எக்ஸெல் - வேர்ட் வேகமாக இயங்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2012
00:00

பொதுவாக கம்ப்யூட்டர் இயக்கத் தில், விண்டோஸ் சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்ற குறை அனைவராலும் கூறப் படுகிறது. ஆனால், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் இயங்குவது குறித்து யாரும் இந்தக் குற்றச்சாட்டினைக் கூறுவதில்லை. இருப்பினும், சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், ஆபீஸ் தொகுப்பில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராம்களிலும் வேக மாக இயங்கலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. மாறாத நிலை வேர்ட் பாண்ட்: ஆபீஸ் தொகுப்பில் வேர்ட் நமக்குக் கிடைக்கும் போது, குறிப்பிட்ட எழுத்துரு மாறா நிலையில் கிடைக்கிறது. எப்போது வேர்ட் திறக்கப் பட்டாலும் இதுவே நமக்கு டைப் செய்திடக் கிடைக்கிறது. ஏனென்றால், Normal டெம்ப்ளேட்டில் இது மாறா நிலையில் செட் செய்யப்பட்டுள்ளது. இதனை, அதே டெம்ப்ளேட்டில் சென்று மாற்றுவதன் மூலம், நாம் ஒவ்வொரு முறையும் பாண்ட் மாற்றும் நேரத்தினை மிச்சப்படுத்தலாம். இதற்கு Home டேப் சென்று, Styles என்ற பிரிவைக் காணவும். Normal என்ற பாக்ஸில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு Modify என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டயலாக் பாக்ஸில், உங்களுக்குப் பிடித்தமான எழுத்துருவினை அமைக்கவும். அதன் பின்னர், New documents என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் தேர்ந்தெடுத்து அமைத்த எழுத்துருவே, மாறா நிலை எழுத்துருவாக அமையும்.
2. எக்ஸெல் ஆட்டோ கால்குலேஷன்:எக்ஸெல் தொகுப்பு மெதுவாக இயங்கினால், அதன் ஆட்டோமேடிக் கால்குலேஷன் என்னும் டூலை இயங்காமல் வைத்துவிடலாம். பல வகையான கணக்கீடுகளுடன் அமைக்கப் பட்டுள்ள எக்ஸெல் ஒர்க்புக்கில், நூற்றுக் கணக்கான கால்குலேஷன் அவ்வப்போது இடம் பெறும்.
ஒரு செல்லில் தரப்பட்டுள்ள மதிப்பை மாற்றினாலும், உடனே பல இடங்களில் கணக்கீடு மாறும். இந்த தானாகக் கணக்கிடும் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இதற்கு எக்ஸெல் 2010 தொகுப்பில், File டேப் கிளிக் செய்து, Options என்பதை இடது பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில், இடது பக்கம் உள்ள Formulas என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Workbook கணக்கிட, Manual என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இதில் தரப்படும் எண்கள் நீங்கள் பைலை சேவ் செய்திடும் வரையில் சரியாக இருக்காது. எனவே சேவ் செய்திட வேண்டும் அல்லது எப்9 அழுத்த வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சரஸ்வதி - pondicherry,இந்தியா
12-ஜூன்-201216:48:59 IST Report Abuse
சரஸ்வதி வெரி நிசே ஒன நியூஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X