லேப்டாப் இப்போது வாங்கலாமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
00:00

விண்டோஸ் 8 மற்றும் இன்டெல் நிறுவனத்தின் அடுத்த கட்ட சி.பி.யு சிப்கள் Ivy Bridge ப்ராசசர்களுடன் வெளியாக இருப்பதால், லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்க விரும்புபவர்கள், இப்போது கிடைக்கும் கம்ப்யூட்டர்களை வாங்கலாமா? அல்லது பொறுத்திருந்து வரும் அக்டோபர் மாதத்தில் இவை இரண்டும் அல்லது ஒன்றாவது விற்பனைக்கு வரும்போது வாங்கிக் கொள்ளலாமா? என்ற பரிதவிப்பில் இருக்கின்றனர். ஒரு சிலர், இது போல அறிவிப்புகளை நம்பி நம் தேவைகளை ஒத்தி போட வேண்டியது இல்லை. மேலும், இப்போது வாங்கிக் கொண்டாலும், அதனால் பெரிய தொழில் நுட்ப வசதி இழப்பு பெரிய அளவில் இருக்காது; நம் தேவைகளுக்கான சாதனங்களை தேவைப்படும்போது வாங்கிப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம் என்று எண்ணுகின்றனர்.
ஆனால், ஒரு சிலர், காத்திருந்து வாங்குவதே சிறந்தது என்று கூறி வருகின்றனர். விண்டோஸ் 8 மற்றும் இன்டெல் ஐவி பிரிட்ஜ் ப்ராசசர் மட்டுமின்றி, என்விடியா நிறுவனமும் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கான புதிய கிராபிக்ஸ் கட்டமைப்பினை உருவாக்கி வெளியிட உள்ளது. எனவே காத்திருப்பதே நல்லது என்று இவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இப்போது வாங்கும் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 அப்கிரேட் செய்து கொள்ளலாம் என்றாலும், ஹார்ட்வேர் மாற்றத்தை மேற்கொள்ள முடியாது. புதிய சிபியு சிப்களை எப்படி இணைப்பது இயலாது என்றும் கூறுகின்ற னர். வரும் ஆகஸ்ட், செப்டம்பரில் பழைய கம்ப்யூட்டராகப்போகும் ஒன்றை இப்போது வாங்குவது சரியா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
தகவல் தொழில் நுட்ப உலகம் வர இருக்கும் புதிய தொழில் நுட்பம் மற்றும் கூடுதல் வசதிகள் (அதிகப் பணத்தை செலவு செய்திட வைக்கும்) குறித்து அறிவிப்பு வழங்கி, நம்மை செயல்பட விடாமல் நிறுத்தி வைக்கின்றனர். ஆனால், இது பெரும்பாலும், நாம் உடனே வாங்கும் சாதனம் அதிகம் பயன்படுத்திய பின்னரே கிடைக்கும். அது மட்டுமின்றி, பலருக்குத் தேவைப்படாத வசதிகள் தான் புதியதாகக் கிடைக்கும். எனவே நம் தேவைக்கேற்ப, அப்போது இருப்பதனை வாங்கிப் பயன் படுத்தத் தொடங்குவதே புத்திசாலித்தனம் என்று கூறுவோரும் உள்ளனர். அப்படி வாங்கும்போது, அடுத்து வர இருப்பதற்கு அப்டேட் செய்திடும் வசதி கொண்ட சாதனத்தைத் தேர்ந்தெடுப்பது நம் சாமர்த்தியம் என்கின்றனர் இன்னொரு சாரார். அப்படி என்ன புதிய சாதனங்கள் நம் வேலைப் பளுவினைக் குறைக்கப் போகின்றன. இன்னும் எத்தனை பேர் விண்டோஸ் எக்ஸ்பி போல இன்னொரு சிஸ்டம் வரப் போவதில்லை என்று சொல்லி கடந்த பத்து ஆண்டுகளாக அதனையே இன்னும் பயன்படுத்தி வருகின்றனர் என்று இவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். குறிப்பாக, ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் செய்திட முடியும் என்றாலும், அதனை மேற்கொள்ளாதவர்கள் அதிகம் இருக்கையில், என்றோ வரப்போகும் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்காக ஏன் காத்திருக்க வேண்டும் என்ற வாதமும் நியாயமானதே.
லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் பொறுத்த வரை, இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டர்கள் நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் கூடுதலான திறனைக் கொண்டே அமைக் கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு வாங்கிய லேப்டாப் கம்ப்யூட்டர்கள், இன்றைக்கும் புதிய வசதிகள் கொண்டதாக, நவீனமாகவே கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே புதிய விண்டோஸ் 8 மற்றும் ஹார்ட்வேர் கட்டமைப்பு வந்தாலும், பொறுத்திருந்து ஓராண்டு கழித்து வாங்குவது கூடத் தவறில்லை என்றே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
நம் வேலைக்கு, நம் பணிப்பாங்கிற்கு ஏற்ற லேப்டாப் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே இதற்கான வழி என்று அமைதிப்படுபவர்களும் இருக்கின்றனர்.
வாசகர்களே! உங்கள் கருத்து என்ன!!

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
priyanga - Dharapurm,இந்தியா
24-ஏப்-201211:15:21 IST Report Abuse
priyanga we do not know the drawbacks of new os so better we will wait
Rate this:
Share this comment
Cancel
rajesh kumar - madurai,இந்தியா
23-ஏப்-201219:56:08 IST Report Abuse
rajesh kumar thank u for the valube informatiom
Rate this:
Share this comment
Cancel
மூர்த்தி - Coimbatore,இந்தியா
23-ஏப்-201215:07:53 IST Report Abuse
மூர்த்தி கம்ப்யூட்டர் வேணும்னா காசுக்கேத்த மாதிரி ஒன்ன வங்கி யூஸ் பண்ண ஆரம்பிக்க வேண்டியதுதானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X