இது உங்கள் இடம்!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

பெற்றோரே உஷார்!
சமீபத்தில், நானும், என் கணவரும், உடல் நலமின்றி இருந்த, எங்கள் உறவினர் ஒருவரை நலம் விசாரிக்க, அவர் இல்லத்திற்கு சென்றோம். அவர் வீட்டின் வரவேற்பறையில், அவரது மூன்று வயது மகனுக்கு சொல்லித்தர, ஆங்கில எழுத்துகளின் பட்டியல், அவற்றின் படங்களோடு சுவரில் மாட்டப்பட்டிருந்தது.
"ஏ' (ஆங்கில முதல் எழுத்து) பார் ஆப்பிள் எனத் துவங்கிய அந்தப் பட்டியலில், "பி' பார் பர்கர், "என்' பார் நூடுல்ஸ், "பி' பார் பீட்சா என்ற துரித உணவுகளின் பட்டியல், படங்களோடு இருந்ததை பார்த்து அதிர்ந்து விட்டேன்.
"பி' பார் பால் - பந்து, "பி' பார் பென் என்ற காலம் எல்லாம் மாறி, இளம் வயதிலேயே, மிக அதிகமான கொழுப்புச் சத்து மற்றும் சத்துக்களே இல்லாத, வெறும் கலோரிகளை மட்டுமே கொண்டுள்ள, இப்படிப்பட்ட மேற்கத்திய உணவுகளைப் படித்தும், உண்டும் வளரும் குழந்தை, எப்படி ஆரோக்கியமாக வளர முடியும்? சென்ற நூற்றாண்டில், "ஆட்கொல்லி நோய்களான
காலரா, ப்ளேக், காசநோய் போன்றவற்றை ஒழித்துக் கட்டி விட்டோம்...' என்று இறுமாந்திருக்கையில், இந்நூற்றாண்டில் அச்சுறுத்தும் எமன்களாக இளவயதில் உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள், புற்றீசலாய்ப் புறப்பட்டு விட்டன.
இவற்றை மருத்துவர்கள், "வாழ்க்கை முறை மாற்றத்தால் வரும் நோய்கள்' என, அடையாளப்படுத்துகின்றனர். இவ்வேளையில், குழந்தை மனதில் இப்படிப்பட்ட கல்வியை நாமே போதிக்கலாமா? முன்பு, ஆங்கிலேயர் ஆட்சியில், "அ' என்றால் அணில் என்று அச்சிடப்பட்ட புத்தகம் கண்ட பாரதிதாசன், புதுவை கல்வி அதிகாரிக்கே மனு அனுப்பி, "அ' என்றால், "அம்மா' என்று மாற்றி எழுத வைத்தார்.
இவற்றை எல்லாம் எடுத்துச் சொன்னவுடன், அந்த அட்டையை உடனே கழற்றி விட்டார் எங்கள் உறவினர். பெற்றோரே... மறந்தும் குழந்தைகளுக்கு, இது போன்ற ஆபத்தான அகரவரிசையை சொல்லித் தராதீர்!
முனைவர். சங்கமித்ரா நாகராஜன், கோவை.

தனித்துவ கையெழுத்து!
ஆசிரியையாகிய நான், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், வாக்குப் பதிவு சாவடி அ<லுவலராக பணியாற்றினேன். பணி முடிந்ததும் சில தாள்களில், நான் கையெழுத்திட நேர்ந்தது. என் கையெழுத்தை பார்த்த, சக< அலுவலர் கைகொட்டி சிரித்தார். "என்ன மேடம்... கையெழுத்து இது? இனிஷியல் தனியா பெயரின் எழுத்துக்கள் தனித்தனியா. பொம்மை பொம்மையா வரைஞ்சிருக் கீங்க. உங்க கையெழுத்தை ரொம்ப ஈசியா காப்பியடிச்சிரலாம் போல...' என்றார்.
அவரே தொடர்ந்து, "உங்களுக்கு நாப்பது வயசு இருக்கும். பிளஸ் 2 சான்றிதழிலிருந்து பல்வேறு ஆவணங்களில், ஏற்கனவே கையெழுத்து போட்டிருப்பீங்க. இப்ப புதுசா மாத்தினா குழப்பம் வரும். வீட்ல பிள்ளைகள், பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, தனித்துவமா கையெழுத்து போட ஊக்குவிக்கணும். அது, ஒரு இயக்கமா உருவெடுக் கணும்...' என்றார். தலையாட்டி னேன். இப்போதெல்லாம், 10ம் வகுப்பு எடுக்கும்போது, சிறிதுநேரம் ஒதுக்கி, கையெழுத்து போட, பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்கிறேன். உங்கள் குழந்தைகளின் கையெழுத்தை கவனியுங்கள்.
ஸ்ருதிப்ரியா, ஒட்டன்சத்திரம்.

மீன்கள் எத்தனை மீன்களடி!
என் மகளை பெங்களூரில் பணிபுரியும் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தோம். என் மகளுக்கு சுமாராய் சமையல் தெரியும். இருந்தாலும், பிரமாதமாக சமைப்பவள் போல் காட்டிக் கொள்வாள். சமீபத்தில் நா<னும், என் கணவரும் அவளை பார்க்க போயிருந்தோம். எட்டுமாதக் குழந்தையை எங்களிடம் விட்டுவிட்டு டம்பமாய் விரால்மீன் வாங்கச் சென்றாள்.
மீன்களை பற்றிய விவரம், என் மகளுக்கு போதாதது என தெரிந்து கொண்ட மீன் வியாபாரி, தேளீ மீனை காட்டி, விரால் மீன் என்றிருக்கிறான். ஒன்றரை கிலோ தேளீ மீனை, விரால் மீன் விலைக்கு வாங்கி தோல் நீக்கி துண்டாடி வீட்டுக்கு கொண்டு வந்தாள். தேளீ கிலோ, 100 ரூபாய், விரால் கிலோ, 300 ரூபாய். 150 ரூபாய் மீனை, 450 ரூபாய்க்கு வாங்கி ஏமாந்திருக்கிறாள். விஷயத்தை கண்டுபிடித்து, மீன்காரனிடம் சண்டை போட்டு, 300 ரூபாயை திரும்ப வாங்கினேன்.
திருமணமாவதற்கு முன், மகள்களை மீன்மார்க்கெட்டுக்கு அடிக்கடி கூட்டிச்சென்று, மீன்களின் வகைகளை, அதன் விலைகளை தெரிந்து கொள்ளச் செ#வது நல்லது சகோதரிகளே!
சா.பல்கீஸ் பானு, திருநெல்வேலி.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rathi - Aruppukottai,இந்தியா
22-ஜூன்-201216:36:34 IST Report Abuse
rathi தனித்துவ கையெழுத்து என்பது மிகவும் முக்கியம் என்பதை தெரிய படுத்துனீர்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி கண்டிப்பாக தெரிய படுத்தி அதன் முக்கியத்துவத்தை அறிய செய்வேன்.
Rate this:
Share this comment
Cancel
ரவி கணேஷ் - kumbakonam,இந்தியா
18-ஜூன்-201214:50:50 IST Report Abuse
ரவி கணேஷ் பொம்பளைக்கு மீன் சமைக்க மட்டும் தெரிந்தால் போதும். வாங்க, தெரியாவிட்டால் பரவ இல்லை
Rate this:
Share this comment
Cancel
Gokul Shankar S - Pollachi,இந்தியா
18-ஜூன்-201209:53:34 IST Report Abuse
Gokul Shankar S sundarasrinivasan , அந்த பகுதியில், பாட்டியிடம் போனில் சொல்வது சரியா? அல்லது உடம்பு சரி இல்லை என்று சொல்லி அவர்கள் மனதை பயம் கொள்ள செய்தது சரியா? இது தான் கேள்வி...இதற்கு தாங்கள் சொன்ன பதில் திருப்தி இல்லை...நீங்க Poster, technology அப்படி இப்படின்னு சொல்லுரிங்க...
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHELDER,நெதர்லாந்து
18-ஜூன்-201205:17:46 IST Report Abuse
GOWSALYA மிக நன்றி SUNDARASRINIVASAN அவர்களே......ஆமாம்,என்னுடைய கருத்தும் பிழைதான் ..ஒப்புகொள்கிறேன்.மன்னிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Gokul Shankar S - Pollachi,இந்தியா
17-ஜூன்-201209:16:04 IST Report Abuse
Gokul Shankar S உங்க பொண்ணு பரவா இல்லீங்க, மீன் மட்டும் தான் சமைக்க தெரியாது..இங்க நிறைய பேருக்கு சுடு தண்ணி கூட ஒழுங்கா வைக்க தெரியாது.. :-)
Rate this:
Share this comment
Cancel
17-ஜூன்-201205:41:55 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க கௌசல்யா அவர்களே சென்ற வாரம் இது உங்கள் இடம் பகுதியை மீண்டும் ஒரு முறை படிக்கவும்...... உங்கள் கேள்விக்கு பதில் வெளிவந்திருக்கும். தயவு செய்து படிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Prema - Chennai,இந்தியா
17-ஜூன்-201203:03:50 IST Report Abuse
Prema பர்கீஸ் பானு அவர்களுக்கு, "என் மகளுக்கு சுமாராய் சமையல் தெரியும்" என்று நிறுத்தி இருக்கலாமே. "பிரமாதமாக சமைப்பவள் போல் காட்டிக் கொள்வாள்" என்று பொது இடத்தில் மட்டம் தட்டி எழுதுவது தவறு. மகளே ஆனாலும் அவளும் சக மனுஷி மறந்து விடாதீர்கள்!!!
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHELDER,நெதர்லாந்து
17-ஜூன்-201202:32:09 IST Report Abuse
GOWSALYA இந்த வாரமலரின் மூன்று படிவங்களும் முக்கியமானவை......அதிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிகொடுக்கும் விதம் ?...எல்லோரும் இதைக் கவனித்துப் பிள்ளைகளுக்கு நன்மையானதை சொல்லிகொடுக்கணும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.