மெட்ரோ ரயில் பிரியங்கா!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

பெங்களூரு, எம்.ஜி., ரோட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம்...
வண்ணமயமான சிறகு ஒன்று, காற்றில் மிதந்து வருவது போல மெட்ரோ ரயில் வந்து நின்றது.
பயணிகள் அனைவரும் இறங்கிய பின், கடைசியாக டிரைவர் கேபினில் இருந்து விமான பைலட் போல ஒரு பெண் இறங்கினார்.
அவர் தான், மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர். பெயர் பிரியங்கா.
வயது: 21.
வீட்டிற்கு போகும் அவசரத்திலும், புன்னகை சிந்தியபடி, தான் மெட்ரோ ரயில் ஓட்டுனரான கதையை கூறினார்.
எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் டிப்ளமோ முடித்தவர். மின்சார பயன்பாட்டில் அதிக சக்தியுடன் இயங்கும் மெட்ரோ ரயில் ஓட்டுனராக வேண்டும் என்பது இவர் கனவு.
இதற்காக நிறைய படித்து, நிறைய உழைத்து, தன் கனவை நனவாக்கி விட்டார்.
டில்லி சென்று, அங்குள்ள மெட்ரோ ரயிலை, ஆறு மாதகாலம் ஓட்டி, பயிற்சி எடுத்தார். பயணிகளின் பாதுகாப்பும், சிக்னல்களின் முக்கியத்துவம் குறித்தே நிறைய வகுப்புகள் எடுக்கப்பட்டன.
பின், பெங்களூரில் ஓடும் மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவராக நியமனம் பெற்று, ஆயிரம் பயணிகளுடன் மகாத்மாகாந்தி ரோடு நிலையத்தில் இருந்து, பையனப்பஹள்ளி வரை, ரயிலை ஓட்டிய முதல் அனுபவம் மறக்க முடியாதது. வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்த திரில்லான நேரமது என்கிறார்.
வெற்றிகரமாக இவர் மெட்ரோவை இயக்கி வருவதை அடுத்து, தற்போது மேலும், மூன்று பெண்கள், மெட்ரோ டிரைவராக நியமனம் பெற்றுள்ளனர்.
வேலை முடிந்ததும், பஸ்சை பிடித்து பெங்களூரில் இருந்து, 30 கி.மீ., தூரத்தில் உள்ள, தன் கனகபுரா கிராமத்திற்கு போய் விடுகிறார்.
விவசாயியின் மகளான இவர், தற்போது, வீட்டிலேயே அதிகம் சம்பாதிப்பவராக இருந்தாலும், நகரத்திற்கு இடம் பெயரவில்லை, காரணம், இனிமையான கிராம வாழ்க்கை பிடித்து விட்டது இவருக்கு.
மெட்ரோ ரயிலை பிரமாதமாக ஓட்டும் பிரியங்காவிற்கு, இன்னமும் சைக்கிள் ஓட்டத் தெரியாது.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலசுப்ரமணியன் - சென்னை,இந்தியா
22-ஜூன்-201213:25:32 IST Report Abuse
பாலசுப்ரமணியன் தயா உன் பெயர் சொல்லும் போது இதயத்தில் மின்னொளி பாயுதே
Rate this:
Share this comment
Cancel
பாலா - India,இந்தியா
19-ஜூன்-201223:26:47 IST Report Abuse
பாலா தினமலர் நாளிதழ் படிப்பவர்கள் வாரமலர் படிக்க மாட்டார்கள் என்ற எண்ணமா? எதற்கு இந்த ரெட்டை பதிப்பு? இதற்கு பதில் அழகான சிறுகதை இப்பகுதியில் வெளியிடலாமே?
Rate this:
Share this comment
Cancel
RAMAN - AUCKLAND,நியூ சிலாந்து
19-ஜூன்-201216:47:50 IST Report Abuse
RAMAN வாழ்த்துக்கள் பிரியங்கா..என்ன படித்தாலும் மனதுக்கு பிடித்த வேலையை செய்தால் அந்த ஒரு சந்தோசமே தனி தான்..
Rate this:
Share this comment
Cancel
அருண் - பெங்களூர்,இந்தியா
19-ஜூன்-201214:05:03 IST Report Abuse
அருண் கனகபுரா ஒரு கிராமம் அல்ல இன்றைக்கு அது பல கோடிகள் புழங்கும் நகரம்... ரியல் எஸ்டேட் இன் மகிமை..
Rate this:
Share this comment
Cancel
ஜாகிர் - திருவாரூர்,இந்தியா
19-ஜூன்-201213:15:59 IST Report Abuse
ஜாகிர் வாழ்த்துக்கள் பிரியங்கா !!!!!
Rate this:
Share this comment
Cancel
ரம்சான் - சென்னை,இந்தியா
18-ஜூன்-201212:09:25 IST Report Abuse
ரம்சான் Welldone priyanka, and congratulations to u. women's are proud to this matter
Rate this:
Share this comment
Cancel
S .ரவி - brisbane,ஆஸ்திரேலியா
17-ஜூன்-201206:04:05 IST Report Abuse
S .ரவி பிரியங்கா வாழ்த்துகள். ஆனாலும் மெட்ரோ ரயில் ஓட்டுனராக, எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படிப்பு வேண்டுமா? நம்ம ஊரில் பலரும் படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல் வேலை செய்வது சாதாரணம்தான். இந்த நிலை எப்போதுதான் மாறுமோ ?
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHELDER,நெதர்லாந்து
17-ஜூன்-201202:09:51 IST Report Abuse
GOWSALYA பிரியங்கா வாழ்த்துகள்.......கிராமத்து வாழ்க்கையை விடவேண்டாம்.....அதுபோல நிம்மதியானது ஒன்றுமில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.