சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மே
2012
00:00

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் மைக்ரோசாப்ட் தரும் புதிய வசதிகள், அது எவ்வளவு தூரம் வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிக்கிறது என்பது தெரிய வருகிறது. உங்கள் விளக்கமும் சூப்பர்.
-தாரா மோகன், சென்னை.

எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பில் நீங்கள் கொடுத்துள்ள டிப்ஸ் அனைத்தும் செயல்படுத்திப் பார்த்து வியந்தேன். நீங்கள் அளித்துள்ள படிப்படியான எளிய விளக் கம் எனக்கு மிக மிக உதவியது.
-எஸ்.என். கார்த்திக் சுரேஷ், புதுச்சேரி.

டாகுமெண்ட் பேக் கிரவுண்டு தயாரிப்பில் எத்தனை விதமாய் ஆப்ஜெக்ட்களை அமைக்கலாம் என்பதைத் தங்கள் குறிப்பு களின் அடிப்படையிலும், அதனை ஒட்டிய என் கற்பனையிலும் விரிவாகத் தெரிந்து கொண்டேன்.
-சே. மூர்த்தி விநாயகம், மதுரை.

புகைப்படம் மற்றும் படங்களின் அளவு களைப் படித்துப் பயன்படுத்தி இருக்கி றோம். ஆனால், அவற்றில் இவ்வளவு வேறுபாடு மற்றும் தன்மை இருப்பதைத் தங்களின் விளக்கம் தெளிவாக எடுத்துக் காட்டியது. நன்றி.
-சி. உமா மகேஸ்வரி, விருதுநகர்.

மெகா பிக்ஸெல் ஒன்றே ஒரு கேமராவின் தன்மையை நிர்ணயம் செய்திடும் என்ற எண்ணத்தினை வர்த்தகர்கள் வளர்த்து விட்டனர். தங்களின் கட்டுரை மேலும் பல விஷயங்களும் முக்கியம் எனத் தெரிந்து கொள்ள உதவியது.
-என். சிவப்பிரகாசம், கோவை.

நியர் பீல்டு கம்யூனிகேஷன் தொழில் நுட்பம் கொண்ட மொபைல் போன்கள் இப்போது எவை எனக் கோடி காட்டியிருக் கலாமே! இனி மொபைல் போன்கள் குறித்து எழுதுகையில், இந்த தொழில் நுட்பம் அவற்றில் உள்ளதா என்பதனையும் சேர்த்து குறிப்பிடவும்.
-டி.ஜீவானந்தம், சிவகாசி.

இதைக் கொஞ்சம் படிங்க என நீங்கள் கூறியுள்ளது அனைத்தும், எங்களை ஒரு கணம் சிந்திக்க வைத்தது. எத்தனை விஷயங்களில் நாம் நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டு வருகிறோம் என எண்ணி வெட்கம் அடைந்தேன். இனி இந்த சிறிய விஷயங்கள் அனைத்தையும் மனதில் கொள்வேன்.
-கா. பிரகாஷ் குமார், திருப்பூர்.

கேள்வி பதில் விளக்கியுள்ள கடிகாரப் பிரச்னை எனக்கும் வந்தது. ஏதோ கோளாறு என்று எண்ணிவிட்டுவிட்டேன். தங்களின் பதிலைக் கண்ட பின்னரே, விஷயத்தைத் தெரிந்து கொண்டு பிரவுசரை மாற்றினேன்.
-என். ஜமால், உத்தமபாளையம்.

ரிவியூ டூல்பார் ஒரு பயனுள்ள வசதி. வேர்டில் இதனால், ஒரே டாகுமெண்ட்டில் பலர் திருத்த முடிகிறது. இப்படித் திருத்துகையில் டாகுமெண்ட்டை எப்படிக் கையாள்வது என அடிக்கடி சந்தேகம் இருக்கும். தங்கள் விளக்கம் அதனைத் தீர்க்கும் வகையில் உள்ளது.
-ஸ்ரீராம் கணேஷ், சென்னை.

இன்டர்நெட் பார்க்கும் போது நம் திரை முழுக்க நாம் காணும் தளங்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், பிரவுசர்கள் தாங்கள் தந்து வந்த மெனுக் களைச் சுருக்கி, மறைத்துத் தருகின்றன. எனவே இது வரவேற்கத்தக்க மாற்றம்தான். இருப்பினும் அவற்றை விரிவாக எடுத்துக் கூறி எதுவும் இல்லாமல் இல்லை என்று காட்டியது சிறப்பாக உள்ளது.
-பேரா. மு. கண்ணன், மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X