ஹார்ட் ட்ரைவ் சோதனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மே
2012
00:00

வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்களால் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகிப்போவதை எல்லாரும் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிப் போய்விட்டது. இதனால், எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது பெரும்பாலான வர்களுக்குவழக்கமாகிவிட்டது. டெராபைட் என்ற பெரும் அளவில் ஹார்ட் டிஸ்க்குகள் வந்துவிட்டதால், இவற்றைப் பராமரிப்பதுவும் ஒரு வேலை ஆகிவிட்டது. முதலில் இவ்வளவு டிஸ்க் ஸ்பேஸ் தேவையா என எண்ணிய வர்கள், போட்டோக்கள், வீடியோக்கள், இசை ஆல்ப பைல்கள் ஆகியவற்றைப் பதிந்து வைத்திட இந்த அளவு தேவைதான் எனத் திட்டமிட்டு வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இந்த டிஸ்க்குகளைப் பயன்படுத்துகையில் திடீரென ஒரு நாள், இடம் இல்லை, தேவையற்ற பைல்களை நீக்கலாமா? என்று செய்தி வரும்போதுதான், அடடா நாம் டிஸ்க்கின் இடம் குறித்துப் பார்க்காமல், இதுவரை பயன்படுத்தி வந்திருக்கிறோமே என்று எண்ணத் தோன்றுகிறது. அவசர வேகத்தில், பழைய பைல்களில் எதனை நீக்கி புதிய பைல்களுக்கு இடம் ஒதுக்குவது என அறியாமல் திண்டாடுகிறோம். இத்தகைய குழப்பமான, எதிர்பாராத சூழ்நிலை யைத் தவிர்த்திட, ஹார்ட் டிஸ்க்குகளைப் பராமரிக்கவெனக் கிடைக்கும் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். இத்தகைய பெரும்பாலான புரோகிராம்கள் இலவச மாகவே நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.
1. ஸ்பேஸ் ஸ்நிப்பர் (SpaceSniffer): பிளாஷ் ட்ரைவ்களில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய வகையில் கிடைக்கும் இலவச புரோகிராம் இது. இதனைப் பயன்படுத்துகையில், டிஸ்க்குகளில் உள்ள அனைத்து போல்டர் மற்றும் பைல்களின் Treemap காட்சி கிடைக்கிறது. பைல்களின் அளவிற்கேற்ற வகையில் சிறிய நீள் சதுரங்கள் காட்டப்படும். இவற்றில் டபுள் கிளிக் செய்தால், பைல்கள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெறலாம். குறிப்பிட்ட வகை (எ.கா..jpg) பைல்களைக் காண வேண்டு மெனில், அல்லது குறிப்பிட்ட காலத்தில் உருவான பைல்களைப் பெற வேண்டு மெனில், அல்லது வேறு நிலைகளின் அடிப்படையில் பைல்களைப் பார்க்க வேண்டுமெனில், அதற்கான பில்டர் பயன் படுத்திக் காணலாம். பில்டர்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இந்த புரோகிராமின் ஹெல்ப் மெனுவில் வழி காட்டுதல்கள் தரப்படுகின்றன. இதனைப் பெற http://www.uderzo.it/main_products/space _sniffer/index.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்ல வேண்டும்.
2. விண்டிர் ஸ்டேட் (windirstat): இந்த புரோகிராமினை இயக்கியவுடன், டிஸ்க்கில் உள்ள அனைத்து பைல்களையும், ஒரு மரத்தின் கிளைகளாகக் காட்டுகிறது. மூன்று வகையான காட்சித் தோற்றமும் கிடைக்கிறது. இந்த டைரக்டரி பட்டியல், விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பில் காட்டப்படுவது போலவே தோற்றம் கொண்டிருப்பதால், இவற்றைக் கையாள்வது எளிதாக உள்ளது. கூடுதலாக, ஒவ்வொரு வகை பைல்களின் மொத்த காட்சி மற்றும் தகவல்களும் நமக்குக் கிடைக்கின்றன. ஒரே வகை பைல்கள் மற்றும் சார்ந்த பைல்கள் ஒரே வண்ணத்தில் காட்டப்படுவது இதன் சிறப்பு. இந்த புரோகிராமினை http://windirstat.info/ என்ற முகவரியில் இலவசமாகப் பெறலாம்.
3. ட்ரீ சைஸ் ப்ரீ (TreeSize Free): ஒரு ட்ரைவ் அல்லது போல்டருக்கென இந்த புரோகிராமினை இயக்கி, அது சார்ந்த தகவல்களைப் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட போல்டரின் அளவு, அதன் துணை போல்டர்கள் கொள்ளும் இடம் ஆகியன தெளிவாகக் காட்டப்படுகிறது. விண்டோஸ் எக்ஸ் புளோரரில் போல்டர்களையும் துணை போல்டர்களையும் விரித்துக் காண்பது போல இதிலும் காணலாம். இந்த புரோகிராமினை ப்ளாஷ் ட்ரைவில் எடுத்துச் செல்லும் வகையிலும், இன்ஸ்டால் செய்து இயக்கும் வகையிலும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனைப் பெற http://www.jamsoftware.com/treesize_free/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.
4. டிஸ்க்டெக்டிவ் (Disktective): இதுவும் ட்ரைவ் ஒன்றில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் இலவசமாகக் கிடைக்கும் புரோ கிராம் ஆகும். இதனை இயக்குகையில் டைரக்டரி அல்லது ட்ரைவ் ஒன்றினைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்கும். தேர்ந்தெடுத்த வுடன், போல்டர் அல்லது ட்ரைவில் உள்ள பைல்கள் குறித்த தகவல்கள், ஒரு ட்ரீயாக வும், வரைபட (pie chart) வடிவிலும் கிடைக்கும். எத்தனை சதவிகித இடம் பயன்படுத்தப்பட்டுள்ளது, எவ்வளவு காலி உள்ளது எனவும் காட்டப்படும். இந்த பு@ராகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டியதில்லை என்பதால், இதனை ஒரு ப்ளாஷ் ட்ரைவில் எடுத்துச் சென்று, விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் எந்தக் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம். இதனைப் பெற http://www.disktective.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
5. டிஸ்க்சாவி (DiskSavvy): ஹார்ட் டிஸ்க் ஒன்றினை ஆய்வு செய்து தகவல்களைத் தரும் புரோகிராம்களில், இயக்குவதற்கு எளிமையாகவும், கூடுதலாகத் தகவல் களைத் தரும் வகையிலும் உள்ள புரோ கிராம் இது. நெட்வொர்க் ட்ரைவ்களையும் NAS ஸ்டோரேஜ் சாதனங்களையும் ஆய்வு செய்து முடிவுகளைத் தரும். இதனை இயக்கத் தொடங்கியவுடன், டிஸ்க்கில் உள்ள அனைத்து டைரக்டரி மற்றும் பைல் எடுத்துக் கொண்டுள்ள இடத்தை பை சார்ட் மற்றும் பார் சார்ட் என நாம் விரும்பும் வகையில் காட்டுகிறது. 2 டெராபைட் அளவு டிஸ்க்கினை, அதிக பட்சம் 5 லட்சம் பைல் வரை, இந்த புரோகிராம் இலவசமாகக் காட்டுகிறது. அதற்கும் மேலான எண்ணிக் கையில் பைல்களைப் பார்க்கக் கட்டணம் செலுத்தி கூடுதல் வசதிகள் உள்ள புரோகிராமினைப் பெற வேண்டும். இந்த புரோகிராமில் இருந்தவாறே, பைல்களைப் பெயர் மாற்றம், காப்பி, அழித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம். இதனைப் பெற http://www.disksavvy.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்ல வேண்டும்.
6. ஜேடிஸ்க் ரிபோர்ட் (jdiskreport): தேர்ந்தெடுக்கப்படும் போல்டர் அல்லது ட்ரைவில் உள்ள பைல்களை, பை சார்ட், ரிங் சார்ட், பார் சார்ட் அல்லது மிக விரிவான டேபிள் எனப் பலவகைகளில் ஜேடிஸ்க் ரிப்போர்ட் புரோகிராம் காட்டுகிறது. இடது பிரிவில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் போல கிளைகள் அமைப்பில் பைல்கள் காட்டப்படுகின்றன. வலது பக்கம் பிரிவில் பல டேப்கள் தரப்பட்டு, அவற்றைத் தேர்ந் தெடுப்பதன் மூலம், பல வகைகளில் பைல்களைப் பார்க்க முடிகிறது. இங்கு கிடைக்கும் டூல் பார் பட்டன்கள் மூலம், பைல்களை அதன் வகைகளில், அளவு களில் எனப் பல வகைகளில் காணலாம். இதனைப் பெற http://www.jgoodies.com/freeware/jdiskreport/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
7. கெட் போல்டர் சைஸ் (GetFoldersize): இது எடுத்துச் செல்லும் வகையிலும், இன்ஸ்டால் செய்து இயக்கிப் பயன்படுத்தும் வகை யிலும் கிடைக்கிறது. இன்ஸ்டால் செய்து விட்டால், விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவில் இதுவும் ஒரு ஆப்ஷனாக அமர்ந்து கொள்கிறது. பைல்களில் ரைட் கிளிக் செய்து, இந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து ஸ்கேன் செய்திடலாம். சிடி, டிவிடி, நெட்வொர்க் ஷேர் ட்ரைவ், எக்ஸ்டர் னல் ட்ரைவ் ஆகிய அனைத்து வகை ஸ்டோரேஜ் டிஸ்க்குகளையும் கையாள் கிறது. பைல் மற்றும் ட்ரைவ்களின் அளவினை, நாம் விரும்பும் வகையில், பைட்ஸ், கிலோ பைட்ஸ், மெகா பைட்ஸ், கிகா பைட்ஸ் என அனைத்து வகைகளிலும் அளவினைக் காட்டுகிறது. போல்டர் கிளைகளில் பைல்கள் அமைத்துக் காட்டும் படத்தினை பிரிண்ட் செய்து கொள்ளலாம். அல்லது டெக்ஸ்ட் பைலாக சேவ் செய்து கொள்ளலாம். எடுத்துச் செல்லும் வகையில் கிடைக்கும் பதிப்பினை, யு.எஸ்.பி. ட்ரைவில் எடுத்துச் சென்று எந்தக் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம். இதனைப் பெற http://www.getfoldersize.com/en_getfoldersize.htm என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
8. ரிட்நேக்ஸ் (RidNacs): மிக வேகமாக இயங்கி டிஸ்க்கின் கொள்ளளவை இந்த புரோகிராம் காட்டுகிறது. பார் சார்ட் மூலம் பைல்கள் எடுத்துக் கொள்ளும் இடம் சதவிகித அளவில் காட்டப்படுகிறது. இதன் ஸ்கேன் முடிவுகளை .txt, .csv, .html, or .xml எனப் பலவகை பைல்களில் சேவ் செய்து கொள்ளலாம். இந்த புரோகிராம் உள்ளாகவே, பைல்களை அழிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. இன்ஸ்டால் செய்கையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இதனைக் காட்டும் வசதியை அமைக்கலாம். இதனைப் பெற
http://www.splashsoft.de/Freewareridnacsdiskspaceusageanalyzer.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தை அணுகவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X