Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

சிறப்பு பகுதிகள் செய்தி

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பதிவு செய்த நாள் : செப் 13, 2018
Advertisement
பேச்சு, பேட்டி, அறிக்கை

'இதை ஏன், பிரசாரமாக செய்யக் கூடாது...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி பேச்சு: பெட்ரோலிய பொருட்களை கைவிட்டு, எத்தனால், மெத்தனால், பயோ எரிபொருள், சி.என்.ஜி., பயன்பாட்டுக்கு மாறினால், பெட்ரோல், டீசல் விலை குறையும். நம் நாட்டிலுள்ள விவசாயிகள், பழங்குடி மக்கள் போன்றோர் இவற்றை உற்பத்தி செய்தால், விமானங்களை இயக்கும் அளவுக்கு, பணக்காரர்கள் ஆகிவிடுவர். பயோ எரிபொருள் பயன்பாட்டின் மூலம், டீசல் லிட்டர், ௫௦க்கும், பெட்ரோல், ௫௫ ரூபாய்க்கும் விற்க முடியும்.தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை அறிக்கை: இந்திய பொருளாதாரம் வளர்ச்சி என, உலக வங்கி முதல், பன்னாட்டு நிதி ஆய்வறிக்கைகள் வரை சொல்லியும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், தவறான விபரம் என்கிறார். பொருளாதாரம் சீர்குலையவில்லையே என்ற ஏமாற்றமாக இருக்கலாம். பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங் காலத்தை விட, தற்போது பொருளாதாரம் நிலையாகவே உள்ளது.தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் அறிக்கை: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை, இமாலய உச்சத்திற்கு உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களே, விலையை நிர்ணயம் செய்யலாம் என்று கூறியதன் விளைவு தான், நாள்தோறும் விலை ஏறுவதற்கு காரணம். இந்த விலை உயர்வை திரும்ப பெறுவதற்கான முயற்சியில், மத்திய அரசு ஈடுபட வேண்டும். பொதுமக்களின் சுமையை அதிகரிக்காமல், அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும்.தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேட்டி: அரசு பள்ளிகளை மேம்படுத்த, மக்கள், தொழில் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் என, கோரப்பட்டது. உடனடியாக, தொழிலதிபர்கள் சார்பில், ௩ கோடி ரூபாய்க்கு மேல், நிதி கிடைத்துள்ளது. மாநில அளவில், அனைத்து அரசு பள்ளிகளிலும், வரும் தைப் பொங்கலுக்குள், துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, வெள்ளை அடிக்கப்படும்.தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் பேட்டி: குட்கா விவகாரத்தில், அமைச்சர் விஜய பாஸ்கரை, 'குற்றவாளி' என, முதல்வர் கூறினால், முதல்வரை குற்றவாளி என, அமைச்சர் கூறுவார். அதற்கு பயந்து, விஜயபாஸ்கரை குற்றம் சுமத்த, பழனிசாமி மறுக்கிறார். அதனால் தான், 'அவர் மீது குற்றம் மட்டுமே சுமத்தப்பட்டுள்ளது' என, தெரிவிக்கிறார்.

மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி பேட்டி: பெட்ரோல், டீசல் விலையை, லிட்டருக்கு தலா, 1 ரூபாய் குறைக்க, முடிவு செய்துள்ளோம். மத்திய அரசும், எரிபொருட்கள் மீது விதிக்கப்படும், 'செஸ்' வரியைக் குறைக்க வேண்டும். மேற்கு வங்க அரசு ஆண்டுதோறும், ௪௮ ஆயிரம் கோடி ரூபாய் கடனை, மத்திய அரசுக்கு திருப்பிச் செலுத்துகிறது. வேறு எந்த மாநிலமும், இதுபோல் செய்வதில்லை.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X