நெட்டு வரிசை மறைத்துக் காட்ட
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
00:00

எக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை களை மிக எளிதாக மறைத்துப் பின்னர் தேவைப்படுகையில் மீண்டும் கொண்டு வரவும் செய்திட லாம். ஒருமுறை ஒரு நெட்டு வரிசை மறைக்கப்பட்டு விட்டால், அது காட்டப்பட மாட்டாது; அச்சடிக்கையிலும் அது அச்சடிக்கப்படாது. இருப்பினும் அந்த நெட்டு வரிசை நீக்கப்படவில்லை; அதன் அகலம் "0' ஆக மாற்றப்படுகிறது. நெட்டு வரிசை ஒன்றை மறைக்க கீழ்க் காணும் குறிப்பு படி செயல்படவும்.

நீங்கள் எக்ஸெல் 2007 தொகுப்பினைப் பயன்படுத்துபவராக இருந்தால்
:
1. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட, நீங்கள் மறைக்க விரும்பும் நெட்டுவரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். 2. ரிப்பனில் ஹோம் டேப் காட்டப்பட வேண்டும். 3. அடுத்து Cells குரூப்பில் உள்ள Format டூலில் கிளிக் செய்திடவும். இங்கு எக்ஸெல் வரிசையாக சில ஆப்ஷன்களைக் காட்டும். 4. இதில் Hide & Unhide கிளிக் செய்து, பின்னர் Hide Columns கிளிக் செய்திடவும்.

நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 2007க்கு முந்தைய புரோகிராமாக இருந்தால்:

1.ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட, நீங்கள் மறைக்க விரும்பும் நெட்டுவரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். 2. Format மெனுவில் இருந்து Column என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இன்னொரு துணை மெனு காட்டப்படும். 3. இந்த மெனுவில் Hide என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
டிஸ்பிளேயிலிருந்து நெட்டு வரிசைகள் மறைக்கப்படும். இதில் இன்னொன்றை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு மறைக்கப்படுகையில், மற்ற நெட்டு வரிசைகள் மாறுவதில்லை. அதே இடத்தில் அதே வரிசை லேபிள்களுடன் காட்டப்படு கின்றன. ஆனால், இவ்வாறு மறைக்கப்பட்டதைக் காட்ட, வரிசைக்கான ஹெடர் ஏரியாவில் உள்ள பிரிக்கும் கோடு, சற்று கூடுதலான அழுத்தத்துடன் காட்டப்படும்.
பின்னர், உங்களுக்கு மறைக்கப்பட்ட இந்த நெட்டு வரிசைகள் தேவைப்பட்டால், எப்படி அவற்றை மீண்டும் காட்சிக்குக் கொண்டு வருவது என்று பார்க்கலாம். நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்களாக இருந்தால்,
1. மறைக்கப்பட்ட நெட்டு வரிசையின் இருபுறமும் உள்ள வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். 2. ரிப்பனில் ஹோம் டேப் தெரியட்டும். 3. அடுத்து Cells குரூப்பில் உள்ள Format டூலில் கிளிக் செய்திடவும். இங்கு எக்ஸெல் வரிசையாக சில ஆப்ஷன்களைக் காட்டும். 4. இதில் Hide & Unhide கிளிக் செய்து, பின்னர் Unhide Columns கிளிக் செய்திடவும்.

நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 2007க்கு முந்தைய புரோகிராமாக இருந்தால்:
1. மறைக்கப்பட்ட நெட்டு வரிசையின் இருபுறமும் உள்ள வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். 2. Format மெனுவில் இருந்து Column என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இன்னொரு துணை மெனு காட்டப்படும். 3. இந்த மெனுவில் Unhide என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி நீங்கள் மறைத்து வைத்த நெட்டு வரிசைகளை மீண்டும் பார்க்க முடியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X