வாரம் ஒரு ப(ா)டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 டிச
2016
00:00

அப்பா... கிறிஸ்துமஸுக்கு என்னை வெளியே கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கீங்க; மறந்துடாதீங்க' என்பதை, டிசம்பரின் முதல் தேதி தொட்டு தினந்தோறும் நினைவுபடுத்தி கொண்டிருந்தாள் என் மகள். நான் கிராமத்தில் பள்ளி படிப்பை முடித்த பின், மேற்படிப்பு, ஐந்திலக்க சம்பளம் போன்றவற்றை குறிவைத்து, சென்னைக்கு இடம்பெயர்ந்து விட்டேன். கிராமங்கள் குறித்த பார்வையே இல்லாத மகளுக்கு, ஏதாவது கிராமத்தை காட்டலாம் என்ற எண்ணத்தில், கிறிஸ்துமஸ் நாளன்று அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.அன்று, 'இப்படியெல்லாம் ஊருங்க இருக்காப்பா' என்று மகள் வினவிய போது, எனக்கு கொஞ்சம் அவமானமாகவே இருந்தது! அந்த கிராமத்தின் ஆலமர நிழலில், சற்று இளைப்பாறினோம். அதன் நிழலை எங்களுடன் பங்கிடும் விதமாய், அந்நேரத்தில் ஒரு, 'பூம்பூம்' மாட்டுக்காரரும் வந்தார். அவரைக் கண்டதும், என் மகள் சிரிப்பை அடக்கியபடி, 'அப்பா...அந்த ஆளையும், மாட்டையும் பாருங்களேன்; எப்படி மேக்கப் போட்டிருக்காங்கன்னு' என்றாள். 'ஹேய்... அப்படியெல்லாம் சொல்லக் கூடாது; அவங்க பூச்சாண்டிங்க' சன்னமான குரலில் மகளை எச்சரித்தேன். 'அங்கிள்... எங்கப்பா சொல்றாரு; நீங்க பூச்சாண்டியாமே' என்று, அவரிடமே அதைச் சொல்ல, நான் விழி பிதுங்கினேன். ஆனால், அவர் அதை ஒரு பொருட்டாக கருதாமல், வெறுமனே சிரித்தார். அடுத்த சில நிமிடங்களில், அவருடனும், அந்த மாட்டுடனும் நட்பாகிப் போனாள் என் மகள். 'உங்க வீடெல்லாம் எங்கேயிருக்கு?' என்றவளிடம், 'நாங்கெல்லாம் நாடோடிங்கம்மா; எங்களுக்குன்னு சொந்தமா வீடு, வாசல் கிடையாது. ஒவ்வொரு கிராமமா போய்கிட்டே இருப்போம்' என்றார் அவர். 'இப்பதான் எல்லாரும் சிட்டிக்கு வந்துட்டாங்களே; கிராமத்துல யாரு இருக்கா?' என்று மகள் அவரிடம் கேட்டபோது, என்னுள் ஏதோ, 'சுருக்'கென்று குத்தியது.
'ஆமா... இப்பெல்லாம் கிராமத்துலேயே எங்களை இளக்காரமாத் தான் பார்க்குறாங்க. போன வாரம் ஒரு பையன் என்னைப் பார்த்து, 'இந்த மாட்டை புடிச்சுக்கிட்டு திரியுறதுக்கு பதிலா, பிச்சை எடுத்தாலாவது நல்ல வருமானம் வரும்'ன்னு கிண்டல் பண்றான். கிராமங்க எல்லாம் முன்ன மாதிரி இல்ல; அப்பன், ஆத்தாளை விட்டுட்டு, வேலையையே கட்டிப் புடிச்சிட்டு இருக்குதுக இளசுங்க! நாங்க தான், ஒரு கைப்பிடி மண் கூட சொந்தமா இல்லாத நாடோடி வாழ்க்கை வாழ்றோம்னா, சொந்த பந்தம், வீடு, காணி எல்லாம் இருந்தும், இந்த இளசுங்க அனாதையா வாழுதுங்க! எங்கே அலைஞ்சு திரிஞ்சாலும், ஒருகட்டத்துல, தன் சொந்த மண்ணுக்கு திரும்பி வந்திடணும். அதான், அவன் பிறப்புக்கு அழகு!' இதை சொல்லியபடி, தன் மாட்டை அவிழ்த்துக் கொண்டு அவன் நடையை கட்டினான். என் மகள் எதுவும் புரியாதவளாய் என்னைப் பார்த்தாள். நானோ, அந்த, 'பூம்பூம்' மாட்டுக்காரனையே பார்த்துக் கொண்டிருந்தேன். வீடு திரும்புகையில், 'நியூ இயர்க்கு எங்கப்பா போறோம்?' என்ற மகளிடம், 'நம்ம சொந்த ஊருக்கு' என்றேன். அப்போது, என்னையும் அறியாது என் கண்கள் ஈரமாயின! சொந்த ஊரையே மறக்க வைத்த வாழ்வியல் தந்த குற்றவுணர்வால், அக்கண்ணீர் கசிந்திருக்கக் கூடும்!

'மனிதத்தின் வேர் சுமக்கும் கிராமங்களுக்கு, அன்பெனும் நீர் வார்த்தால் தான் மனிதம் தழைக்கும்' என்பதைச் சொல்லும் தெலுங்கு படம்... ஒணமலு

அமெரிக்காவில் பேரன், பேத்திகளோடு வாழ்ந்தாலும், நாராயணராவ் தாத்தாவின் மனம், தான் பிறந்து வளர்ந்த கிராமத்தை சுற்றியே சுழல்கிறது. மகனின் எதிர்ப்பையும் மீறி, தன் கிராமத்திற்கு கிளம்புகிறார் தாத்தா. ஆண்டுகள் சில கடந்திருக்கும் நிலையில், அவர் வாழ்ந்த காலத்தைப் போல் அல்லாமல், வேறொன்றாக மாறியிருக்கிறது அவர் கிராமம். பெற்றோர்களை கைவிட்ட பிள்ளைகள், மக்களிடையே நிலவும் வேற்றுமை, நகர வாழ்வியலுக்கு தங்களை ஒப்புக் கொடுத்து விட்ட இளைஞர்கள் என, எல்லாமே தலைகீழாய் மாறியிருக்கிறது. தான் ஆசிரியராக இருந்த காலத்தில், தன்னிடம் பயின்ற மாணவர்கள் சிலரை சந்திக்கிறார் தாத்தா. அன்று, தான் போதித்த அறக்கல்வியை, அவர்கள் தம்முடைய வாழ்க்கையிலும் பின்பற்றி வருவதைக் கண்டு மகிழ்கிறார். ஆனால், ஏமாற்றுக்காரர்கள் பெரும்பான்மையாக வாழும் உலகில், அற வாழ்க்கையை வாழும் அவர் மாணாக்கர்களின் நிலை படுமோசமாக இருக்கிறது.
மனம் கொதிக்கும் தாத்தா, 'கிராமங்களில் தான் மனிதத்தின் வேர் உள்ளது; அதை நிராகரிப்பவரின் வாழ்வு அடையாளமற்றுப் போகும்' என்பதை, ஒரு போராட்டத்தின் வாயிலாக, தடம் புரண்ட தலைமுறைக்கு உணர்த்துகிறார். சுபம்!

Advertisement

 

‘வாரம் ஒரு ப(பா)டம்)’ பகுதி உங்களுக்கான டைரி. எழுதுங்கள்...உங்களின் அனுபவங்கள் மற்றவர்களுக்கு பாடம் ஆகட்டும். எங்கள் முகவரி...புதுப்பயணம், தினமலர், 39, ஒயிட்ஸ் ரோடு, சென்னை 600 014. pudhupayanam@dinamalar.in


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X