இன்டர்நெட் முகவரியில் எழுத்து சோதனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மே
2012
00:00

இன்டர்நெட் இன்று உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. ஆனால் சில நேரங்களில் இது எரிச்சல் தரும் விஷயமாகவும் உள்ளது. இன்டர்நெட் தளமுகவரிகள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளை எழுத்து சோதனைக்குத் தாமாகவே உட்படுகையில் இது தவறு என நமக்குச் சுட்டிக் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டர் இப்படித்தான் செய்திடும் என ஆதங்கத்துடன் நாம் அதனை அலட்சியப்படுத்தினாலும், உள் மனதில் இதனைத் தவிர்க்க இயலாதா? என்ற ஆவல் எழுகிறது. இந்த சோதனையைத் தவிர்க்கவும் வேர்ட் புரோகிராமில் வழி உள்ளது என்பதே இதற்குத் தீர்வு. ஸ்பெல்லிங் செக் செய்திடும் புரோகிராமினை இன்டர்நெட் முகவரிகளையும், மின்னஞ்சல் முகவரிகளையும் அலட்சியப்படுத்திவிடு என ஆணையிடலாம்.
இதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். நீங்கள் வேர்ட் 2007க்கு முந்தைய தொகுப்புகள் பயன்படுத்துபவராக இருந்தால்,
1. Tools மெனுவிலிருந்து Options பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Options டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இதில் Spelling - Grammar டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
3. இங்கு Ignore Internet and File Addresses என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை இடவும்.
4. பின்னர் OK கிளிக் செய்து வெளியேற வும்.

நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்க்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்.
1. ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Word Options மீது கிளிக் செய்திடவும்.
2. இப்போது Word Options டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
3. டயலாக் பாக்ஸின் இடது பக்கம் Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இங்கு Ignore Internet and File Addresses என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
5. பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.
இனி வேர்ட் டாகுமெண்ட்டில் இணைய தள முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை டைப் செய்திடுகையில் அதன் மீது ஸ்பெல்லிங் செக் நடைபெறாது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X