என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (7)
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

அமெரிக்கா முழுக்க ஏர்போர்ட், "ரெஸ்ட் ரூம்'கள் ஒரே மாதிரி அமைக்கப்பட்டிருக்கின்றன. கண்களை பறிக்கும் தரை மற்றும் சுவர்கள், பளிச்சென விளக்குகள், உபயோகிக்கவே கூச்சப்படும் அளவில் பளபளப்பாய், "கிளாசெட்டு'கள்! "ஆயிரம் வசதிகளிருந்தும், நோ பீஸ் ஆப் மைண்ட்...'
எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்... கழுவிச் சுத்தம் செய்ய பைப்போ, குவளையோ கிடையாது. டிஷ்யூக்கள் விதம் விதமாய், சுருள் சுருளாய் வைத்திருந்தனர்.
ப்ளஷ் அவுட்டுக்கு போகும் தண்ணீர் பைப்பில் இருந்து, வெளியே ஒரு இணைப்பு கொடுக்கக் கூடாது? ம்கூம்.
ஏன் வைக்க மாட்டேன் என்கின்றனர்? தண்ணீர் சிக்கனமா, அப்படியெல்லாம் தெரியவில்லை. காரியம் முடிந்து எழுந்தவுடனேயே, ஆட்டோமேட்டிக்கா, பயங்கரச் சப்தத்தில், பயங்கர வேகத்தில், தண்ணீர் பீய்ச்சி சுத்தப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு முறையும், குடம் குடமாய் நீர் சேதாரமாகிறது. வெளியேயும் வாஷ் பேசின்களில் தடையில்லா தண்ணீர்... அப்புறம் இங்கு மட்டும் ஏன் கூடாது?
வீடுகள் என்றால் பரவாயில்லை. பெரும்பாலும் வீடுகளெல்லாம் மரத்தாலேயே கட்டப்பட்டிருக் கின்றன. ஏறினால், இறங்கினால், நடந்தால், "தொம்... தொம்' மர வீடுகள் என்பதால் தண்ணீர் வெளியே தெறித்தால், அவைகள் நமுத்து, பூஞ்சை பிடித்து, நாசமாகி விடும் அபாயம் இருக்கிறது.
பொது இடங்களில் எல்லாமே கான்கிரீட் தரைகள்... சுவர்களும் அப்படியே. அப்புறம் ஏன் டிஷ்யூ?
புரியவில்லை... யாருக்கும் காரணம் தெரியவில்லை. கலாசாரமாம்...
கலாசாரம் எதெதற்கு வேண்டும். எங்கெங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்கிற விவஸ்தை இல்லை.
நமக்கு இதெல்லாம் சுத்தப்படுமா... நன்றாக உடை உடுத்திக் கொள்கின்றனர். கவர்ச்சியாய் திரிகின்றனர், மேக் - அப்; வாசனைத் திரவியம்; ஆனால், "அங்கு' மட்டும் நாறுகிறது.
இதற்காக கையோடு குவளைகளைத் தூக்கிக் கொண்டு அலைய முடியுமா?
"கையில் எப்போதும் மினரல் வாட்டர் பாட்டிலை வெச்சுக்குங்க குடிக்க மட்டுமில்லை... டாய்லெட்டுல தண்ணீர் பிடிச்சு கழுவவும் வசதியாயிருக்கும்...' என்று யோசனை சொல்லியிருந்தார் அந்துமணி.
பயணம் முழுக்க அது மிகவும் உபயோகமாயிருந்தது. ஆனால், அதிலும் கூட ஒரு சிக்கல்...
ஏர்போர்ட்டிற்குள் நுழையும்போது, கையில் தண்ணீர் பாட்டில்களை அனுமதிப்பதில்லை. ஸ்கானிங்கில் பெட்டியை விடும்போதே, தூக்கி எறிந்து விடுகின்றனர். டாலர் போட்டு வாங்கின பாட்டில்கள் கண் முன்னேயே குப்பைக்கு போவதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
அப்புறம் உள்ளே போய்... அதிக விலை கொடுத்து பாட்டில் வாங்கிக் கொள்ள வேண்டும். கழிப்பிடத்திற்கு கட்டணம் கிடையாது. ஆனால், தண்ணீர் பாட்டிலுக்கு, அழ வேண்டும். 200 ரூபாய் தண்ணீரை மல்லுக்கட்டி குடித்துவிட்டு, வாஷ்பேசினில் மீண்டும் நிரப்பி, டாய்லெட்டில் பிரவேசிக்க வேண்டும்.
பல இடங்களிலும் உதவி வேணுமா என்று கேட்டு, அங்கு தேவைப்படாத உதவிக்கு முதியவர்கள் நிற்கின்றனர். வலியப் போய் இடத்தைச் சுத்தம் செய்கின்றனர். டிஷ்யூ எடுத்து நீட்டுகின்றனர்.
அப்புறம் டிப்ஸ் கேட்டு தர்மசங்கடத்திற்கு ஆழ்த்துகின்றனர்.
வீட்டில் யாரையும் எதிர்பார்க்காமல், தள்ளாத நாட்களிலும் கூட, தங்கள் செலவிற்குத் தாங்களே சம்பாதித்துக் கொள்ளும், சொந்தக் காலில் நிற்கும் துணிவு, "நம்மால் முடியும்' என்கிற தன்னம்பிக்கை இவர்களிடம் உள்ளது.
இந்தத் தன்னம்பிக்கை, சின்ன வயதிலிருந்தே அங்கே ஊட்டப்படுகிறது. மேல்படிப்பிற்கு அங்கு சென்ற நண்பர் அருண், இது பற்றிப் பிரமாதமாய் சிலாகிக்கிறார்.
"இங்கே பிள்ளைகளுக்கென்று யாரும் சொத்தோ, பணமோ பெரிதாய் சேமித்து வைப் பதில்லை. அதற்காக கஷ்டப்படுவதுமில்லை; கவலைப்படுவதுமில்லை. வாரத்தில் ஐந்து நாட்கள் கடுமையான உழைப்பு... இரண்டு நாட்கள் பயங்கரமாய் அனுபவிப்பு.
வாழ்க்கையை அணு அணுவாய் ரசிக்கின்றனர்; எதையும் விட்டு வைப்பதில்லை.
பசங்களுக்கு நல்ல கல்வி தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அது மட்டுமே, இவர்கள் தரும் சேமிப்பு.
அதிலும் கூட இதைப்படி, அதைப்படி என்று பிள்ளைகளைக் கட்டாயப்படுத்துவதில்லை.
"உன் விருப்பம் எதுவோ, உனக்கு எதில் ஆர்வமோ, எந்தப் பாடம் வருகிறதோ, அதைத் தேர்வு செய்' என்று அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகின்றனர்.
அமெரிக்காவில் பெரும்பாலும் யாரும், எந்தக் காரியத்திற்கும் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, அவரவர்களே செய்து கொள்கின்றனர். துவைப்பது, சமையல், வீட்டுக்குள் மராமத்து, கார் பராமரிப்பு... இப்படி எல்லாமே.
இந்தப் பராமரிப்பு, எடுபிடி வேலை, எல்க்ட்ரீஷியன், ப்ளம்பர், ஹெல்பர் என கிளம்பினால், நம் சம்பளம் போதாது. அந்த அளவிற்குக் கேட்பர்.
அனுமதி பெற்று, இந்த மாதிரி தொழில் செய்பவர்கள் மிகக் குறைவே. முறைகேடாய் நாட்டிற்குள் புகுந்து, இத்தனை சட்ட கெடுபிடி களுக்கும் பெப்பே சொல்லி வசிப்பவர்கள் ஏராளம். இந்த மாதிரி பணிகளுக்கு ஆள் தேவை என்பதால், அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவே தெரிகிறது.
என்ன தேவை என்றாலும், என்ன வேலை நடக்கணும் என்றாலும், லேப்-டாப்பில் தட்டி, ஆன்லைனில் தேடினால், வேண்டிய நபர்கள் தொடர்பு நம்பர்கள் கிடைக்கின்றன. அழைத்தால் உடனே வருவர். ஆனால், அதற்கான கட்டணம் வயிறை கலக்கும்.
பெற்றோர், பசங்களையும், பசங்கள், பெற்றோரையும் தொந்தரவு செய்வதில்லை. இதனால், பந்த பாசம் குறைவது நிஜம். அதே நேரத்தில் உறவு, பந்தபாசம் இழப்பும் பெரிதாய் இவர்களைப் பாதிப்பதில்லை.
இதனால், யாரும் எதற்கும் கவலைப் படுவதில்லை. அலட்டிக் கொள்வதில்லை. வந்தது வரட்டும், வரும் இடத்தில் சந்திப்போம் என்கிற மனோதைரியம்... எதையும் எந்தத் தருணத்திலும் எதிர்கொள்ள முடியும் என்கிற தன்னம்பிக்கை!
படிப்பு, வேலை மட்டுமில்லை. கல்யாணத் திற்கு பெண் விஷயத்தில் கூட அப்படித்தான்.
"உன் வாழ்க்கைத் துணையை, நீயே தேர்ந்தெடுத்துக் கொள். பார், பழகு, முடிவெடு. முடிவெடுத்தபின் பின்வாங்காதே. அப்புறம் மனம் கலங்காதே!'
இளம் வயதில், உலகமறியா பருவத்தில், இளைஞர்கள் முடிவு எடுக்க முடியுமா, அது சரியாய் இருக்குமா என்கிற ரிஸ்க் ஒரு பக்கம் இருந்தாலும், எந்த ஒரு காரியமும் பிறரால் தேர்வு செய்யப்பட்டு, நம் மேல் திணிக்கப்படுவதை விட, நாமே தேர்வு செய்யும்போது, பின்னால் என்ன பிரச்னை என்றாலும், நாமே விரும்பி எடுத்த முடிவு என்று சமாதானம் செய்துகொள்ள முடிகிறது. பிறர்மேல் பழி போட்டுப் புலம்பும் போக்கு தவிர்க்கப் படுகிறது.
நம் கையே நமக்கு உதவி, நமக்கு நாமே எல்லாம் செய்து கொள்ளணும் என்கிற பக்குவமும், பழக்கமும் வீட்டில் மட்டுமில்லை, வெளியேயும் கடைப்பிடிக்கப்படுகிறது. நம்மூரில் சில ஓட்டல் களில், இலையை நாமே எடுத்துப் போட வேண்டும் என்றால் முணுமுணுக்கிறோம். செல்ப் சர்வீஸ் ரெஸ்டாரென்டிலும் கூட கால்கடுக்க நின்று வாங்கி வந்து சாப்பிடுவோமே தவிர, சாப்பிட்டபின் சுத்தம் செய்யணும் என்று தோன்றுவதில்லை. அப்படியே போட்டு விட்டு வந்து விடுவோம்.
இவர்கள், வித்தியாசப்படுகின்றனர்.
வேண்டியதை வரிசையில், பொறுமையாய் நின்று ஆர்டர் செய்து வாங்கிவந்து சாப்பிடுகின்றனர். சாப்பிட்ட பின் சுத்தம் செய்து குப்பைகளைக் கொண்டுபோய் போட்டு விட்டுத் தான் வெளியேறுகின்றனர்.
அதே மாதிரி, அங்கே பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விஷயம், குழந்தைகளுக்கும், பெண் களுக்கும் நிறைய முக்கியத்துவம் தருகின்றனர்.
பெண்களை மதிக்கின்றனர், பாதுகாக்கின்றனர்; மரியாதையாய் நடத்துகின்றனர். இல்லையென்றால் அங்கு நடப்பதே வேறு. அதோகதி.
பெண்களின் இந்த பாதுகாப்பு, சுதந்திரம், சவுகரியத்திற்காகப் பெருமைப்படலாம். சந்தோஷப் படலாம். ஆனால், இதனால் பாதிக்கப்படும் கணவர்களின் கதை அதிர்ச்சி தருகிறது.
நண்பர் ஒருவர், நன்றாகப் படித்து நல்ல வேலை, திருமணம் என்று சந்தோஷமாய் அங்கு செட்டிலாகி இருந்தார். ஆனால், அவர் இப்போது சந்தோஷமாக இல்லை. நிம்மதியைத் தொலைத்து விட்டு அல்லாடுகிறார். அதற்குக் காரணம்...
தொடரும்.

என்.சி.மோகன்தாஸ்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gokul Shankar S - Pollachi,இந்தியா
22-ஜூன்-201208:44:57 IST Report Abuse
Gokul Shankar S Hi Naga, I'm Gokul Shankar...not Gokul Kumar....என்னங்க புது பேரு கண்டு பிடிக்கறீங்க... :))
Rate this:
Share this comment
Cancel
நாகா - Chennai,இந்தியா
21-ஜூன்-201211:31:18 IST Report Abuse
நாகா Mr. Gokul Kumar, I found that mistake after you posted the comment, but I didn't correct it, I should've done it.
Rate this:
Share this comment
Cancel
Suganya - Charlotte,யூ.எஸ்.ஏ
21-ஜூன்-201200:59:11 IST Report Abuse
Suganya hi naga .. wat was said by gokul shankar s correct....when i came here i too felt very difficult to understand the accent....gokul சொன்ன மாதிரி follow பண்ணுங்க also if possible means watch american channels ex news, tv shows,, because it helps me lot to know and follow their accent... because i used this method ... now i can understand better ...
Rate this:
Share this comment
Cancel
Gokul Shankar S - Pollachi,இந்தியா
20-ஜூன்-201208:51:26 IST Report Abuse
Gokul Shankar S Hi Naga, one mistake, its "Pardon" :-))) அலசல் பற்றி நல்லா அலசுறீங்க போல மக்களே :-pppp haa haa..pothum pa... :-)
Rate this:
Share this comment
Cancel
குமார் - சிங்கபோரே,சிங்கப்பூர்
19-ஜூன்-201219:01:44 IST Report Abuse
குமார் If Indians dont use tissue paper as it will get burnt because of the spicy food intake. Hence we use water :-) But being or travelling western countries, our people should get used to tissue paper though we feel it is very uncomfor and untidy.
Rate this:
Share this comment
Cancel
Gokul Shankar S - Pollachi,இந்தியா
19-ஜூன்-201217:53:21 IST Report Abuse
Gokul Shankar S ஹலோ "நாகா - சென்னை", Very first time American slang is bit difficult to understand, once you start interacting with them then you will be used to it...Try to join the conference calls along with your team lead or with others and keenly watch their conversation...then make your observations and cross check with your team mates...regarding the next week interview, dont worry much now, just be chill... and if you could not understand pls say "Purden" they will repeat..you may explain the client that what you understood from their question then you may give your ans...Good Luck...
Rate this:
Share this comment
Cancel
மோகன்தாஸ் - kuwait,இந்தியா
19-ஜூன்-201210:24:27 IST Report Abuse
மோகன்தாஸ் Aha.. Tissue issue Pathikkitchi pole..! In this chapter about Education, cleanliness,self confidence, dicipiline..,family set ups- freedom in life... and so many things in usa are proudly mentioned. Due to common matter- toilet issue is given importance in the discussion -I think..! KINDLY POINT OUT THE MISTAKESIT WILL BE SURELY corrected. Thanks for giving some ideas to face this issue and very many thanks for the valuable comments.
Rate this:
Share this comment
Cancel
சுப்புமஹாலிங்கம் ரமணி - சான்ஜோஸ்,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201205:10:10 IST Report Abuse
சுப்புமஹாலிங்கம் ரமணி What MohanDas said is correct. Who ever goes to USA, Europe face this problem. But airports like Dubai, have seen India type toilets Bidet(WaterJet). Unfortunately, in India in Bus stations and railway stations, toilets are very poorly maintained even though Rs.3 or 4 is collected. However here in USA, If one want to be higenic, can fit Bidet to the Toilet closet in the house and carry por bidet while traveling.
Rate this:
Share this comment
Cancel
நாகா - சென்னை,இந்தியா
18-ஜூன்-201215:26:02 IST Report Abuse
நாகா விஷயம் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க: நான் வாரத்தில் ஒரு நாள் எனது அமெரிக்க client - உடன் தொலைபேசியில் பேச வேண்டியுள்ளது. ஆனால் என்னால் அவர் பேசுவதை புரிந்து கொள்ள இயலவில்லை. ஆங்கில படங்கள் பார்ப்பது, அமெரிக்க ஆங்கில தொலைகாட்சிகள் பார்ப்பது, எனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதாக நான் உணரவில்லை. இதற்கு ஏதாவது உகந்த வழியை கூறுங்களேன்.
Rate this:
Share this comment
Cancel
ss - utrecht,நெதர்லாந்து
18-ஜூன்-201214:48:13 IST Report Abuse
ss hello writer, as everybody said, it will be very cool in these western countries to use water for that purpose... also cleaning in water will cause splitting of water that may spread germs or may be slippery.... we indians are not as hygiene as these people in this issue... you should change your opinion.. we donot wash our hands after using the toilets, but here even a small kid will do it after every use...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.