அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

** நா.சுப்பையா, காட்டூர்: யாரை அதிகம் நம்பலாம்? சொந்த பந்தங்களையா, உறவினர்களையா?
இரண்டுமே அல்ல; உங்களை! உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வையுங்கள்... உங்களால் முடியும் என்ற தைரியத்தின், ஊக்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்... "தன் கையே தனக்குதவி' என்பதில் மாறாத பற்று வையுங்கள்... அதை விடுத்து, மற்றவரை நம்புவது என்றென்றும் படு குழியில் தள்ளி விடும்!
***

*கு.அழகேசன், தேனி: நடிகை என்பதற்கு, ஆங்கிலத்தில், "ஆக்ட்ரஸ்' என்ற வார்த்தை இருக்கையில், பிரபல ஆங்கில நாளிதழ்கள் கூட, "ஆக்டர்' என்றே எழுதுகின்றனவே... ஏன்?
"ஆக்ட்ரஸ்' என எழுதுவது, தங்களை சிறுமைப்படுத்துவதாக உள்ளதாம். ஹாலிவுட், பாலிவுட் நடிப்புத் தாரகைகள் சிலர், போர்க்கொடி உயர்த்தியதால், அமெரிக்கா, இங்கிலாந்து, நம் நாடு உட்பட, பல நாடுகளிலும் ஆங்கிலத்தில், "ஆக்டர்' என்றே நடிகையரை குறிப்பிடுகின்றனர்.
***

*வி.நந்தகுமார், காங்கேயம்: விளையாட்டு தொடர்பான கேள்விகள் உங்களுக்கு வருவதில்லையா? அது சம்பந்தமான பதில் எதுவுமே தருவதில்லையே!
தெரியாத சப்ஜெக்டுகளில் மூக்கை நுழைப்பதில்லை. இந்தியாவில் குக்கிராமங்களில் கூட, கிரிக்கெட் பாப்புலராக உள்ளது... உண்மையைச் சொல்கிறேன்... கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது எனக்கு. இதைப் போலவே மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வமில்லை!
***

* * ஆர்.முரளி, ஒத்தக்கல் மண்டபம்: என் நண்பனுடன் பங்குதாரராக சேர்ந்து, வியாபாரம் ஆரம்பிக்க உள்ளேன். பின்னாளில், வியாபாரம் தொடர்பாக எங்களுக்குள் பிரச்னை வந்து விடாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?
ஆரம்பம் முதலே, பங்குதாரர்களுக்குள் ஒளிவு, மறைவு கூடாது. எல்லா விஷயங்களிலும் ஒத்த கருத்தை அடைந்து முடிவெடுக்க வேண்டும்... இவை இரண்டும் அடிப்படையாக அமைந்தால், பிரச்னைகள் பெரும்பாலும் ஏற்படாது.
***

*ஆர்.கல்யாணசுந்தரம், சிவகிரிப்பட்டி: கணவனை இழந்த பெண்கள், துக்கத்தை தாங்கிக் கொண்டு, நீண்ட நாள் வாழ முடியும் என்றும், மனைவியை இழந்த ஆண்களால் முடியாது என்றும் கூறுகின்றனரே...
உண்மை தான்! வலி, இழப்பு, துக்கம் ஆகியவற்றை தாங்கும் ஆற்றல், பெண்களிடம் இயற்கையிலேயே உண்டு. ஆனால், ஆண்கள் கோழைகள்... சிறு தலைவலி என்றால் கூட பயந்து விடுவர். அவர்களால் நோய், வலி, இழப்புகளைத் தாங்க முடியாது.
***

*வி.சிவராஜ், அனுமந்தபுரம்: பலரிடமும் கேட்டு விட்டேன்... யாருக்கும் தெரியவில்லை... நீங்களாவது சொல்லுங்கள்... உலகத்தில் உள்ள மொத்த நாடுகள் எத்தனை?
இந்த பதிலை எழுதும் வரை, 272. பெரிய நாடுகளை பிரித்து, இன்னும் சில குட்டி நாடுகள் எதிர்காலத்தில் உதயமாகலாம்...
***

** எஸ்.சோமசுந்தரம், பொன்னேரி: உ.பா., சாப் பிடுபவர்கள் அனைவரும் கெட்டவர்களா?
அப்படிச் சொல்பவர்கள் விவரம் அறியாதவர்கள். உ.பா., எவ்வளவு சாப்பிட்டாலும், நிதானம் தவறாமல், தமக்குள் ஒரு மகிழ்ச்சியையும், திருப்தியையும் ஏற்றிக் கொள்பவர்களே அதிகம்... ஏன், நம் லென்ஸ் மாமா இல்லையா?
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூன்-201221:42:57 IST Report Abuse
எஸ். கோபால கிருஷ்ணன் அந்துமணியாரே, உழைக்காமல், வியர்வை சிந்தாமல், நேர்மையான வழியில் சீக்கிரம் பணக்காரர் ஆவது எப்படி...?
Rate this:
Share this comment
Cancel
Cindy - Chennai,இந்தியா
22-ஜூன்-201217:34:26 IST Report Abuse
Cindy மொத்த நாடுகள் 196
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.