கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஏப்
2012
00:00

கேள்வி: என் சிஸ்டத்தில் உள்ள கண்ட்ரோல் பேனலை கிளாசிக் வியூவிற்கு மாற்ற என்ன செய்திட வேண்டும்? நான் விண்டோஸ் 7, 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன்.
- ஆ. ஜெயதேவ், சென்னை.
பதில்: இது பலரின் விருப்பமாகவும் உள்ளது. நாம் கண்ட்ரோல் பேனலில் உள்ள பிரிவுகளை அதன் ஐகான்களைக் கொண்டே கண்டறிந்து பயன்படுத்தி வந்துள்ளோம். எனவே தான் கிளாசிக் வியூவிற்கு மாற விரும்புகிறோம். புதிய முறையில் சில பிரிவுகளே உள்ளதால், நாம் தேடும் இயக்கம் எங்குள்ளது என்று அறிய சில நிமிடங்கள் ஆகலாம். சில நிலைகளைத் தாண்ட வேண்டியதிருக் கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில், பவர் செட்டிங்ஸ் பிரிவில் சில மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறேன். கண்ட்ரோல் பேனல் சென்று பார்க்கையில், நேரடியாக எனக்குப் பவர் செட்டிங்ஸ் கிடைப்பதில்லை. அது System and Security என்ற பிரிவில் உள்ளதைப் பின்னரே அறிகிறேன். வேறு எந்தப் பிரிவிலாவது தேடினால், பின்னர் மீண்டும் கன்ட்ரோல் பேனல் முதல் தோற்றத்திலிருந்து வர வேண்டியுள்ளது. இதற்கான ஒரு தீர்வு கண்ட்ரோல் பேனல் விண்டோவிலேயே உள்ளது. இந்த விண்டோவில் மேல்புறத்தில் வலது பக்கம் பார்த்தால், அங்கு “View by: Category” என இருப்பதைக் காணலாம். இன்னும் உற்றுக் கவனித்தால், இங்கு கீழ் நோக்கிய சிறிய அம்புக் குறி ஒன்றைக் காணலாம். இதனை அழுத்தவும். இதில் இரண்டு பிரிவுகள் , large icons மற்றும் small icons, இருக்கும். இதில் நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இனி கண்ட்ரோல் பேனல் தரும் அனைத்து வசதிகளும் அவற்றிற்கான ஐகான் படங்களுடன் காட்சி அளிக்கும்.

கேள்வி: மின்னஞ்சல் செயல்பாட்டில் எம்.டி.ஏ. என அழைக்கப்படுவது நம் மெயில்களை உருவாக்கி அனுப்ப உதவிடும் இமெயில் கிளையண்ட் புரோகிராமா? அல்லது வேறு சர்வர்களை இந்த சொல் குறிக்குதா?
- நா. மனோகரன், மதுரை.
பதில்: நல்ல கேள்வி. மின்னஞ்சல் பயன்பாட்டில், ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும் செயல்பாட்டில் பலவகையான சாதனங்களும் கட்டமைப்புகளும் பயன் படுத்தப்படுகின்றன. அவற்றில் இதுவும் ஒன்று. எம்.டி. ஏ. (MTA) என்பது Mail Transfer Agent என்பதன் சுருக்கம் ஆகும். நாம் நம்முடைய இமெயில் கடிதத்தைத் தயார் செய்து அதனை அனுப்புவதற்கு Send பட்டனை அழுத்தியவுடன் கடிதத்தை இதுதான் தன் வசம் எடுத்துக் கொள்கிறது. MTA என்பது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம் அல்லது சாப்ட்வேர் ஏஜண்ட். உங் களுடைய கம்ப்யூட்டரிலிருந்து இமெயில் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டருக்கு அனுப் பப்படுகையில் பல கம்ப்யூட்டர்களை, சர்வர்களை அது தங்கி தாண்டிச் செல்கிறது. இந்த பயணத்தை இந்த MTA தான் கவனித்துக் கொள்கிறது. இது Mail Submission Agent மற்றும் Mail User Agent என்ற வேறு இரண்டு சாதனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் தயார் செய்திடும் இமெயில்களை வகைப்படுத்தி அனுப்பு வது இதுதான். இமெயில்கள் வகைப் படுத்தப்பட்டவுடன் அவற்றிற்கு ஒரு ஹெடர் கொடுத்து Mail Delivery Agent (MDA)க்கு அனுப்புகிறது. இந்த இமெயில்கள் அனைத்தும் சரியாக உரிய கம்ப்யூட்டருக்குச் செல்கின்றனவா என்பதனை இந்த Mail Delivery Agent தான் பார்த்துக் கொள்கிறது.

கேள்வி: என்னைப் பற்றி ஒரு வெப்சைட்டில் தகவல்களைப் பதிந்தேன். அப்போது திரும்பத் திரும்ப CGI என ஒரு எர்ரர் மெசேஜ் வந்தது. தொடர முடியவில்லை. இந்த எர்ரர் மெசேஜ் எதனைக் குறிக்கிறது. எப்படி தொடர்ந்து தகவல்களைத் தரலாம்?
- ஏ.கே. சியாமளா, திருப்பூர்.
பதில்: இது நீங்கள் படிவத்தினை நிரப்புகையில் தந்த தகவல்களில் ஏற்பட்டுள்ள பிழையினால் கிடைக்கும் செய்தி. நீங்கள் தந்த தகவலை, அந்த தளத் தினால் கையாள இயலவில்லை. இணைய தளத்தில் நீங்கள் ஏதேனும் ஒரு படிவத்தில் உங்களைப் பற்றிய தகவல்களை அளித்திருக்கலாம். ஆனால் வெப் சைட்டால் அந்த தகவல்கள் சரியான முறையில் கையாள இயலவில்லை. இதனை தொழில் நுட்ப ரீதியில் CGI error என அழைப்பார்கள். தகவல்களை வாங்குவதற்கான கட்டமைப்பில் நீங்கள் தரும் தகவல் பார்மட் இணைய முடியவில்லை. எனவே சரியான வகையில் மீண்டும் முயற்சிக்கவும்.

கேள்வி: டாஸ்க் மேனேஜர் விண்டோவில், பெர்பார்மன்ஸ் என்பதில் சில சார்ட் மற்றும் பல தகவல்கள் காட்டப்படுகின்றன. இவற்றைக் கிளிக் செய்து பார்க்கலாமா? கம்ப்யூட்டர் செயல்படுவது தடைபடுமா? இதில் காட்டப்படுபவற்றால் என்ன பயன்?
- அழ. செல்லப்பன், பள்ளத்தூர்.
பதில்: நம் கம்ப்யூட்டரில் என்ன என்ன பைல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, அவை எந்த அளவில் நம் கம்ப்யூட்டர் திறனைப் பயன்படுத்திக் கொண்டிருக் கின்றன என்ற தகவல்களை டாஸ்க் மேனேஜர் அறிவிக்கிறது. இதன் மூலம் புரோகிராம்களின் செயல்பாட்டினை நிறுத்த வும் செய்திடலாம். இனி உங்கள் கேள்வி க்கு வருவோம். பெர்பார்மன்ஸ் என்ற பிரிவில் கம்ப்யூட்டர் இயக்கத்தின் பல்வேறு தன்மைகள் காட்டப்படுகின்றன.
1. மேலாக, சிபியு பயன்பாட்டினைக் காட்டும் மீட்டர் ஒன்று இயங்கியவாறு இருக்கும். அருகிலேயே CPU usage history line கிராப் ஒன்று காட்டப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வரைபட வரிகள் இருப்பின், அது சிபியுவின் பல செயல்பாடுகளைக் காட்டும்.
2. சிபியு பயன்பாடு மீட்டர் மற்றும் சிபியு பயன்பாடு லைன் கிராப் கீழாக, அதே போன்ற மெமரி பயன்பாட்டிற்கான அளவீடுகள் காட்டப்படும்.
3. இன்னும் கீழாகப் பார்த்தால், கம்ப்யூட்டர் இயக்கிக் கொண்டிருக்கும் பைல்கள் மற்றும் மெமரி பயன்பாடு ஆகியவை காட்டப்படும்.
இவற்றைக் கிளிக் செய்து பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டினை வியூ மெனு மூலம் முழுத் திரையில் பெற்று பயன்படுத்தினேன். மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல இயலவில்லை. எந்த கீயை அழுத்த வேண்டும் எனத் தெரியவில்லை, மெனு இருக்கும் இடமும் கிடைக்கவில்லை.
- ஆ. கற்பக மூர்த்தி, விழுப்புரம்.
பதில்: என்ன! திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி இருக்கிறீர்களா! கவலைப் பட வேண்டாம். எஸ்கேப் கீயை அழுத்துங் கள். மீண்டும் பழைய தோற்றத்தில் ஒர்க்ஷீட் கிடைக்கும். ஆபீஸ் 2007 பயன் படுத்துபவராக இருந்தால், ரிப்பன் தரும் வியூ டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Workbook Views குரூப்பில் இருந்து Full Screen என்பதனைக் கிளிக் செய்தும் முழுத்திரை கிடைக்கும் பின்னர் அதே பிரிவில் ணிணண்ஞிணூஞுஞுண பட்டனை அழுத்தவும். இதனால் வழக்கமான தோற்றம் கிடைக்கும்.

கேள்வி: அடிக்கடி ஓய்வு கொடுத்து கீ போர்டு மற்றும் மவுஸ் இயக்கிய பின்னரும், வலது கை மணிக்கட்டில் வலி வருகிறது. இது இப்போது ஜாஸ்தியாக உள்ளது. என்ன செய்தால் இந்த வலி மீண்டும் வராது? இடது கை பழக்கத்திற்கு மாறிக் கொள்ளலாமா என்று யோசிக்கும் அளவிற்கு வலி உள்ளது. தயவு செய்து முறையான வழி காட்டவும். என் வயது 43.
- தி. சுப்புராஜ். மதுரை.
பதில்: தங்களுக்கு ஏற்பட்டிருப்பது தொடக்க நிலை தான். கவலைப்படாதீர்கள். மருத்துவரைப் பார்க்கவும். மருந்து சாப்பிட வும். தொடர்ந்து எப்படி பயன்படுத்த வேண்டும் என இங்கு விளக்கமாகக் கூறுகிறேன்.
1.மவுஸ் பிடித்திருக்கையில் அதனை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மிக மெதுவாகப் பட்டும் படாமல் நம் கரத்தினை அதன் மீது வைத்து இயக்கவும்.
2.மவுஸ் இயக்கப்படுகையில் உங்களு டைய மணிக்கட்டு தசை அதிகம் இயங்கக் கூடாது. முழங்கை தசைதான் அதனை இயக்கும் செயல்பாட்டின் மையமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மணிக்கட்டினை நேராகவும் நடுவாகவும் வைக்கவும்.
3. உங்களுடைய நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கரங் களைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் மவுஸ் பிடிக்கும் உங்கள் கரத்தை, பெரும்பாலும் வலது கரம், சற்றுத் தூக்குங்கள். உங்கள் கை முழங்கைக்குச் சற்று மேலாக இருக்கும் வகையில் தூக்குங்கள். மவுஸை கீ போர்டு இருக்கும் இடத்திற்கும் அருகே அதே தளத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். கீ போர்டுக்கு 1 அல்லது 2 அங்குலம் மேலாக இருக்கும்படி மவுஸ் இடம் பெற வேண்டும். இந்த மவுஸ் அமரும் இடம் சற்றுக் கீழாக சரிவாக இருக்கும்படியாகவும் அமைக் கலாம்.
4. நீங்கள் மணிக்கட்டின் அமைப்பைச் சற்று சிரத்தையுடன் கவனித்தால் ஒன்று புரியும். இது இயற்கையாகவே சற்று வளைந்த நிலையில் உள்ளது. தட்டையான ஒரு தளத்தில் மணிக்கட்டை வைத்துப் பாருங்கள். வளைவான மணிக்கட்டின் கீழாக ஒரு சிறிய பேனாவினை நுழைத்து எடுக்கும் அளவிற்கு, அது வளைவாக இருக்கும். இதனுடன் எந்த தள அழுத்தமும் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் முன் கரம் மணிக்கட்டுடன் அமைக்கப் பட்டுள்ளது. எனவே மவுஸ் பயன்படுத்து வதற்காக மணிக்கட்டினைத் தளத்தோடு அழுத்துவது இயற்கைக்கு முரணானது.
5. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மணிக்கட்டின் தோலுக்குச் சற்று அடி யிலேயே ரத்த நாளங்கள் செல்லும். அதனால் தான் நாடித் துடிப்பினை இங்கு பார்க்கிறோம். எனவே இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால் அது ரத்த ஓட்டத்தில் சிறிதளவேனும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் இங்கு காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
6. ஒரு சிலர் மணிக்கட்டுப் பகுதிக்கென தனியே ஒரு சப்போர்ட் அமைத்து இயக்கு வார்கள். கைக்குட்டையைக் கூட மடித்து வைத்துப் பயன்படுத்துவார்கள். இது கூடவே கூடாது. இது பிரச்சினையை மேலும் பெரிதாக உருவாக்கும். அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொண்டு மேலே கூறியபடி கரங்களை வைத்து செயல்படவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
izzath hussain - மலே,மாலத்தீவு
21-ஏப்-201223:40:48 IST Report Abuse
izzath hussain dear sir:- my name is izzath hussain. i am from மல்டிவேஸ். and my problem is, when i to computer my 16 GB pen drive, the computer only shown (removable disc f:) and i cant ஓபன் தி மி பெண் டிரைவ்,அண்ட் ஹொவ் இட் ஓபன் சார்? அண்ட் ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்..........
Rate this:
Share this comment
Cancel
த.சந்திரமோகன் - chennai,இந்தியா
21-ஏப்-201215:33:15 IST Report Abuse
த.சந்திரமோகன் நான் விண்டோஸ் xp பயன்படுத்துகிறேன்.எனது கம்ப்யூட்டர் ஸ்டார்டில் சென்று log off அல்லது restart மற்றும் turn off செய்தால் எதுவுமே ஆகவில்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
கஜ gaja - chennai,இந்தியா
19-ஏப்-201213:28:53 IST Report Abuse
கஜ gaja நோ ப்ரோப்லேம் த chellam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X