பெண்மை என் பெருமை
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

ஆச்சரியங்களால் நிரம்பித் ததும்புகிறார் விஜயசாந்தி!

வலதும் இடதுமாய் மாறிக் கிடக்கும் காலணிகளை, எந்த தடுமாற்றமும் இன்றி அடையாளம் கண்டு அவரால் அணிந்து கொள்ள முடிகிறது. எவர் மீதும் மோதிக் கொள்ளாமல், எவரிடமும் உதவி கேட்காமல், நெரிசல்மிகு சாலைகளில் அவரால் நடை போட முடிகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகிலுள்ள கொங்குராம்பட்டு அவரின் பூர்வீகம். தற்போதைய வாழ்விடத்தில் இருந்து, 200 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் தன் கிராமத்திற்கு தன்னந்தனியாய் அவரால் சென்றுவர முடிகிறது!
இவை எல்லாம் நமக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், மின்கம்பி விழுந்த விபத்தொன்றில், தன் 10 வயதில் பார்வையை தொலைத்த விஜய சாந்தி, நம்மைப் போலவே இதை சாதாரணமாகச் செய்து வருவது பெரும் ஆச்சரியம்.

மற்றுமொரு ஆச்சரியம்...
பார்வையற்றவர்களுக்கான ஜூடோ போட்டியில் காமன்வெல்த், பாரா ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவில் பல தங்கப் பதக்கங்களைவென்று, உலக அளவில் தமிழகத்தின் பெருமையை பேச வைத்திருக்கிறார் இந்த 24 வயது வீராங்கனை. 'பெண்களால் விளையாட்டுத் துறையிலும் சாதனைகள் நிகழ்த்த முடியும்' எனும் நிரூபிக்கப்பட்ட உண்மைக்கு தன் சாதனைகளால் இன்னும் வலு சேர்த்திருக்கிறார்.

பெண்/மாற்றுத்திறனாளி/வீராங்கனை - சமூகத்தின் பார்வையில் விஜயசாந்தி யார்?
பொதுபுத்தி சமூகத்துக்கு நான் எப்பவுமே பாவப்பட்ட மாற்றுத்திறனாளி தான். ஆனா, மாற்றுத்திறனாளிகள் மேல எதுக்காக இந்த சமூகம் பரிதாபப்படுதுன்னு தான் எனக்குத் தெரியலை. மத்தவங்களை விட தன்னம்பிக்கை எங்களுக்கு அதிகம். அந்த தன்னம்பிக்கை தான், பார்வை இல்லாத என்னை இந்த உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கு. என் குடும்பத்தோட பொருளாதார சிக்கல், என் முயற்சியை உதாசீனப்படுத்துற மனிதர்கள், கலங்கடிக்கிற தோல்விகள்னு, நிறைய தடைகளை மீறி நான் ஜெயிச்சிருக்கேன்.
அதனால, என் பெண்மைக்கு இருக்கிற இந்த தைரியத்தை இந்த சமூகம் மதிக்கணுமே தவிர பரிதாபமா பார்க்கக் கூடாது. இதுதான் என் எதிர்பார்ப்பு!
கூலி தொழிலாளிகளான அப்பா, அம்மா மற்றும் அண்ணனுடன் தன் சொந்த கிராமத்தில் வசித்து வந்த விஜயசாந்தி, தன் பள்ளி படிப்பின் போதே கராத்தே கற்றிருக்கிறார். அவரது கராத்தே பயிற்சியாளர் சிவாஜி, 'கராத்தேல எதிரி தாக்குறதை பார்த்து அதுக்கேத்த மாதிரி நாம செயல்படணும். ஜூடோவுல எதிரியை அரவணைச்சு அவங்களை வீழ்த்தணும். உனக்கு ஜூடோ பொருத்தமா இருக்கும்!' எனச் சொல்லி ஊக்கப்படுத்த, ஜூடோவை கற்றுத் தேர்ந்திருக்கிறார் விஜயசாந்தி.

விளையாட்டு தவிர்த்து உங்களின் அடையாளங்கள்?
குடும்பம் தான் எல்லாமேன்னு நினைக்கிற நல்ல பொண்ணு. சின்ன கஷ்டம் வந்தாலும் அம்மா மடியை தேடுற பாசமான பொண்ணு. பெண்ணா பிறக்க வைச்ச கடவுளுக்கு நாள் தவறாம நன்றி சொல்ற பண்பான பொண்ணு. வாழ்க்கை முழுக்க ஒரு வினாடி கூட அம்மா, அப்பாவை பிரிஞ்சிடக் கூடாதுன்னு நினைக்கிற அன்பான பொண்ணு. ஆனா, அதுக்கு இப்போ வாய்ப்பில்லாத பொண்ணு. ஆமா, என் கல்லுாரி படிப்பு தான் எங்களை பிரிச்சு வைச்சிடுச்சே! (சிரிக்கிறார்)
பி.ஏ., - பி.எட்., முடித்திருக்கும் விஜயசாந்தி, தற்போது சென்னை ராணி மேரி கல்லுாரியின் எம்.ஏ., மாணவி. கடந்த அக்டோபர் மாதம் வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூடோ போட்டியில் தங்கம் வென்றிருக்கும் இவர், வரும் 2018ல் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான போட்டிக்காக, பயிற்சியாளர் உமாசங்கரின் வழிகாட்டுதலோடு தன்னை தயார்படுத்தி வருகிறார். இதோடு, அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

விஜயசாந்தியின் விருப்பம்?
விளையாட்டுல நிறைய சாதிச்சு அரசு வேலை வாங்கணும். எனக்கு எல்லாமுமா இருக்குற என் அப்பா, அம்மாவை நல்லபடியா பார்த்துக்கணும். ஆனா, இது நடக்குமான்னு தெரியலை. ஏன்னா, கடந்த 2016ல தென்ஆப்ரிக்காவுல நடந்த காமன்வெல்த் போட்டியில நான் தங்க பதக்கம் ஜெயிச்சுட்டு வந்தேன்.
இன்னும் அதுக்கான பரிசுத்தொகை எனக்கு வந்து சேரலை. அதை வாங்கித் தந்து உதவுறதுக்கும் எனக்கு ஆள் இல்லை! வருந்துகிறார் விஜயசாந்தி. நம் மண்ணிற்கு பெருமை சேர்த்து வரும் அவரது மனக்கவலை நமக்குப் புரிகிறது. நம் அரசுக்கு புரிய வேண்டுமே!

விஜயசாந்தியின் புதுப்புது அர்த்தங்கள்
நேரம்: உயிருக்கு இணையான உருவமில்லா அற்புதம்!
பணம்: மனங்களை ஆட்டுவிக்கும் மந்திரசாவி!
வெற்றி: தோல்விகளில் கருவாகி உருவாகும் ஆச்சர்யம்!

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.