குப்பைச் செய்தி அனுப்புவதில் முதலிடம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மே
2012
00:00

தேவையற்ற, விரும்பப்படாத, நோக்கமற்ற மெயில்களை ஸ்பேம் என அழைக்கிறோம். அநேகமாக அனைவரின் மெயில் இன்பாக்ஸிலும் இது போல நிறைய ஸ்பேம் மெயில்கள் நிறையக் காணலாம். பன்னாட்டளவில் இந்த ஸ்பேம் மெயில்கள் அனுப்புவது பலரின் வழக்கமாக உள்ளது. சில வேளைகளில் இந்த மெயில்கள் கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் உள்ள தளங்களுக்கும் நம்மை இழுத்துச் செல்லும் மெயில்களாக அமைந்து விடுகின்றன. சரி, இந்த ஸ்பேம் மெயில்களை அதிகமாக அனுப்புபவர்களைக் கொண்டு முதல் இடம் பிடித்திருக்கும் நாடு எது தெரியுமா? நம் இந்தியா தான். தகவல் பாதுகாப்பு பிரிவில் இயங்கி வரும் Sophos என்ற நிறுவனம் இந்த தகவலை அண்மையில் தன் ஆய்விலிருந்து அறிந்து வெளியிட்டுள்ளது. 2012 மார்ச் வரை இதற்கான டேட்டாவினைத் தேடிப் பெற்று இந்த முடிவிற்கு வந்துள்ளது. உலக அளவில் வெளியாகும் 10 ஸ்பேம் மெயில்களில் ஒன்று இந்தியாவிலிருந்து செல்கிறது. இந்த வகையில் இதுவரை முதல் இடம் பிடித்திருந்த அமெரிக்காவினை முந்திவிட்டது இந்தியா.
இந்த ஸ்பேம் மெயில்கள் பெரும்பாலும், ஹேக்கர்கள் தங்கள் மால்வேர் புரோகிராம்கள் மூலம் கைப்பற்றிய கம்ப்யூட்டர் களிலிருந்தே அனுப்பப்படுகின்றன. இன்டர்நெட் இணைப்பினைப் புதியதாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, அண்மைக் காலமாகப் பெருகி வருகிறது. ஆனால், இவர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களைப் பாதுகாக்கும் வழிகளை மேற்கொள்ள மறந்து விடுகின்றனர். விளைவு? மால்வேர் புரோகிராம்களால், இந்த கம்ப்யூட்டர்கள் கைப்பற்றப்பட்டு, இது போல ஸ்பேம் மெயில்கள் நூற்றுக் கணக்கில் அனுப்பப்படுகின்றன.
இந்தியாவில் இயங்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களும் இந்த வகையில் குறை சொல்லப்பட வேண்டியவையே. இந்த நிறுவனங்களும் அதி தீவிரப் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்வதில்லை. இதனால் ஸ்பேம் மெயில்கள் பரவ இவையும் காரணமாகின்றன.
பரவும் ஸ்பேம் மெயில்களில் பல பொருளாதார ரீதியாக, குறுக்கு வழிகளில் பணம் கிடைக்கும் என புதியதாக இன்டர்நெட் பயனாளர்களுக்கு வலை வீசுகின்றன. இதற்குப் பலியாகுபவர்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றைத் திருடுகின்றன.
இந்த ஸ்பேம் மெயிலை அனுப்புவர்கள், அண்மையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் தற்சமயம் இது கட்டுப்படுத்தப் பட்டு விட்டதாகவே தெரிகிறது. தற்போது புதிதாகப் பிரபலமாகி வரும் Pinterest என்னும் சோசியல் நெட்வொர்க் தளத்தின் மூலமாக ஸ்பேம் மெயில்கள் பரவுகின்றன. இந்த மெயில்களில் பொருட்கள் விற்பனை செய்திடும் தளங்களுக்கும், விற்பனை செய்வதில் கமிஷன் கிடைக்கும் என்ற செய்தி உள்ள தளங்களுக்கும் லிங்க் தரப்படுகின்றன. இதில் கிளிக் செய்திடும் நபர்கள் மாட்டிக் கொள்கின்றனர்.
இந்த தகவல்கள் அனைத்தும் Sophos நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X