இன்டெல் ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மே
2012
00:00

இன்டெல் நிறுவனத்தின் ஆட்டம் (Atom) சிப்செட் அடிப்படையில் மொபைல் போன் ஒன்று வடிவமைக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. இதனை இந்தியாவில் இயங்கும் லாவா இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. Xolo வரிசையில் இந்த மொபைல் போனின் பெயர் Xolo X900 என அழைக்கப்படுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.22,000. இன்டெல் நிறுவனத்தின் சிப்செட்டுடன் முதன் முதலில் தயாரிக்கப்படும் மொபைல் ஸ்மார்ட்போன் இதுவேயாகும். இதன் விலை அதிகம் என்பதால், உயர்நிலையில் போன் வாங்குவோர் மட்டுமே இதனை வாங்குவார்கள் என்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, மேலும் இரு மாடல்களை வடிவமைத்து வழங்க லாவா இன்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ.10,000 மற்றும் ரூ.15,000 என இவற்றின் விலை இருக்கலாம்.
இன்டெல் நிறுவனத்தின் திறனை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் இந்த மொபைல் போனின் சிறப்புகள்:
இதன் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 2.3. இதனை பதிப்பு 4.0 வரை உயர்த்தலாம். 1.6 கிகா ஹெர்ட்ஸ் சி.பி.யு. இயக்குகிறது. இதன் திரை 4.03 அங்குல அகலத்தில் எல்.சி.டி. திரையாக அமைக்கப்பட்டுள்ளது. ரெசல் யூசன் 1024 X 600 பிக்ஸெல்கள். எல்.இ.டி. பிளாஷ், 1080 பி வீடியோ ரெகார்டிங் திறன் கொண்ட 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. முன்னால் வீடியோ அழைப்புகளுக்காக 1.3 எம்.பி. கேமரா உள்ளது. இதன் உள் நினைவகம் 16 ஜி.பி. ராம் நினைவகம் 1 ஜிபி. அண்மைத் தள அணுக்க இயக்கம், வை-பி, மைக்ரோ யு.எஸ்.பி.2.0, எச்.டி.எம்.ஐ., புளுடூத் மற்றும் 1460 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை தரப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்போனின் அதி உன்னத சிறப்பு இதன் இன்டெல் சிப் செட் தான். 32nm கட்டமைப்பில் உருவான இந்த சிப்பில் இயங்கும் சி.பி.யு. வின் இயக்க வேகம் 1.6 கிகா ஹெர்ட்ஸ் ஆகும். இன்டெல் வழக்கமாக தன் சிப் செட்களில் தரும் ஹைப்பர் த்ரெடிங் மற்றும் பர்ஸ்ட் பெர்பாமன்ஸ் தொழில் நுட்பம் இதில் உள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X