சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2012
00:00

என்னதான் தெரிந்தவர்களுடன், வீடியோ சாட் செய்தாலும், நாம் அவர்கள் பார்க்க விரும்பும் வகையில் இருக்க வேண்டும் என்பதனை, நுணுக்கமான தகவல்களுடன் அருமையாகத் தந்திருக்கிறீர்கள். நிச்சயம் இது வீடியோ கேமரா பயன்படுத்து பவர்களுக்கு உதவும் குறிப்புகளாகும்.
ஆர்.எஸ். தாண்டவன், திருச்சி.

கம்ப்யூட்டரின் இறுதி மூச்சு என்று தலைப்பிட்டு, ஓர் இளம் தளிரின் படம் போட்டு அசத்திவிட்டீர்கள். எச்சரிக்கைகள் மற்றும் டிப்ஸ்கள் அனைத்தும் நல்ல நெத்தி அடி தருவதாக இருந்தன. ஆனால், யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
எஸ். சுஜாதா சீனிவாசன், கல்பாக்கம்.

விண்டோஸ் எக்ஸ்பியை வைத்து கோடிக் கணக்கான டாலர் வருமானம் ஈட்டிய மைக்ரோசாப்ட், ஏன் சப்போர்ட் தர மறுக்கிறது என்பதன் உண்மைக் காரணம், தங்களின் குறிப்பைப் படித்த பின்னரே தெரிய வந்தது. மைக்ரோசாப்ட் நல்ல வியாபாரிதான்.
கே.சி. ஞானப்பிரகாசம், தேனி.

எக்ஸ்பி சிஸ்டத்தைக் கொண்டு நல்ல வருமானம் ஈட்டிய பில் கேட்ஸ், அதனை இன்னும் விரும்பும் மக்களுக்காக, பழைய ஹார்ட்வேர் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர் களுக்கு உதவலாமே. உலகெங்கும் இதே போல வாடிக்கையாளர்கள் இருப்பார்களே. நம் பத்திரிக்கை வழியாக ஒரு வேண்டுகோள் இது குறித்து தர வேண்டும் என்பதே என் விண்ணப்பம்.
சி.கிருஷ்ணன், சென்னை.

சில ஆண்டுகள் ஆகிவிட்டால், விண்டோஸ் எதற்கெடுத்தாலும் ரீபூட் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தும். இது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் வேறு வகையில், நமக்கு அறிவிக்கும் வகையில், இருப்பது நம்மை ஆசுவாசப்படுத்தும் செய்தியாகும்.
என்.கமல்ராஜ், திருப்பூர்.

விண்டோஸ் சிஸ்டம் என்பது எப்போதும் புதிர்களைக் கொண்டதுதான். எனவே தீராத புதிர்கள் என்ற தலைப்பின் கீழ் இது போன்ற டிப்ஸ்களைத் தரவும். இரண்டு வாரங்களில் கொடுத்தவை மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. அட்வான்ஸ் தேங்க்ஸ்.
என். ராஜ்குமார், போடி.

புதிர்களாகத் தந்து விடைகளை அளித்த தில், என் பல நாள் சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. அனைத்துமே, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் கேட்கலாமா, கூடாதா என்ற தயக்கத்துடன் வைத்திருக் கும் சந்தேகங்களே. குறிப்பாக ஐட்யூன்ஸ் குறித்த சந்தேகத் தலைவலி எனக்குத் தீர்ந்ததில் பெரிய நிம்மதி. நன்றி.
டி.என். சதாசிவம், பொள்ளாச்சி.

கேள்வி பதில் பகுதியில் சாய்வு கோடுகள் குறித்த தங்களின் விளக்கம், எளிமையாக வும், புரிந்து கொள்ளும் முறையிலும் உள்ளது. என் மாணவர்களுக்கு நான் சிரமப்பட்டே இதுவரை இதனை விளக்கி வந்தேன். ஆனால், சரியான நோக்கில் இதனை விளக்கியுள்ளீர்கள். எழுதிய வருக்கு பாராட்டு.
என். சுந்தரவதனம், ஆசிரியர், போடி.

இன்ஸெர்ட் ப்ளோட்டிங் பட்டனை நீக்கி, நிம்மதியாகச் செயலாற்ற முடிகிறது. சிறிய விஷயம் என்றாலும், என் கேள்விக்கு மதிப்பு கொடுத்து விளக்கியதற்கு நன்றி.
சி. நிர்மல் குமார், மதுரை.

ஆக்சிஸ் பிரவுசர் அடிப்படையில், அனைத்து தேடுதளங்களும், பிரவுசர்களும் வடிவமைக்கப்பட்டால், அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
என். ஸ்ரீ விஜயா, மதுரை.

ரிபீட் செயல்பாடு போன்ற கீகள் குறித்த தகவல்களை ஒரு தொகுப்பாகத் தந்தால், நினைவில் வைத்துப் பயன்படுத்த எளிதாக இருக்கும்.
கே. உமாராணி, விருதுநகர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பஷீர் M L - doha,கத்தார்
11-ஜூன்-201211:23:19 IST Report Abuse
பஷீர் M L MS office2007 பயன் படுத்துகிறேன் . Excel -ல் வாடிக்கையாளர்களின் பெயரும் தொலைபேசி எண்ணும் பதிந்து வைத்துள்ளேன். Sort & Filter முறையில் அகர வரிசைப் படுத்தியுள்ளேன். புதிதாக ஒரு பெயர் உள்ளீடு செய்யும் போது அது தானாகவே அகர வரிசையில் அமையப் பெற என்ன செய்ய வேண்டும். நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X