Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

சொல்கிறார்கள்

பதிவு செய்த நாள் : செப் 13, 2018
Advertisement
சொல்கிறார்கள்


உபாதைகள் குணமாக மனதின் பங்கு முக்கியம்!

கர்நாடக மாநிலம், பெங்களூரில், 'வியாசா ஆரோக்கியதாமா'வின் பொறுப்பாளராகவும், முக்கிய மருத்துவ அதிகாரியாகவும் விளங்கும், டாக்டர் நாகரத்னா: அளவுக்கு அதிகமான சிறப்புப் பிரிவுகளை, ஆங்கில மருத்துவ முறை உருவாக்கி விட்டது. கண், கை என்றெல்லாம், சிறப்பு மருத்துவர்கள் உருவாகி விட்டனர்.ஆனால், 90 சதவீத நோய்கள், வாழ்க்கை முறை மற்றும் பரவாத நோய்கள் தொடர்பானவை என்ற தகவலை, மருத்துவம் அங்கீகரித்திருக்கிறது. உடல் உபாதைகளை குணமாக்குவதில், மனதின் பங்கு மிக முக்கியம் என்ற கருத்தில், ஆங்கில மருத்துவ முறை கவனம் செலுத்துவதுஇல்லை. தியானம், யோகா போன்றவற்றால், மனதை ஒருமுகப்படுத்தி, அதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோயாளிகளை, இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முழுமையான அணுகுமுறையை, நாங்கள் மேற்கொள்கிறோம்.இனப்பெருக்க உறுப்புகள், மாதச் சுழற்சிகள், கருத்தரித்தல் போன்றவை, பெண்களுக்கு மட்டுமே உள்ள தன்மைகள். எனவே, வழக்கமான யோகாசனங்கள் தவிர, பெண்களுக்கென்றே சில பயிற்சிகளை அளிக்கிறோம். மற்றபடி முதுகுவலி, இதய நோய் போன்றவை, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமம் என்பதால், அவற்றுக்கான பயிற்சிகள் பொதுவாக அளிக்கிறோம்.புத்தகங்களை பார்த்து, சில வகை எளிமையான பயிற்சிகளை செய்வதில் தவறில்லை. இதனால், ஓரளவு சுவாசம், எளிதான சுளுக்கு சரியாகலாம். ஆனால், சில புத்தகங்களில், மிக அதிக நேரம் மூச்சை நிறுத்தும் பயிற்சி, அதிகமாக உடலை வளைத்து செய்யும் பயிற்சிகள் இடம் பெறுகின்றன. இவற்றை, சரியான பயிற்சி எடுத்து தான் செய்ய வேண்டும்; இல்லையெனில், விபரீதத்தில் முடியலாம்.நாங்கள் அளிக்கும் சிறப்பு பயிற்சிகளை, டி.வி.டி.,க்களாக வெளியிட்டுள்ளோம்; அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 'மொபைல் ஆப்'பும் அறிமுகப்படுத்தி உள்ளோம். ஒவ்வொரு பகுதி யிலும் சிறு சிறு குழுக்களாக அமைத்துக் கொண்டால், தொடர்ந்து யோகா செய்வது எளிதாகும். எல்லாவற்றையும் விட, அருகில் இருக்கும் ஏதாவது தரமான யோகா மையத்தில் சேர்ந்து பயிற்சியைத் தொடர்வது நல்லது.தொடர்புக்கு: 080 - 2263 9963/99

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X