன்டீன் நடத்தும் சிறை வார்டன்!''கோடிக்கணக்குல கடனை வாங்கிட்டு, கட்ட முடியாம திண்டாடிட்டு இருக்காருங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''யாரு வே அது...'' என கேட்டார் அண்ணாச்சி.''நெல்லை மத்திய மாவட்ட, தி.மு.க., செயலரா இருக்குறவர் அப்துல் வகாப்... கட்சியில பொறுப்பு வாங்கி தர்றேன்னு, சிலரிடம் பணம் வசூல் செஞ்சதா, இவர் மேல ஏற்கனவே புகார் இருக்குங்க...''கட்சி செலவுக்குன்னு சொல்லி, தனி நபர்கள் சிலரிடம் கோடிக்கணக்குல, வட்டிக்கு பணம் வாங்கியிருக்கார்... இந்த வகையில, நாலஞ்சு கோடிக்கு மேல கடன் இருக்காமுங்க...''கடன் குடுத்தவங்க, கேட்டு கேட்டு பார்த்து, நொந்து போய், இப்ப போலீஸ்ல புகார் தர முடிவு பண்ணியிருக்காங்களாம்...'' என்றார் அந்தோணிசாமி.''அடுத்த மாநாட்டுக்கு தயாராகிட்டு இருக்காவ வே...'' என, வேறு விஷயத்திற்கு தாவிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...''போன லோக்சபா தேர்தலுக்கு முன்னாடி, தமிழக, பா.ஜ., சார்புல, 'தாமரை சங்கமம்' மாநாட்டை, மதுரை, ரிங் ரோட்டுல நடத்துனாவ... அத்வானி, நிதின் கட்கரி, சுஷ்மான்னு அகில இந்திய தலைவர்கள் பலரும் கலந்துக்கிட்டாவ வே...''அடுத்த வருஷம் வரப் போற லோக்சபா தேர்தலுக்காக, மறுபடியும், மதுரையில மாநாடு நடத்த இருக்காவ...''பா.ஜ., மகளிரணி சார்புல, 'தமிழ் மகள் தாமரை மாநாடு'ன்னு ஜூலை, 22ல, ஒத்தக்கடை மைதானத்துல நடத்த போறாவ... இதுக்கு, கட்சியின் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்களை அழைக்க இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.''டிரான்ஸ்பர் போட்டும், விடாப்பிடியா கேன்டீன் நடத்திண்டு இருக்கார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.''யாரு பா...'' என கேட்டார் அன்வர்பாய்.''மலைக்கோட்டை மாவட்ட, மத்திய சிறையில இருக்கற ஒரு வார்டனை, சமீபத்துல, பெரம்பலுார் கிளை சிறைக்கு மாத்திட்டா... ஆனாலும், தினமும் மத்திய சிறைக்கு வந்து, கைதிகளுக்கான கேன்டீனை நடத்திண்டு இருக்கார் ஓய்...''ஒரு மாசத்துக்கு முன்னாடி தான், அதிகாரிகளுக்கு, ரெண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் குடுத்து, ரெண்டு மாசம் கேன்டீன் நடத்த, 'கான்ட்ராக்ட்' எடுத்திருக்கார்... திடீர்னு, 'டிரான்ஸ்பர்' போட்டுட்டதால, கொடுத்த பணத்தை அதிகாரிகளிடம் கேட்டிருக்கார் ஓய்..''அவாளோ, 'அதெல்லாம் செலவாயிடுத்து... தொடர்ந்து, ஒரு மாசம் கேன்டீனை நடத்திக்கலாம்'னு சொல்லிட்டா... இவரும், பெரம்பலுார்ல வேலை பார்க்கறதா, 'கணக்கு' காட்டி, இங்க வந்து கேன்டீனை நடத்திண்டு இருக்கார் ஓய்...''வெறும், ரெண்டு மாசத்துக்கு, ரெண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் குடுத்து, கேன்டீன் நடத்தறார்னா, அதுல எத்தனை லட்சம் அள்ள முடியும்னு பாருங்கோ...'' என்றார் குப்பண்ணா.''என் பிரெண்டு ஜெயகுமாரைப் பார்த்து ரெண்டு மாசம் ஆச்சு... இன்னிக்கு பாக்கப் போறேன்...'' என்றபடியே அந்தோணிசாமி கிளம்ப, மற்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.எம்.எல்.ஏ.,வுடன் மோதிய அதிகாரி இடமாற்றம்!''திருட்டு புகார் குடுத்தா, வாங்கி விசாரிக்கணுமா, வேண்டாமா வே...'' எனக் கேட்டபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த ஊர் போலீஸ் விவகாரம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''மதுரை மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட்ல, பயணியரிடம், அடிக்கடி திருட்டு நடக்கு... மதுரை போலீஸ்காரர் ஒருத்தரின் அம்மா, சமீபத்துல, திருநெல்வேலியில இருந்து, பஸ்ல வந்து இறங்கியிருக்காங்க வே...''அவங்களிடம், ஒரு பெண் பேச்சு குடுத்து, 5,000 ரூபாயோட, கைப்பையை திருடிட்டு போயிட்டாங்க... அந்தம்மா, தன் மகனோட, போலீஸ்ல புகார் குடுக்க போயிருக்காங்க வே...''அங்க இருந்த அதிகாரி, 'உங்க மகனும் போலீஸ்காரன் தானே... பஸ் ஸ்டாண்ட்ல இருக்குற கண்காணிப்பு கேமராவை பார்த்து, அந்த பெண்ணை பிடிக்க வேண்டியது தானே'ன்னு கிண்டலா பேசியிருக்காரு வே...''இவ்வளவுக்கும் அந்த போலீஸ்காரர், உயர் அதிகாரி ஒருத்தரின் கார் டிரைவர்... திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காம, இருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.''அந்த ஏரியாவுக்கே தான் தான், 'சக்கரவர்த்தி' மாதிரி அந்த அதிகாரி நடந்துக்குறாரோ...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''மாவட்ட வாரியா சுற்றுப்பயணம் போறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''எந்த கட்சி தலைவர் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''ராஜ்யசபா, எம்.பி.,யான கனிமொழி, தி.மு.க., மகளிர் அணி செயலராகவும் இருக்காங்களே... இவங்க, மாவட்ட வாரியா சுற்றுப் பயணம் செய்ய முடிவு செஞ்சாங்க பா...''ஆனா, 'காரணம் இல்லாம, மாவட்டங்களுக்கு போனா, ஸ்டாலின் அதிருப்தி ஆவார்'னு சிலர், தடை போட்டு வச்சிருந்தாங்க... அதனால, காரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தவங்க, சமீபத்துல வந்த, கருணாநிதி பிறந்த நாளை பயன்படுத்திக்கிட்டாங்க பா...''மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளிடம், 'கருணாநிதி பிறந்த நாள் விழா கூட்டங்களுக்கு ஏற்பாடு பண்ணுங்க... நான் கலந்துக்குறேன்'னு தகவல் குடுத்திருக்காங்க... இனிமே, மாவட்ட வாரியா போய், ஆதரவாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க போறாங்களாம் பா...'' என்றார் அன்வர்பாய்.''எம்.எல்.ஏ.,வை பகைச்சுக்கிட்ட அதிகாரியை, துாக்கி அடிச்சுட்டாங்க...'' என்றார் அந்தோணிசாமி.''எந்த தொகுதியில பா...'' என்றார் அன்வர்பாய்.''பெரம்பலுார், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன்... இவர், மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்துக்கு, சிலரை பரிந்துரை செஞ்சு, கடிதம் குடுத்திருந்தாருங்க...''மாவட்ட மகளிர் திட்ட இயக்குனரா இருந்த தேவநாதன், இதை ஏத்துக்கலை... இதனால, கோபமான, எம்.எல்.ஏ., போன மாசம், 21ம் தேதி, தேவநாதனை போன்ல கூப்பிட்டு, ஒருமையில கடுமையா திட்டுனாரு வே...''இது நடந்த ஒரே மாசத்துல, தேவநாதனை, இப்ப, சென்னையில இருக்குற தாட்கோ அலுவலகத்துக்கு மாத்திட்டாங்க... பின்னணியில, எம்.எல்.ஏ., கை இருக்குன்னு சொல்றாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.அனைவரும் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.

Advertisement