தமிழ் வரிகளில் சிகப்பு கோடுகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மே
2012
00:00

பல வாசகர்கள், தாங்கள் தமிழில் ஆவணங்களை அதிகம் உருவாக்கு வதாகவும், அப்போது வரிகளின் கீழாக தொடர்ந்து சிகப்பு கோடுகள் கிடைக் கின்றன. இதனை நிறுத்த முடியாதா? எனக் கேட்கின்றனர். இவற்றை நிறுத்தலாம். முதலில் இது எதற்காக எனப் பார்க்கலாம். வேர்டில் ஆவணங்களை ஆங்கிலத்தில் தயாரிக்கும் போது, ஒவ்வொரு சொல்லும் டைப் செய்யப்படுகையில், பின்னணியில் அந்த சொற்கள், ஓர் அகராதியில் உள்ள சொற்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. அப்போது அகராதியில் இல்லாத சொற்கள் டைப் செய்யப்பட்டால், சிகப்பு கோடுகள் சொற்களின் அடியில் காட்டப்பட்டு, சொல்லின் எழுத்துக்களில் பிழைகள் உள்ளன என்று காட்டுகின்றன. மேலும் இலக்கணப்பிழைகள் இருந்தாலும் இவை காட்டப்படுகின்றன.
வேர்ட், தமிழ்ச் சொற்களை ஆங்கிலம் என்று உணர்ந்து உங்கள் கீ அழுத்தத்திற்கு நேரான எழுத்துக்களையும் சொற்களையும் எடுத்துக் கொண்டு, அவை தவறான ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணம் உடையவை என்ற அடிப்படையில் சிகப்பு கோட்டினைத் தருகிறது. இந்த செயல்பாட்டினை நீக்க எளிதான வழி எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை காணும் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுதான். இதற்கு டூல்ஸ் அழுத்தி, அதில் ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் ஆப்ஷன்ஸ் விண்டோ வைக் காட்டும். இதில் ஸ்பெல்லிங் அண்ட் கிராமர் என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Check spelling as you type மற்றும் Check grammar as you type என இரு பிரிவுகள் காட்டப்படும். இதன் அருகே உள்ள செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டால், இந்த பிழை திருத்தும் பணி நிறுத்தப்படும். சிகப்பு வண்ணத்தில் கோடுகள் வராது. மீண்டும் இந்த வசதி ஆங்கிலத்தில் டாகுமெண்ட்களை உருவாக்கும்போது வேண்டும் என்றால், இதே முறையில் சென்று, மேலே குறித்த இரு வரிகள் எதிராக, டிக் அடையாளத்தினை அமைத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X