இணையத்தில் விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மே
2012
00:00

தகவல் தொழில் நுட்ப சேவையில் இயங்கும் நிறுவனங்கள், இணைய வெளியில் தங்களுக்கென ஒரு விற்பனை மையத்தை அமைப்பது இப்போது வழக்கமாகி வருகிறது. முதலில் நோக்கியா, அடுத்து சாம்சங், இப்போது ஏர்டெல் என மொபைல் நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் ஸ்டோர்களை அமைத்துள்ளன. ஏர்டெல் அமைத் துள்ள விற்பனைத் தளத்தில், மொபைல் போன்கள், டிஜிட்டல் டிவி, பிராட்பேண்ட் இணைப்பு வசதிகள் எனப் பலவகை சேவைகளும் பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்களின் இணைய தளங்களில் அந்நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஏர்டெல் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைத் தன் சேவை வசதிகளுடன் விற்பனை செய்கிறது. பிற நிறுவனங்களின் மொபைல் போன்களைத் தன்னுடைய சேவையுடன் இணைத்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
மற்ற இணைய தள கடைகளைப் போலல்லாமல், ஏர்டெல் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ள விலை, மற்ற தளங்களில் உள்ள விலைப்பட்டியலுடன் போட்டியிடும் வகையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஏர்டெல் நிறுவனத் தளத்தில், எல்.ஜி. ஆப்டிமஸ் மொபைல் போன் ரூ.16,403க்குக் கிடைக்கிறது. ஆனால் பிளிப் கே ஆர்ட் தளத்தில், இதன் விலை ரூ.500 அதிகமாக உள்ளது. கூடுதலாக, ஒரு மாதத்திற்கு இலவச 3ஜி இணைப்பு கிடைக்கிறது. மொபைல் போன்களுக்கு 33% டிஸ்கவுண்ட், ஏர்டெல் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு ரூ. 500 தள்ளுபடி, டிஜிட்டல் டிவி இணைப்புகளுக்கு ரூ.250 ரொக்க தள்ளுபடி எனப் பலவகை சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X