ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் ட்ரோஜன் வைரஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
00:00

ரஷ்யா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மேக் ஓ.எஸ். இயங்கும் ஆறு லட்சம் கம்ப்யூட்டர்கள் பிளாஷ் பேக் ட்ரோஜன் என்னும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் மிக மோசமான பாட்நெட் வைரஸின் மேக் அவதாரமாக உள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் இதற்கான பேட்ச் பைலை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் இந்த வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து பெருகி வந்தது. Flashback Trojan என்று அழைக்கப்படுகிற இந்த வைரஸ் புரோகிராம், தான் நுழைந்த கம்ப்யூட்டரிலிருந்து, பிரபலமான இணைய தளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடுகிறது. பாதித்த கம்ப்யூட்டரின் அனைத்து நெட்வொர்க் பணிகளையும் கண்காணித்து இந்த திருட்டு வேலையை மேற்கொள்கிறது. ரஷ்யாவில் இயங்கும் டாக்டர் வெப் என்னும் ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் முதலில் இதனைக் கண்டறிந்த போது, பாதித்த கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தினைத் தாண்டி இருந்தது. அந்நிறுவனம் இதனை Mac botnet என அழைத்தது. இந்த அழைப்பு வந்த பின்னரே தங்களின் நாடுகளில் இயங்கும் மேக் கம்ப்யூட்டர்களிலும் இவை காணப்படுவதாக மேலே குறிப்பிட்ட நாடுகளில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் அறிவித்தன.
பிளாஷ்பேக் (Flashback) என்னும் இந்த வைரஸ், 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரவத் தொடங்கியது. முதலில் அடோப் பிளாஷ் பிளேயரின் அப்டேட் பைல் போல வேடமிட்டு இணைய தளங்களை இது அணுகும். பின்னர் அவ்வப்போது புதிதாகக் காணப்படும் வைரஸ்களுக்கு ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்படும் புரோகிராம்களை செயலிழக்கச் செய்திடும். இதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதற்கு எளிதாக வழி கிடைக்கும். இந்த வைரஸ் பாதித்த இணைய தளம் ஒன்றினை அணுகியவுடன், கம்ப்யூட்டரில் உள்ள ஜாவா இயக்கத்தில் உள்ள பிழையைப் பயன்படுத்தி மிக எளிதாக தளத்தை அணுகும் கம்ப்யூட்டரில் சென்று அமர்கிறது.
இதே வைரஸ் புரோகிராமின் இன்னொரு பதிப்பு, சென்றடைந்த கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டர் சலுகைகளைக் கேட்டு வாங்கும். இது பரவுவதற்கு அவை தேவை இல்லை என்றாலும், அவற்றைக் கேட்டுப் பெறும். அவற்றைக் கொடுத்தவுடன், கம்ப்யூட்டரில் உள்ள அப்ளிகேஷன் போல்டரைச் சென்றடைந்து பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசர்களில் அமர்ந்து கொள்ளும். இவற்றில் எதனைப் பயன்படுத்த தொடங்கினாலும் உடனே நெட்வொர்க்கில் உள்ள மற்ற தளங்களுக்கும் பரவும். அட்மினிஸ்ட் ரேட்டர் குறித்த தகவல்களையும் அனுமதியையும் தரவில்லை என்றால், யூசர் அக்கவுண்ட்ஸ் போல்டரில் சென்று அமர்ந்து கொள்ளும். அதன் பின் எந்த அப்ளிகேஷனை இயக்கினாலும், அதன் இயக்கத்திலும் சென்று அமர்ந்து கொண்டு தனக்கு வேண்டிய தகவல்களைத் திருடி அனுப்பும்.
இந்தியாவில் இது பரவவில்லை என்றாலும், கண்டறியப்படாத நிலையில் இருக்க வாய்ப்புண்டு. மேக் சிஸ்டம் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும்.
ஆப்பிள் நிறுவனம் இதற்கென Java for Mac OS X 10.6 Update 7 என்ற பேட்ச் பைலை வெளியிட்டுள்ளது. இது பாதுகாப்பினைப் பலவீனப்படுத்திய குறியீடுகளைச் சரி செய்து அமைக்கப்பட்ட ஜாவா பதிப்பாகும். இதனை http://support.apple.com/kb/DL1516 என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். Java for OS X Lion 2012001 என்ற பேட்ச் பைலும் இதனுடன் இணைந்து தரப்படுகிறது. இதனை http://support.apple.com/ kb/DL1515 என்ற முகவரியில் பெறலாம்.
விண்டோஸ் இயக்கங்களில் மட்டுமே பரவும்படி வைரஸ் புரோகிராம்கள் எழுதப்படுகின்றன என்ற கூற்றினைப் பெரிய அளவில் இந்த பிளாஷ் பேக் பாட்நெட் வைரஸ்கள் உடைத்துள்ளன. மேக் கம்ப்யூட்டர் இயக்குபவர்களும் கவனத் துடன் இருந்து, வைரஸ் எதிர்ப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X