என்.எப்.சி. என்னும் உரித்த வாழைப்பழம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
00:00

நியர் பீல்ட் கம்யூனிகேஷன் (Near Field Communication) என்ற அண்மைத் தளத் தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. வயர் இணைப்பு இன்றி சாதனங்களைப் பயன்படுத்துவது அனைத்து வகைப் பயன்பாட்டிலும் பெருகி வருவதால், இந்த தொழில் நுட்பம் இப்போது ஓர் அடிப்படைத் தேவையாக உருவாகி வருகிறது. இதன் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய அன்றாட பணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கையிலிருக்கும் மொபைல் போனில் ஒரு கீயைத் தட்டி நாம் வாங்கும் பொருளுக்கு பணத்தைச் செலுத்தலாம் என்றால், அது தானே அதிக பட்ச பாதுகாப்பாகும் என்று அனைவரும் இதனை விரும்புகின்றனர். ஆம், இந்த விஷயத்தின் சில அம்சங்களை நாம் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
1. மலிவும் எளிமையும்: அண்மைத் தளத் தகவல் பரிமாற்றம் தொழில் நுட்பம் மூலம், குறுகிய எல்லையில், வயர் இணைப்பு எதுமின்றி, ஒரு ஸ்மார்ட் போனும், இந்த தகவலைப் பெறக் கூடிய சாதனமும் இணைந்து டேட்டாவினைப் பரிமாறிக் கொள்ளலாம். எனவே, இதன் மிகப் பெரிய சாதனை, மொபைல் சாதனங்கள் வழி பணப் பரிமாற்றமே. இது வசதியாக இருப்பது மட்டுமின்றி, பணப்பரிமாற்றத்திற்கான செலவினையும் குறைக்கிறது. எனவேதான், பயனாளர்களும், நிறுவனங்களும் இதனை நடைமுறைக்குக் கொண்டு வர ஆவலுட னும், ஆர்வத்துடனும் உள்ளனர். பல்வேறு தொழில் பிரிவுகளில் இயங்கும் நிறுவனங்கள் இதில் அக்கறை செலுத்தி, இதற்கு முழுமையாக மாறும் காலத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
2. மாறுதல் கட்டாயமாகும்: ஸ்மார்ட் போன்களில் அடுத்து நாம் அமல்படுத்த இருப்பது இந்த தொழில் நுட்பம் தான். இப்போதே சில நிறுவனங்கள், இந்த வசதியுடனேயே தங்கள் ஸ்மார்ட் போன்களை வடிவமைத்து வழங்கி வருகின்றன. எனவே இந்த தொழில் நுட்ப மாற்றம் காலத்தின் கட்டாயமாக மாறி வருகிறது. ஆனால், பரவலாக இது பயன் படுத்தப்பட வேண்டும் எனில், அனைத்து சேவை நிறுவனங்களும் இதனைப் பயன் படுத்த முன்வர வேண்டும். பில்களை எழுதி, அதனைக் கிழித்து, பணம் செலுத்தி, மீண்டும் அதனைக் காட்டிப் பொருள் வாங்கியது ஒரு காலம்; கம்ப்யூட்டர் வழியே தயாராக உள்ள பொருட்கள் பட்டியலில் இருந்து பில் தயாரித்தும், பொருட்களின் பார் கோடினை சாதனத்தில் காட்டி பில் தயாரித்து பணம் செலுத்தி பொருட்கள் வாங்கியது அடுத்த கட்டம். பணம் எதுவும் செலுத்தாமல், பண அட்டை களைச் சாதனத்தில் தேய்த்து பொருட்கள் வாங்குவது இந்தக் காலம். வீட்டில் இருந்த படியே, பொருட்களை ஆர்டர் செய்து, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மாற்றி, டோர் டெலிவரி பெறுவதும் இப்போது வழக்கமாகி வருகிறது. அடுத்த கட்டமாக, இந்த அண்மைத் தள டேட்டா பரிமாற்ற சாதனங்கள் வர உள்ளன. பொருட்களை வாங்கிய பின்னர், நம் மொபைல் போன் அக்கவுண்ட்டில் உள்ள பணத்தைச் செலுத்த, கடைகளில் உள்ள கேஷ் கவுண்ட்டரில் போனை அசைத்து பட்டனை அழுத்தினால் போதும். பணம் கடைக்காரரின் அக்கவுண்ட்டிற்குச் சென்று விடும். இதில் பாதுகாப்பு, எளிமை, வேகம் என அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. எனவே, நிச்சயம் இதற்கு நாம் மாறப் போகிறோம். இதனை வழிப்படுத்த அனைத்து ஸ்மார்ட் போன் மற்றும் பிற போன்களில் இந்த வசதி தரப்பட வேண்டும். இதுவரை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இந்த தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஐபோன் 5ல் இது வர இருப்பதாகச் சில தகவல்கள் தெரிவித்துள்ளன. பிளாக் பெரி வழங்கும் ஆர்.ஐ.எம். மற்றும் சாம்சங் நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தை ஏற்கனவே தன் வசம் பயன்படுத்தி வருகிறது.
3. வணிக நிறுவனங்களுக்க இது உரித்த வாழைப்பழம்: வணிக நிறுவனங்கள், கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் மற்றும் மொபைல் போன் விற்பவர்கள் ஆகியோர், இந்த வகைப்பரிமாற்றத்தில் பில்லிங் செய்வது யார் பொறுப்பு? என்று கேட்கத் தொடங்கி உள்ளனர். இவர்கள் ஒன்று கூடி இதற்கு ஒரு முடிவெடுத்து பிரச்னையைத் தீர்த்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால், வணிக நிறுவனங்களுக்கு இதைப் போல மிக எளிதான, வேகமான பணம் பெறும் வேறு ஒரு வழி கிடைக்காது. கொள்கை அளவில் தான் இந்தப் பிரச்னை உள்ளது. மற்றபடி முடிவெடுத்துவிட்டால், தொழில் நுட்ப அமலாக்கம் என்பது மிக வேகமாக அமைந்துவிடும். உரித்த வாழைப்பழம் கிடைக்கிறது என்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள்.
4. முந்திக் கொண்ட மேற்கு நாடுகள்: அண்மைத் தளத்தகவல் பரிமாற்ற வசதியை, அமெரிக்காவைக் காட்டிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் முந்திக் கொண்டு பயன்படுத்தி வருகின்றன. எடுத்துக் காட்டாக, ஜப்பானில் பெலிகா (FeliCa) என்னும் பெயரில், சிறிது மாற்றத்துடன் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், போனைப் பயன்படுத்திப் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். அதாவது, பொருட்களை வாங்கிய பின்னர், போனை அசைத்து பில்லுக்குப் பணம் செலுத்த ஏற்றுக் கொள்ளலாம். பொருட்களுக்கான பணம், போன் பில்லில் சேர்க்கப்படும். போன் பில்லுடன் அதனைச் செலுத்திய பின்னர், பணம் கடைக்காரர் அக்கவுண்ட் எண்ணில் செலுத்தப்படும். இந்த தொழில் நுட்பம் ஜப்பானில் சக்கை போடு போடுகிறது. இதற்குக் காரணம், இந்த வகையில் பணம் செலுத்துவோருக்கு பொருட்களின் விலையில் டிஸ்கவுண்ட் வழங்கப் படுகிறது.
5. பாதுகாப்பு வழிமுறைகள்: இந்த தொழில் நுட்பம் சீராக அனைத்து மொபைல் போன்களிலும் வரும் போது, இதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் மிக நேர்த்தியாக, மீற முடியாத வகையில் அமைத்துவிடலாம் என்று சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்களும், நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X