பயர்பாக்ஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
00:00

அப்டேட் எச்சரிக்கை
மொஸில்லா, தான் ஏப்ரலில் கொண்டு வர இருக்கும், பயர்பாக்ஸ் பதிப்பு 12 உடன், 12 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான விண்டோஸ் 2000 மற்றும் தொடக்க கால விண்டோஸ் எக்ஸ்பிக்கு வழங்கும் சப்போர்ட்டினை நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன் 2010 ஏப்ரலில் வெளியான பயர்பாக்ஸ் 3.6 பதிப்பிற்கான பாதுகாப்பிற்குத் தேவையான பேட்ச் பைல்களையும் நிறுத்த உள்ளது.
வர இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 13லிருந்து, அது இயங்குவதற்கான குறைந்த பட்ச கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கட்டமைப்பினை யும் உயர்த்தியுள்ளது. குறைந்தது விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 2 என்ற அளவில் சிஸ்டம் இருக்க வேண்டும். பயர்பாக்ஸ் பதிப்பு 13, விண்டோஸ் 2000, எக்ஸ்பி சர்வீஸ் பேக் 1 ஆகியவற்றில் இயங்காது.
வரும் ஏப்ரல் 24ல், பயர்பாக்ஸ் 12 வெளியாக உள்ளது. இதுவே பழைய விண்டோஸ் சிஸ்டங்களில் இயங்கும் பயர்பாக்ஸ் புரோகிராமாக இருக்கும். புதிய கட்டமைப்பில் மட்டுமே பயர்பாக்ஸ் இயங்கும் வகையில் அமைக்கப்படுவதால், பிரவுசரின் வேகம் அதிகமாகும் வசதிகள் கூடுதலாகும் என மொஸில்லா எதிர்பார்க் கிறது.
மைக்ரோசாப்ட் ஏற்கனவே விண்டோஸ் 200 0 சிஸ்டத்தினை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது. எக்ஸ்பி, எக்ஸ்பி 1 ஆகியவையும் 2004 மற்றும் 2006ல் ஒதுக்கப்பட்டுவிட்டன. தற்போதைக்கு விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 3 உள்ள சிஸ்டம் இயக்கத்திற்குத்தான் சப்போர்ட் கிடைக்கிறது. இதுவும் வரும் 2014ல் முற்றிலுமாக ஒதுக்கப்பட இருக்கிறது.
சென்ற மார்ச் 13ல் வெளியான பயர்பாக்ஸ் 3.6.28 பதிப்பு தான் இறுதியாகத் திட்டமிட்டு உயர்த்தப்பட்டு வெளியானதாகும். எனவே பயர்பாக்ஸ் 3.6 பயன்படுத்துபவர்கள், தங்களுடைய பதிப்பினை அண்மைக் காலத்திய பிரவுசர் பதிப்பிற்கு உயர்த்திக் கொள்ளும்படி மொஸில்லா கேட்டுக் கொண்டுள்ளது.

விண்டோஸ் 8க்கான பயர்பாக்ஸ்
மொஸில்லா நிறுவனம் தன் படைப்புகளில் இன்னொரு மைல்கல் சாதனையை எட்டி யுள்ளது. மைக்ரோசாப்ட் அண்மையில் பயன்படுத்திப் பார்க்க வெளியிட்ட தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய பயர்பாக்ஸ் பிரவுசரை வடிவமைத்துள்ளது. இது விண்டோஸ் 8ல் தரப்பட்டு, தற்சமயம் பெருவாரியாகப் பேசப்படுகிற மெட்ரோ இன்டர்பேஸில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொட்டு இயக்கும் வகையில் மெட்ரோ யூசர் இன்டர்பேஸ் அமைக்கப் பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இதனைச் செய்தியாக வெளியிட்டு, மொஸில்லாவின் வல்லுநர் பிரையன் இது பற்றிக் குறிப்பிடுகையில், மொஸில்லா வெளியிடும் விண்டோஸ் 8 மெட்ரோ ப்ரோடோ டைப் பிரவுசர், ஏறத்தாழ ஆண்ட்ராய்ட் பிரவுசர் போலவே அமைந்துள்ளது என்றார். இதன் மூலம் இணையத்தில் உலாவலாம்; டேப்களை புதிதாக அமைக்கலாம்; புக்மார்க்குகளை ஏற்படுத்தலாம்; தேடல் ஹிஸ்டரிகளைப் பதியலாம்; கேஷ் மெமரியைத் தக்க வைக்கலாம்; நம் விருப்பப்படி பிரிபரன்ஸ் ஏற்படுத்தலாம் மற்றும் ஒரு பிரவுசரில் மேற்கொள்ளப்படும் வழக்கமான வேலைகளை மேற்கொள்ளலாம். தற்போதைக்கு இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இன்னும் பல வசதிகளைச் சரி செய்தவுடன், சோதனைப் பதிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விண்டோஸ் 8 நுகர்வோருக்கான சோதனைப் பதிப்பாகவும், அதற்கு முன்னர், புரோகிராம்கள் தயாரிப்பவர்களுக்காகவும் வெளியானது. மொஸில்லா நிறுவனம் தான் முதன் முதலாக விண்டோஸ் 8 மெட்ரோ இன்டர்பேஸில் இயங்கும் புரோகிராம் ஒன்று குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X