மின்னஞ்சல் முகவரி சோதனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஏப்
2012
00:00

எந்த மின்னஞ்சல் முகவரியையும், அது ஏற்கனவே உள்ளதா மற்றும் சரியான முகவரி தானா எனச் சோதனை செய்து பார்த்திடும் வாய்ப்பினை இணைய தளம் ஒன்று தருகிறது. ஏன் அடுத்தவரின் முகவரியை சரியானதுதானா என்று பார்த்திட வேண்டும்? என்ற வினா உங்களுக்குத் தோன்றலாம். நான் ஜிமெயிலில் முதலில் அக்கவுண்ட் திறக்க எண்ணுகையில் malar@gmail.com என்ற முகவரியைக் கேட்டேன். ஆனால் அது ஏற்கனவே ஒருவர் பயன்படுத்துகிறார் என்றும், அந்த முகவரி கிடைக்காது என்றும் தகவல் வந்தது. பின்னர் அதே பெயருடன் சில எண்களைச் சேர்த்து முகவரி அமைத்துக் கொண்டேன். உடனே, ஒரு ஆர்வத்தில் malar@gmail.com என்ற முகவரிக்கு ஓர் சோதனை அஞ்சல் அனுப்பினேன். இந்த முகவரி இல்லை என்றும், இது சரியானது அல்ல என்றும் செய்தி கிடைத்தது. அப்படியானால், முதலில் கூகுள் ஏன் இந்த முகவரி எனக்கு இல்லை என்று சொல்லியது. இது வேறு யாருக்கும் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளதா? இதனைப் பெற்றவர்கள் வெகுநாட்கள் பயன்படுத்தாமல், இதற்கான இன் பாக்ஸ் மூழ்கிவிட்டதா? தெரியவில்லை; ஏதாவது ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும் ஒரு மின்னஞ்சல் முகவரி சரியானதுதானா என்ற கேள்விக்கு விடை என்ன? சிலர் யாஹூ தளத்தில் மின்னஞ்சல் முகவரி இருப்பதாகக் கூறி தங்கள் யூசர் நேம் கூறி யாஹூவில் எனக் கூறுவார்கள். உடனே நாம் அவர்களின் யூசர் நேம் உடன் yahoo.com சேர்த்து மின்னஞ்சல் முகவரியாகப் பயன்படுத்துவோம். மெயில் திரும்ப அனுப்பப்படும். அவர்களின் மின்னஞ்சல் முகவரியில் அது yahoo.co.in ஆக இருக்கலாம்.
இந்தச் சூழ்நிலைகளில் எப்படி ஒரு மின்னஞ்சல் முகவரி சரிதானா என்று தெரிந்து கொள்வது. இதற்கான ஒரு தளம் இணையத்தில் இயங்குகிறது. இதன் முகவரி www.emailchecker.com. மின்னஞ்சல் முகவரி ஒன்று சரியானதுதானா, இயக்கத்தில் உள்ளதா எனத் தெரிய, இந்த தளம் சென்று, முகவரிக் கட்டத்தில்,மின்னஞ்சல் முகவரியினை டைப் செய்திடவும். பின்னர், அதன் அருகே உள்ள “verify” பட்டனை அழுத்தவும். சில நொடிகளிலேயே, முகவரியின் நிலை குறித்த முடிவு கிடைக்கும். அவை கீழ்க்காணும் முடிவுகளில் ஒன்றாக இருக்கும்.
1. சரியான முகவரி - அனைத்து சோதனைகளிலும் சரியானது என அறிவிக்கப்படுகிறது.
2. சரியல்ல-முகவரி இல்லை.
3. முகவரி சார்ந்த தளம் அனைத்து சோதனை வேண்டுகோள்களையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
4. நீக்கப்பட வேண்டிய முகவரியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
5.முகவரி சோதனையில் உள்ளது. 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் முயற்சிக்கவும்.
6. முகவரியினைச் சோதனைக்குட்படுத்த இயலவில்லை.
7. மற்ற காரணங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களில், கண்டறியப்பட்ட காரணம் பச்சை வண்ணத்தில் கட்டமிடப்பட்டுக் காட்டப்படும்.
ஒரு வேளையில் ஒரு மின்னஞ்சல் முகவரியினை இலவசமாக இந்தத் தளம் சோதனை செய்து முடிவுகளைத் தரும். மொத்தமாக பல முகவரிகளைச் சோதனைக்குள்ளாக்க வேண்டும் எனில், அதற்கெனத் தனியே கட்டணம் செலுத்த வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X