சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 மே
2012
00:00

குப்பைச் செய்திகள் அனுப்புவதில் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது என்ற செய்தி வியப்பைத் தரவில்லை. நாம் பயனுள்ள வகையில் தகவல் தொழில் நுட்ப சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையத்தான் தருகிறது.
சி.சுலைமான், விழுப்புரம்.

ஜிமெயில் மீட்டர் எக்ஸ்டன்ஷன் புரோ கிராம், நம் மின்னஞ்சல் பயன்பாட்டினைக் காட்டும் விதம் நிச்சயம் அனைவரையும் கவரும். சார்ட், கிராபிக்ஸ் என அசத்துகிறது. பயனுள்ளது மட்டுமின்றி, நீங்கள் கூறியது போல ஒரு ஆடிட்டராகவும் இது செயல்படுகிறது.
நா.சிதம்பரம், சின்னமனூர்.

ஹார்ட் டிஸ்க் சோதனைக்கான தொகுப்பு களில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் உள்ள டிஸ்க்டெக்டிவ் மிக எளி தாகப் பயன்படுத்தும் வகையில் உள்ளது. மற்றவற்றை இயக்கிப் பார்க்கவில்லை என்றாலும், இந்த புரோகிராம் தரும் வசதி கள் எந்தப் பிரச்னையும் தரவில்லை என்பது இதன் சிறப்பு
எஸ்.எம். காதர் பாட்சா, இராமநாதபுரம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஹார்ட் டிஸ்க் எந்நிலையில் உள்ளது என டயனாக்ஸ்டிக் ரிப்போர்ட் எடுத்து வைப்பது நமக்குத்தான் நல்லது. அந்த வகையில் நீங்கள் தந்துள்ள அனைத்து புரோகிராம் களுமே பயனுள்ளதாகவே உள்ளதாக அவற்றின் இணைய தளங்களில் இருந்து தெரிந்து கொண்டேன். நான் ஸ்பேஸ் ஸ்நிப்பர் பயன்படுத்தினேன்.
ஆர்.கே. சியாமளா சென்னை.

யு.ஆர்.எல். தருகையில் ஸ்பெல்லிங் சோதனையை நீக்கும் வழி, பெரிய நிம்மதியைத் தந்தது. நன்றி.
ஆர். கண்ணன், கோவை.

இன்டர்நெட் முகவரியில் எழுத்து சோதனை நடைபெறுவது நல்லதே. ஏனென் றால், பல வேளைகளில் நாம் அதிலும் சொல் பிழை ஏற்படுத்துகிறோம்.
சி.இரா. சம்பந்தன், திருப்பூர்.

கூகுள் ட்ரைவ் குறித்த விரிவான கட்டுரையை எழுதியவருக்கு ஒரு சபாஷ்! மிகத் தெளிவாக அதன் இயக்கம், பயன்கள், மற்றவற்றுடன் ஒப்பீடு என அதனை விளக் கியுள்ளார். மிகச் சிறிய விபரங்கள் கூட விட்டுப் போகவில்லை. கூகுள் நிறுவனத் திற்கு இதனை அனுப்புங்கள்.
பேரா. டாக்டர். வி.கே.சுந்தர்ராஜன், சென்னை

வாராவாரம் கம்ப்யூட்டருக்குப் புதிய முறையில்அறிமுகமாவோருக்கான கட்டுரை ஒன்றைத் தரவும். விலையில்லா கணினி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்டர்நெட் பயன்படுத்துவது பற்றிய கட்டுரையினை எதிர்பார்க்கிறேன்.
டி.கே. சுரேஷ்குமார், ஆசிரியர், மதுரை.

இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் களில், அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் சிறந் தது என எழுதி உள்ளீர்களே. பொதுவாகப் பட்டும் படாமல் தானே, ஒன்றைப் பரிந்துரை செய்வீர்கள். இருப்பினும் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. அவாஸ்ட் இஸ் த பெஸ்ட்.
இள.தமிழ்செல்வன், தாம்பரம்.

தமிழ் நாட்டில் மட்டுமல்ல, எங்களைப் போல கடல் கடந்து வந்து பணி புரியும், தமிழர்களுக்கும் கம்ப்யூட்டர் மலர் பதிப்பு மிகவும் உதவியாய் உள்ளது. டிப்ஸ் வெளி யிடுவதை இடையே கூட நிறுத்த வேண் டாம். முடிந்தால், பக்கங்களை அதிகப் படுத்தி, டிப்ஸ்களை அடிக்கடி நிறைய தரவும்.
எஸ். மதார் மைதீன், துபாய்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X