ரவுத்திர வீணை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2018
00:00

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு...
இந்த வருஷம் எந்த இடையூறும் இல்லாம ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி, தமிழனோட பெருமையை தலை நிமிர வைச்சிட்டீங்க. ஆனா, போன வருஷமும் சரி, இப்பவும் சரி, ஜல்லிக்கட்டு போட்டியை என் பையனால முழுமையா பார்க்க முடியலை. இதுக்கு காரணம் யார் தெரியுமா... உங்க காவல் துறை!
கடந்த ஜனவரி 23, 2017 மதியம் 2:30 மணி இருக்கும்; கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் வழியா ஜல்லிக்கட்டு போராட்டக்காரங்க நிறைய பேரு, எங்க நடுக்குப்பம் கால்வாய் கரையோர குடிசைப் பகுதியில திமுதிமுன்னு நுழைஞ்சாங்க; அவங்களை துரத்தி வந்தது உங்க போலீஸ் படை.சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே எட்டிப் பார்த்த என் மகனை, தரதரன்னு வெளியே இழுத்துப் போட்டு லத்தியால நெற்றிப் பகுதியில ஓங்கி ஒரே அடி; இடது கண்ணுல பார்வை போயிடுச்சு. உங்க போலீசால வாழ்க்கையே இருண்டு போய் முடங்கி கிடக்குறான்யா என் புள்ள!
நீதியரசர் ராஜேஸ்வரனோட விசாரணை கமிஷன்ல ஆஜராகி, என் மகனுக்கு நடந்த கொடுமையைப் பத்தி விலாவாரியா சொன்னேன். நீதிகேட்டு உயர்நீதிமன்றத்துல வழக்குப் போட்டேன். ஆச்சு, ஒரு வருஷம்... இன்னும் விசாரணை கூட ஆரம்பிக்கலை!
அன்னைக்கு கலவரத்துல தீக்கிரையான மீன் மார்க்கெட்டை புதுப்பிச்சுக் கொடுத்துட்டீங்க! ஆனா, உங்க காக்கிகளோட கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பலியான என் புள்ளை பார்வைக்கு எப்படி வெளிச்சம் தரப் போறீங்க?
'ஆயிரம் குற்றவாளிகள் தப்பிச்சாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது'ங்கிற அறம் ஏழைகளுக்குப் பொருந்தாதா?

- கடந்த 2017ல் ஜல்லிக்கட்டு வேண்டி நடந்த மெரினா போராட்ட வன்முறையில், காவல் துறையினரின் தாக்குதலுக்கு தன் இடதுகண் பார்வையை பறிகொடுத்த, 16 வயது சிறுவன் கார்த்திக்கின் தாய் விமலா, சென்னை.

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.