விண்டோஸ் 8 ரீபூட் இல்லை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
00:00

சென்ற வாரம் மைக்ரோசாப்ட் தன் வலை மனைச் செய்தியில், வர இருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ரீபூட் ஆகும் பிரச்னைக்கு முடிவு கட்டி விட்டதாகவும், இனி சிஸ்டம் தானாக, சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம், ரீ பூட் ஆகாது என்றும் அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக, அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதை விண் டோஸ் 8 உணர்ந்து, அதனைச் சரி செய்திட தரும் ஆப்ஷன்களை ஒரு மெனுவாகப் பட்டியலிடும். அதில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரி செய்தல், ரீ பூட் செய்தல் உட்பட, சாப்ட்வேர் தொகுப்பின் பிரச்னைக்கேற்றபடி ஆப்ஷன்கள் தரப்படும்.
இதற்கு மைக்ரோசாபட் முன்பு சந்தித்த சில பிரச்னைகளே காரணம் ஆகும். 2008 ஆம் ஆண்டில், விண்டோஸ் விஸ்டாவிற்கென சர்வீஸ் பேக் 1 வழங்கப்பட்டபோது, விஸ்டா தொடர்ந்து பல முறை ரீபூட் செய்த வண்ணம் இருந்தது. இதே பிரச்னை, 2009 ஆம் ஆண்டில், வாடிக்கையாளர்கள் விஸ்டாவி லிருந்து விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்கையிலும் நடைபெற்றது. இரண்டாவது நிகழ்வு, பெரும்பாலும் ரூட்கிட் வைரஸ் பாதித்த விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர்களிலேயே ஏற்பட்டது என்பதும் கண்டறியப்பட்டது.
இதனால்தான், இந்த தானாகவே ரீபூட் ஆகும் சமாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷன்கள் அடங்கிய மெனுவினைத் தரும் வசதி ஒன்றை விண்டோஸ் 8 சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் தந்துள்ளது. இதிலிருந்து சிஸ்டம் பழுது பார்த்தல் அல்லது மீட்பு வேலை மற்றும் மீண்டும் பூட் செய்தல் என விருப்பப்படுவதனை மேற்கொள்ளும் வசதி கிடைக்கிறது.
மேலும் இன்னொரு கூடுதல் வசதியும் தரப்பட்டுள்ளது. இருமுறை பூட் செய்திடும் வகையில் சிஸ்டம் செயல்பட்டால், உடனடியாக விண்டோஸ் 8, Windows Recovery Environment (RE) என்ற ஒரு டூலை இயக்கத் தொடங்கும். இதன் மூலம் பிரச்னையை ஆய்வு செய்து அதற்கேற்ப சரி செய்திடும் பணிகளுக்கான வேலை மேற்கொள்ளப்படும். இந்த டூல் விஸ்டா சிஸ்டம் முதல் தரப்பட்டு வருகிறது.
மேலும் விண்டோஸ் 8 சிஸ்டம் பூட் ஆவதற்குக் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்படுவதால், இடையே அதனை நிறுத்திக் கண்காணிக்க, R (Del F8/F2 /Pause போன்ற) அழுத்துவது என்பது இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. விண்டோஸ் 8, முந்தைய சிஸ்டங்களைக் காட்டிலும் 30% முதல் 70% வரை வேகமாக பூட் ஆகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X