'அரசி'யல் மொழி!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2018
00:00

நாளுக்கொரு போராட்டம் என எந்நேரமும் அனல் தகிக்கும் துாத்துக்குடியில், கல்லுாரி மாணவியரிடையே ஓர் அரசியல் கலந்துரையாடல்.

இடம்: காமராஜர் கல்லுாரி, துாத்துக்குடி.

'மக்கள் நீதி மையம்' கட்சியின் பிளஸ் - மைனஸ் என்ன?
வழவழ கொழகொழன்னு பேசி குழப்பாதது, முழு நேரமும் எதிராளியை திட்டியே அரசியல் பண்ணாதது, பல்துறை ஆட்கள் உயர்மட்ட குழுவில் இருப்பது எல்லாம், ம.நீ.ம., கட்சிக்கு பிளஸ் மாதிரி தெரியுது. 'நம்மவர்'னு துதி பாடுறதை சந்தோஷமா அனுமதிக்கிறது, கொள்கை இதுதான்னு தெளிவில்லாம இருக்குறது, சினிமா பஞ்ச் வசனங்கள் பாணியில பேசுறது... இதெல்லாம், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவரின் மைனஸ் பாயின்ட்ஸ். மத்தபடி, இன்னும் போகப் போகத் தான் சாயம் வெளுக்கும்.
- த.உமா மாரீஸ்வரி, மூன்றாம் ஆண்டு கணிதம்.

கமலை நேரில் சந்தித்தது சீமானின் இமேஜுக்கு டேமேஜா?
கமலுக்கு இருக்குற, 'சினிமா பிரபலம்' அந்தஸ்து நாளைக்கு அவரை முதல்வராக்கிட்டா என்ன பண்றதுங்கிற முன்னெச்சரிக்கை உணர்வால, கமலை சீமான் சந்திச்சிருக்கணும். ஆயிரம் விளக்கங்கள் சீமான் தரப்புல இருந்து வந்தாலும், இந்த சந்திப்பு மூலமா அவருக்கான இமேஜ் கொஞ்சமா சரிஞ்சிருக்கிறது உண்மை. கடந்த சட்டசபை தேர்தல்ல, கருணாநிதியும் ஜெயலலிதாவும் களத்துல இருந்தும், தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 1.1 சதவீதம் ஓட்டு வாங்கி கெத்து காட்டுச்சு. அப்படிப்பட்ட சீமான் இந்த சந்திப்பை தவிர்த்திருக்கலாங்கிறது என் எண்ணம்.
- ரா.புவனேஸ்வரி, இரண்டாம் ஆண்டு வேதியியல்.

2019 பார்லிமென்ட் தேர்தல் பா.ஜ.,வுக்கு அக்னி பரிட்சையா?
அக்னி பரிட்சை தான். ஆனாலும், சமாளிச்சு வந்துடுவாங்கன்னு தோணுது. ஏன்னா, அவங்களை எதிர்க்க வலுவான போட்டியாளர்கள் இல்லை. உதாரணத்துக்கு, காங்கிரஸ் கட்சி பற்றி, எங்க தலைமுறையினர் கிட்டே பெருசா எந்த தாக்கமும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி சொல்லவே வேணாம்; அவங்க எல்லாம் எங்க அண்ணன், அக்கா காலத்துலேயே கரைஞ்சிட்டாங்க. ஆக, பா.ஜ., திரும்பவும் ஆட்சியைப் பிடிச்சதுன்னா, அதுக்கு ஒரே காரணம் இவங்க ரெண்டு பேரும் தான்! ஆனாலும், தமிழகத்துல தாமரை மலர்றது சந்தேகம் தான்!
- அ.சவுமியா, முதலாம் ஆண்டு வணிகவியல்.

சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது, ஜெ.,வின் சிலையாமே?
அப்படியா... ஆனா, சிலர் அதை சசிகலா சிலைன்னு சொல்றாங்க; சிலர், நடிகை காந்திமதி சிலைன்னு சொல்றாங்க; சிலர் முழுமை பெறாத ஜெ., சிலைன்னு சொல்றாங்க. இப்போ, சிலையில் மாற்றம் செய்யப்படும்னு கட்சி தலைமையே அறிவிச்சிருக்கிறதை பார்த்தா, அவங்களுக்கும் சந்தேகம் வந்திருக்கும் போல தெரியுது. ம்ஹும்... என்ன கொடுமைங்க இது!
- வெ.சரண்யா, முதலாம் ஆண்டு விலங்கியல்.

மச்சி நீ கேளேன்!
காகித பூ - இந்த வார்த்தை நினைவுபடுத்தும் நபர் - நிகழ்வு?

மாரீஸ்வரி: ஸ்டாலின் - 'இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும்'னு ஸ்டாலின் சொல்லிட்டே இருக்கிறது பெரிய சைஸ் காகித பூ!
புவனேஸ்வரி: ஓ.பி.எஸ்., - கட்சியிலேயும், ஆட்சியிலேயும் ஊட்டி ரோஜா மாதிரி இருந்தவர்; இப்போ...
சரண்யா: வைகோ - தேசிய அரசியல் வரைக்கும் அனுபவமுள்ள தலைவர்; மாநில அரசியல்ல மணக்க மாட்டேங்குறார்!

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X