பிரணயம் (மலையாளம்)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2018
00:00

கணவனுக்கு மனைவியா இருக்கிற நீங்க, என்னைக்காவது பக்தனுக்கான கடவுளா உங்களை உணர்ந்திருக்கீங்களா?
அன்னைக்கு மனம் முழுக்க பாரம். துவண்டு போய் இருந்தேன்.
'என்ன ஆச்சு கிரேஸ்?'
என் கணவர் மேத்யூஸ் கேட்டதும், கண்ணீரை என்னால கட்டுப்படுத்த முடியலை.
'இன்னைக்கு... நான் அச்சுதமேனனைப் பார்த்தேன்!' சொல்லிட்டு நான் தேம்ப ஆரம்பிச்சிட்டேன். மேத்யூஸ் ஒண்ணும் பேசலை. அவர்கிட்டே இருந்து ஒரே ஒரு பெருமூச்சு மட்டும்! வலக்கண் ஓரமா ஒரு சொட்டுக் கண்ணீர்; அது, அன்பின் ஈரம்!
என் தவிப்பை மேத்யூஸ் புரிஞ்சுக்கிட்டார்னு என்னால உணர முடிஞ்சது. அவர் மார்புல ஆறுதலா நான் சாய்ஞ்சேன். அவரோட கண்ணீர் தலையணையை நனைச்சது. 'நானும் அவரை பார்க்கணுமே!' - மேத்யூஸ் கேட்டார்.
மாலை நேரம். கடற்கரை ஓரம்.
பக்கவாதத்தால பாதிக்கப்பட்டிருக்கிற, 70 வயசு மேத்யூஸ் சக்கர நாற்காலியில இருக்க, அவருக்கு பின்னாடி நான். எங்களுக்கு முன்னால், 68 வயது அச்சுதமேனன்; என் முன்னாள் கணவர்!
'மேத்யூஸ்... நீங்க லக்கி!'
அச்சுதனோட இந்த வார்த்தைகளை கேட்டதும் அண்ணாந்து என்னைப் பார்த்தார் மேத்யூஸ். அந்த பார்வை முழுக்க அன்பு.
'கனவுகளை விட அழகானது வாழ்க்கை. வாழ கத்துக்கிட்டா அந்த அழகை அணு அணுவா ரசிக்கலாம்! என் கிரேஸ் எனக்கு வாழ கத்துக் கொடுத்திருக்கா!' தோள் மேல வைச்சிருந்த என் கைகளை அழுத்திப் பிடிச்சுட்டு மேத்யூஸ் இப்படிச் சொன்னதும், தன் கண்ணாடியை கழற்றி கண்களை துடைச்சுக்கிட்டார் அச்சுதன்.
மேத்யூஸ் விரல்களுக்குள்ளே நான் என்னை கடவுளா உணர்ந்தேன். என் பக்தனோட கண்கள்ல மீண்டும் அன்பின் ஈரம்!

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
09-மார்ச்-201809:00:47 IST Report Abuse
pollachipodiyan கட்டுன புருசனோட வாழத்தெரியாதவளுக்கு கடவுள் என்ன வாழுது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.