ஸ்பைஸ் தரும் புதிய இரண்டு சிம் மொபைல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2012
00:00

மொபைல் இன்டர்நெட் நிறுவனமாகப் பெயர் பெற்று வரும் ஸ்பைஸ் நிறுவனம், அண்மையில் Flo Me – M 6868n என்ற பெயரில் புதிய இரண்டு சிம் மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வழக்கமான போனாக இல்லாமல், சில எதிர்பாராத சிறப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த போனில் 3.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. 312 MHZ வேகத்தில் இயங்கும் சி.பி.யு. இயங்குகிறது. இதனால், வழக்கமான மொபைல் போன்களைக் காட்டிலும் இந்த போன் 33% கூடுதல் வேகத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 1150 mAh திறன் கொண்ட பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால், அதிக நாட்களுக்கு மின்சக்தியைத் தக்க வைத்துக் கொள்கிறது. இதில் 3.2 மெகா பிக்ஸெல் திறனுடன் இயங்கும் கேமரா உள்ளது. வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர்கள், மல்ட்டிமீடியா ரசிகர்கள் விரும்பும் வகையில் இயங்குகின்றன. இதன் ‘Cosmos UI’ என்ற இன்டர்பேஸ், திரையில், பல வசதிகளுக்கான இயக்கத்தைக் காட்டுகிறது. பல சோஷியல் தளங்களுக்கான நேரடி இணைப்பும் கிடைக்கிறது. இத்தளங்களுக்கான இணைப்பை எளிதாகவும், வேகமாகவும் பெற “S Apps Planet” என்ற அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. வை-பி இணைப்பு மற்றும் எப்.எம். ரேடியோ இதன் மற்ற சிறப்பம்சங்களாகும்.
டச் ஸ்கிரீன் திரையுடன், மல்ட்டி மீடியா மற்றும் சோஷியல் நெட்வொர்க் இணைப்பு போன்றவற்றுடன் உள்ள மொபைல் போனை நாடும் இளைஞர்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் இந்த மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டுள்ளதாக, ஸ்பைஸ் நிறுவன பன்னாட்டு தலைவர் குணால் அஹூஜா தெரிவித்துள்ளார். இந்த மொபைல், நாடெங்கும் ஸ்பைஸ் மொபைல் போன்களை விற்பனை செய்திடும் 50,000 மையங்களில் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.3,900 எனக் குறிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X