இன்டெக்ஸ் வழங்கும் இரு சிம் யுவா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மே
2012
00:00

ஏப்ரல் மாத இரண்டாவது வாரத்தில், கம்ப்யூட்டர் துணை சாதனங்கள், மொபைல் போன் மற்றும் நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம். அண்மையில் எடை குறைந்த அழகான மொபைல் போன் ஒன்றை "யுவா' என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதிக நாட்கள் தாங்கக் கூடிய பேட்டரியுடன், இளைஞர்களின் எதிர்பார்ப்பு மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. கைக்கு அடக்கமாக, அழகாக, ஆனால் அதே சமயத்தில் கூடுமானவரை அனைத்து வசதிகளையும் கொண்டதான மொபைல் போனையே இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
யுவா போன், இவர்களின் விருப்பத் தேர்வுக்கேற்ப, தடிமன் மிகக் குறைவாக, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 117.3 X 51.5X13 மிமீ. எடை 102கிராம். இரண்டு அலை வரிசைகளில் இயங்குகிறது. இதன் பேட்டரி 8 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் 2100 mAh திறன் கொண்டதாகத் தரப்படுகிறது. 2.6 அங்குல அகலத்திரை, டிஜிட்டல் ஸூம் வசதியுடன் 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளன. குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதன் மூலம், இந்த போனில் உள்ள டேட்டா வினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். இது வழக்கமான போன்களில் இல்லாத வசதியாகும். இதன் பிளாக் லிஸ்ட் வசதி மூலம் தேவையற்ற அழைப்புகளைத் தடை செய்திடலாம். மேலும், எஸ்.எம்.எஸ். செய்திகளை முன் கூட்டியே தயார் செய்து, குறிப்பிட்ட நேரத்தில் அனுப்புமாறு செட் செய்திடலாம். இதன் வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர் பலவகை பார்மட் பைல்களைக் கையாள்கிறது. சவுண்ட் ரெகார்டர் மற்றும் எப்.எம். ரேடியோ மல்ட்டி மீடியா வசதிகளைச் சிறப்பாக்குகிறது. மைக்ரோ எஸ்.டி.கார்ட் மூலம் இதன் மெமரியை 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். புளுடூத் வசதி மூலம் கம்ப்யூட்டருடன் பைல்களை பரிமாறிக்கொள்ளலாம். எல்.இ.டி. டார்ச் ஒன்றும் தரப்பட்டுள்ளது. ஆயிரம் முகவரிகளைக் கொள்ளக் கூடிய முகவரி புக் ஒன்று போனில் தரப்பட்டுள்ளது. மெமரி கார்டிலும் கூடுதலாக முகவரிகளை சேமித்து வைக்கலாம். ஆங்கிலத்துடன் இந்தியிலும் தகவல்களைப் பதியலாம். கருப்பு, வெள்ளை, சில்வர் என மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
இதன் அதிக பட்ச விலை ரூ. 2,890. இன்டெக்ஸ் போன்களை விற்பனை செய்திடும் 15,000 விற்பனையாளர்களிடம் இந்த போனை வாங்கிக் கொள்ளலாம். இன்டெக்ஸ் நிறுவனம் தன் மொபைல் போன்களை மட்டும் விற்பனை செய்திட நாடெங்கும் 70 இன்டெக்ஸ் விற்பனை சதுக்கங்களைத் திறந்து இயக்கி வருகிறது.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X