சிறப்பு பகுதிகள் செய்தி

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பதிவு செய்த நாள் : நவ 23, 2017
Advertisement
  பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேச்சு: தான் இப்போது, குஜராத்திற்கு அடிக்கடி வந்து செல்வதாக, காங்., துணைத் தலைவர், ராகுல் கூறுகிறார். குஜராத்தை சுற்றுலாப் பகுதி என, அவர் நினைப்பதாகத் தோன்றுகிறது. குஜராத் சட்டசபை தேர்தல், பா.ஜ., - காங்., இடையிலான போட்டியல்ல; ஜாதியவாதம், குடும்ப அரசியல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையிலான போட்டி.

இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: ஊழல் பற்றி பேசிய நடிகர் கமலை மிரட்டும் வகையில், அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார். புதுக்கோட்டை சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பணம் வாங்கியது, அதிக விலை கொடுத்து மின் கணக்கீட்டு சாதனம் வாங்கியது தொடர்பான புகார் எல்லாம், என்ன வகையைச் சேர்ந்தது என, அமைச்சர் ஜெயகுமார் விளக்க வேண்டும்.

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: தொலைநோக்குத் திட்டத்தில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில், அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், ஐந்தரை ஆண்டுகளில் குறைந்தது, ௭.௫ லட்சம் கோடி ரூபாய் செலவழித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசின் சார்பில், ௨,௫௦௦ கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதி கூட, பயனுள்ள வகையில் செலவிடப்பட்டதாகத் தெரியவில்லை. தொலைநோக்குத் திட்ட இலக்குகளை எட்ட, தமிழக அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது; என்ன செய்யப் போகிறது என்பதை, வெள்ளை அறிக்கையாக, உடனே வெளியிட வேண்டும்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை:
தமிழகத்தில், புதிய பாடத்திட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்திற்கு, மாணவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அதேநேரத்தில், அதற்கேற்ற வகையில், ஆசிரியர்களின் தரமும் உயர்த்தப்பட வேண்டும்; அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளையும், தரத்தையும் உயர்த்த வேண்டும்.


'கோ - ஆப்டெக்ஸ்' ஊழியர்கள் சங்க மாநில தலைவர் பாரதி பேட்டி
: 'கோ - ஆப்டெக்'சில் அதிக சம்பளத்தில் பணியாற்றிய, 640 பேர், இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு, மாதந்தோறும் சம்பளமாக வழங்கி வந்த ஆறு கோடி ரூபாயில், தற்போது பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கினால் கூட, ஐந்து கோடி ரூபாய் மிச்சமாகும். அப்படி இருக்கையில் திடீரென, 'கோ - ஆப்டெக்ஸ்' நிர்வாகம், 7.80 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக, தணிக்கைத் துறையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அரசு முழு விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை