ரிவியூ டூல் பார்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஏப்
2012
00:00

வேர்டில் தயாரித்த ஆவணங்களைத் திருத்தவும், மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் எவை எனக் காணவும், அவற்றை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பதனை முடிவெடுத்துச் செயல்படுத்தவும் நமக்கு வேர்ட் தரும் வசதியே ரிவியூ டூல் பார். இதில் இன்னும் பல வசதிகளை வேர்ட் தருகிறது. நம்மில் ஒரு சிலரே இதனைப் பயன்படுத்துகிறோம். ஆவணம் ஒன்றினைப் பலர் திருத்தும் வேளைகளில் இது போன்ற இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் விபரங்களை இங்கு காணலாம்.
ரிவியூ டூல்பாரினைப் பெற View மெனுவிலிருந்து Toolbars தேர்ந்தெடுக்கவும். இதில் Reviewing என்பது தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். டாகுமெண்ட்டின் மேல் புறத்தில், ரூலருக்கு மேலாக ரிவியூவிங் டூல் பார் காட்டப்படும். வேர்ட் 2000 மற்றும் அதற்கு முந்தைய வேர்ட் புரோகிராம்களில் இது கீழே காட்டப்பட்டுள்ள வகையில் நான்கு பிரிவுகளாக இருக்கும்.
1. கமெண்ட்ஸ் (Comments): கொடுக்கப்படும் ஐந்து வசதிகள் அடங்கிய முதலாவது தொகுதி. இதன் மூலம் நாம் நம் குறிப்பு களை, டாகுமெண்ட்டில் இணைக்கலாம், திருத்தலாம் மற்றும் நீக்கலாம். அத்துடன் இது போல ஏற்படுத்திய குறிப்புகள் இடையே மாறி மாறிச் செல்லலாம்.
2. ட்ராக் மாற்றங்கள் (Track Changes): அடுத்து காட்டப்படும் ஐந்து சாதனங்கள் கொண்ட இரண்டாவது தொகுதி. இதன் மூலம், ஆவணங்களில் குறிப்பிட்ட இடம் செல்லலாம். குறிப்பிட்ட இடத்திற்கு முன்னர் அல்லது பின்னர் ஏற்படுத்திய மாற்றங்களைக் காணலாம். மாற்றங்களை ஏற்றுக் கொள்ளலாம். ஏற்றுக் கொள்கையில் அவை அமல்படுத்தப்பட்டு, ஆவணம் திருத்தப்பட்ட நிலையை அடையும். அல்லது மாற்றங்களை நீக்கலாம். அப் போது திருத்தங்கள் மறைந்து, ஆவணம் அப்படியே கிடைக்கும்.
3. ஹைலைட்டிங் (Highlighting): ரிவியூ டூல்பாரிலும் ஹை லைட்டிங் வசதி இணைக்கப் பட்டுள்ளது. பார்மட்டிங் டூல் பாரில் தரப்படும் அதே ஹை லைட்டிங் டூல் பார் தான் இது. அதே போல இங்கும் பயன்படுத்தலாம். அது ஒரு மாற்றமாகக் கருதப்படும். ரிவியூ டூல் பாரில் ஏற்படுத்தப் படும் வழக்கமான மாற்றங்கள் போல இதனையும் இணைக்கலாம் அல்லது நீக்கலாம்.
4. இதர வசதிகள் (Miscellaneous): மூன்று வசதிகள் கொண்ட இந்த அமைப்பு மூலம், ஆவணம் ஒன்றை மின்னஞ்சல் செய்திடும் வகையில் அமைக்கலாம். நேரடியாக அதனை மின்னஞ்சல் செய்திட வசதி கிடைக்கும்.
நீங்கள் பயன்படுத்துவது வேர்ட் 2002 மற்றும் 2003 எனில் கீழ்க்கண்ட பிரிவுகளில் மேலே குறிப்பிட்ட வசதிகள் தரப்பட் டுள்ளன. அவை 1.திருத்தங்கள் காட்டுதல் (Display): இங்கு இரண்டு வசதிகள் உள்ளன. இவை கீழ் விரி பட்டியல்களாகக் காட்டப்படும். ஆவணத்தில் மேற்கொண்ட மாற்றங்களை திருத்த, நீக்க இவை உதவுகின்றன. 2. மற்றவை (Track Changes,Comments, Track Changes மற்றும் Control Reviewing Pane) மேலே குறிப்பிட்டது போல இயங்குகின்றன.
வேர்ட் 2007 தொகுப்பில், மைக்ரோசாப்ட் வழக்கமான இந்த டூல்பார்களை எடுத்து விட்டது. அதில் ரிவியூவிங் டூல்பாரும் காணாமல் போனது. ஆனால் அதனை ரிப்பனில், Review டேப் அணுகிப் பெறலாம். அனைத்து டூல்களும் Comments மற்றும் Tracking என்ற இரு பிரிவுகளில் கிடைக் கின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X