சிஸ்டத்துடன் விளையாட்டா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மே
2012
00:00

கம்ப்யூட்டர் மலர் பிரிவுக்குப் பலவகையான வேண்டுகோள்களுடன் வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வரு கின்றன. சிலர் தொலைபேசி வழியாக வும், மின்னஞ்சல் வழியாகவும் சிக்கல் தீர வழிகளைக் கேட்கின்றனர். சிலரின் வேண்டுகோள்களைப் படித்த பின்னர், கேட்ட பின்னர், கீழ்க்காணும் எச்சரிக்கையத் தர எண்ணுகிறேன்.
வாசகர் ஒருவர், திருப்பரங்குன்றத்திலிருந்து பேசினார். அவருடைய கம்ப்யூட்டர் பூட் ஆகாமல் போய்விட்டது. காரணம் தெரியுமா? ரூட்கிட் வைரஸ் குறித்து ஒரு இதழில் படித்திருக்கிறார். அதனை எப்படி நீக்குவது என சில வழிகள் அதில் தரப்பட்டிருந்தன. அவருடைய சிஸ்டத்தில் ரூட்கிட் வைரஸ் இருப்பதற் கான அறிகுறிகளோ, அது விளைவிக்கும் சேதாரமோ எதுவும் இல்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரூட்கிட் வைரஸ் நீக்கும் வழிகளைக் கையாண்டிருக்கிறார். அந்த வைரஸ் இருந்தால், போய்விடட்டுமே என்ற எண்ணம். துரதிருஷ்டவசமாக, இப்போது கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை. அவருக்கு சிஸ்டத்தை மீண்டும் பார்மட் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.
இன்னொரு வாசகி, புதுக்கோட்டையிலிருந்து பேசினார். தன் சிஸ்டத்தில் உள்ள சில எழுத்துரு (fonts) பைல்களை நீக்கவும், சிலவற்றை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும் வழி கேட்டார். காரணம்? எக்ஸெல் தொகுப்பில் மாறா நிலையில் உள்ள பாண்ட் எப்படியோ மாறிவிட்டது. அதற்குப் பதிலாக தற்போது காட்டப்படும் புதிய எழுத்துரு அவருக்குப் பிடிக்கவில்லையாம். அந்த எழுத்துரு பைலை நீக்கினால், பிடித்த பாண்ட் தானாக வந்து விடும் என்பது அவர் எண்ணம். தானாகவே சில பாண்ட்ஸ்களை நீக்கியிருக்கிறார். இறுதியில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எதனை இயக்கினாலும் எழுத்துக்கள் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வேறு சில சிஸ்டம் இயக்கத்திலும் என்ன நடக்கிறது என சொற்கள் தெளிவாகக் கிடைக்காததால், ஒன்றும் செயல்படுத்த முடியவில்லை.
இன்னொரு வாசகர் தனக்கு ஆடம்பரம் பிடிக்காது என்று எழுதி, சிஸ்டத்தில் வால் பேப்பர், கூடுதல் கர்சர், படங்கள் என அனைத்தையும் நீக்க விரும்பி முயற்சித் திருக்கிறார். ஆனால், அவருக்கு “unable to comply” என்ற பதிலே கிடைத்துள்ளது. எப்படி அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமை பெற்று இவற்றை நீக்குவது என்று கேட்டார்.
மேலே தரப்பட்ட நிகழ்வுகள் ஒரு மாதிரிக்குத்தான். இதைப் போல பல வாசகர்கள் விண்டோஸ் இயக்கத்துடன் தேவையற்ற வகையில் "விளையாடி' வினையைத் தேடிக் கொண்டவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரிடமும் பொதுவான ஒரு நிலையைக் காணலாம். விண்டோஸ் சிஸ்டம் அனைவருக்கும் வளைந்து கொடுக்கும் வகையில் அமைக் கப்பட்டுள்ளது என்பதே. சிஸ்டத்தை நம் இஷ்டப்படி மாற்றி அமைக்கலாம் என்பது சிறப்பு என்றாலும், சரியான முறையில் அதனை மேற்கொள்ளவில்லை என்றால், மேலே கூறப்பட்ட முடிவுகள் தான் ஏற்படும்.
இங்கு கூறப்பட்ட முதல் வாசகர், அநியாயத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுத்து பாதிக்கப் பட்டார். தன் சிஸ்டத்தில் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக, தேவைக்கு மேல் பாதுகாப்பு தரும் புரோகிராம்களைப் பதிந்து வைத்துள்ளார். அதனையும் மீறி, இல்லாத பிரச்னைக்கு தீர்வு காணப் போய் சிஸ்டத்தை முடக்கிவிட்டார்.
அதே போல, அடுத்த வாசகர், பாண்ட்ஸ் பைல்களை அழிக்க முயற்சித்து, சிஸ்டத்திற்கெனத் தரப்பட்டுள்ள சில அடிப் படை எழுத்துருக்களை நீக்கி உள்ளார். விண்டோஸ் சிஸ்டம் தன் இயக்கத்தினைக் காட்டவென சில பாண்ட்ஸ்களை ஒதுக்கி வைத்துக் கையாள்கிறது. எனவே இவற்றை நீக்கிவிட்டால், சிஸ்டம் தரும் மெசேஜ் கிடைக்காது; அந்த செயல்பாடுகள் என்ன என்பது நமக்குத் தெரியாது. இத்தகைய சிக்கல்களில் நாமாகவே மாட்டிக் கொள்கிறோம்.
அடுத்த வாசகர் இதே போலத் தேவையற்ற நடவடிக்கையினை மேற் கொண்டுள்ளார். விண்டோஸ் தரும் வால் பேப்பர், கூடுதல் கர்சர், படங்களைப் பயன்படுத்தாவிட்டால், அப்படியே இருக்கலாமே. அவற்றை நீக்குவதனால், ஹார்ட் டிஸ்க்கில் என்ன அவ்வளவு இடமா மிச்சப்படப் போகிறது? நிறைய இடம் காலியாகும் என எண்ணியோ, அல்லது நாம் பயன்படுத்தாதது எதற்கு நம் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் என்று எண்ணியோ, அவற்றை நீக்க முயற்சிக்கிறார். இவை சிஸ்டம் இயங்குவதை எந்த விதத்தில் மேம்படுத்தும் என எண்ணவில்லை. எனவே இந்த முயற்சியில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.
பல ஆண்டுகள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய பின்னர், பயன்படுத்திய பலரின் அனுபவங்களைக் கேட்ட பின்னர் எனக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அது: "எதுவும் உடையவில்லை என்றால் ஒட்ட முயற்சிக்காதே' என்பதுதான். அப்படியே ஏதேனும் சரி செய்யப்பட வேண்டும் என்றால், விண்டோஸ் தனக்கென வைத்திருக்கும் விஷயங்களைத் தொடாதீர்கள். பாண்ட்ஸ், பாய்ண்ட்டர்ஸ், சிஸ்டம் பைல்ஸ் என இது போன்ற விஷயங்கள் பக்கம் செல்லாதீர்கள்.
இன்னொரு விஷயத்தையும் இங்கு சொல்லியாக வேண்டும். தயவு செய்து உங்கள் பைல்களுக்கு பேக் அப் எடுப்பதைக் கட்டாயக் கடமையாக மேற்கொள்ளுங்கள். எங்கு, எப்போது, எந்த வைரஸ் வந்து தாக்கும் என நமக்குத் தெரியாது. ஹார்ட் டிஸ்க் எப்படி செயல் இழக்கும் என்பதுவும் புரியாது; முன்கூட்டியே இவற்றை அறியும் வசதியும் இல்லை. எனவே நாம் பாடுபட்டு உருவாக்கிய பைல்களைக் கட்டாயம் பேக் அப் எடுத்து வைத்திட வேண்டும். அதுவே நம் உழைப்பிற்கு நாம் தரும் மரியாதை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சலீம் - iraq,இந்தியா
18-மே-201211:55:00 IST Report Abuse
சலீம் லைக் தினமலர் நியூஸ்
Rate this:
Share this comment
Cancel
Mathan - சிவகாசி,இந்தியா
14-மே-201209:48:18 IST Report Abuse
Mathan Thanks Dinamalar..............!!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X