திண்ணை!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

கடந்த, 1938ஆம் ஆண்டு முதன் முதலில், இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் நடந்தது. கிளர்ச்சியை தூண்டியதாக அண்ணாதுரை கைது செய்யப்பட்டு, சென்னை சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். அண்ணாதுரையை சிறைக்குள் அனுப்பும்போது, மாலை பொழுதாகி விட்டது.
அவரை சிறைக்காவலர் முன் நிறுத்தினர். வழக்கமாக சிறையில் இரவு சாப்பாடு மாலை 5.00 மணிக்கே கைதிகளுக்கு வழங்கப்பட்டு விடும். 6.00 மணிக்குள் அனைத்து கைதிகளும் சிறையில் அடைக்கப்பட்டு, அறைக் கதவுகள், காவலர்களால் பூட்டப்பட்டு விடும்.
அண்ணாதுரையை சிறைக்குள் அனுப்பும்போது, மாலை 6.00 மணியாகி விட்டது. கைதியை கொண்டு வந்த போலீஸ்காரர்களிடம் சிறைக்காவலர், "மணி ஆறுக்கு மேலாகி விட்டது. இந்த நேரத்தில் வந்தால் ஏது சோறு?' என்று கோபமாகச் சொன்னார்.
"பசிக்கிறது, சோறு போடுங்கள்...' என்று கேட்பார் அண்ணாதுரை என எண்ணி, சிறைக்காவலர் அவ்வாறு சொன்னார்.
அதைக் கேட்டதும், அண்ணாதுரைக்கு சிரிப்பு வந்தது. சிரித்தார். சிரித்தபோது அவரது வெற்றிலைக் காவி ஏறிய பற்கள் தெரிந்தது. அதைப் பார்த்ததும் சிறைக்காவலர், "இங்கே சிறைக்குள்ளே வெற்றிலைப் பாக்கு போடக் கூடாது...' என்றார், கண்டிப்புடன்.
பிறகு, அண்ணாதுரையை அருகில் வரச் சொல்லி, "வேட்டியை உதறு; சட்டைப் பைக்குள் பீடி, சிகரெட் வைத்திருக்கிறாயா? காட்டு...' என்றார். "அப்படி ஒன்றும் தன்னிடம் இல்லை...' என்றார் அண்ணாதுரை.
"சரி, அதோ பார்... மூலையில் இரண்டு மண் சட்டிகள் இருக்கின்றன. ஒன்றில், குடிக்கத் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள். மற்றொன்று, இரவில் சிறுநீர் கழிக்க; நிற்காதே! எடுத்துக் கொண்டு, 9ம் எண்ணுள்ள அறைக்கு போ! அங்கே கம்பளி இருக்கும். விரித்துப் படுத்துக் கொள். காலையில் எழுப்புவோம்...' என்றார். அந்த அதிகாரி.
அமைதியாக அறைக்குள் சென்று கம்பளியை விரித்துப் படுத்து கொண்டார், அண்ணாதுரை.
அண்ணாதுரையின் பொறுமை குணத்திற்கு இது ஒரு சான்று.
"அண்ணா என்னும் தலைவர்' நூலிலிருந்து...

நெருப்புக் கோழிக்கு அடுத்த பெரிய பறவை ஈமு கோழி தான். இது பறக்க முடியாத பறவை. ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும். (இப்போது நம்மூரிலும் வளர்க்கப்படுகிறது) பொதுவாக பறவைகளில் ஆண் பெரியதாகவும், பெண் கொஞ்சம் சிறியதாகவும் இருக்கும். ஆனால், ஈமு இனத்தில் ஆண் சிறியதாகவும், பெண் அதைவிடப் பெரியதாகவும் இருக்கும். ஈமு குடும்பத்தில் முட்டையை அடைகாக்கும் வேலையை பெண் பறவை செய்வதில்லை. அதை ஆண் பறவை தான் செய்யும்.
"பறவைகள் பலவிதம்' நூலிலிருந்து...

பாரதியார் பாடல்கள் சிலவற்றை மொழி பெயர்த்து, காந்திஜியின், "யங் இந்தியா' பத்திரிகையில் வெளியிடச் செய்தார், ராஜாஜி. பாரதியாரின், "ஞானரதம்' நூலுக்கு, 1936ல், "ச.இரா' என்று கையெழுத்திட்டு, ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார் ராஜாஜி.
***

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay - Monaco,பிரான்ஸ்
22-ஜூன்-201210:21:09 IST Report Abuse
Vijay யார் ஜெயிலுக்கு போனாலும் இதைத்தான் செய்வார்கள். சும்மா பேருக்கு ஜெயிலுக்கு போனறவர்கள் தான் இதையெல்லாம் பெருமையாக பேசிக்கொள்வார்கள் !! இவர்கள் அனைவரும் தமிழர்களின் மனதில் பார்ப்பன எதிர்ப்பு வெறியை தூண்டி அதில் குளிர் காய்ந்த கேவலமான அரசியல் வியாதிகள். நமது நாட்டின் பொதுமொழியாகிய இந்தியை நாம் கற்கவிடாமல் செய்த கயவர்கள். இதனால் தமிழன் மற்ற மாநில மக்களிடமிருந்து அன்னியப்பட்டு இருக்கிறான். இவர்கள் சுகமாக கரன்சி நோட்டை எரித்து குளிர் காய்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kathiravan Vadivel - Mayiladuthurai,இந்தியா
21-ஜூன்-201211:39:08 IST Report Abuse
Kathiravan Vadivel அண்ணா (போட்ட ) நாமம் வாழ்க ! கலைஞர் (போட்டுகொண்டிருக்கிற)நாமம் வாழ்க ! தமிழா கதை கேட்டு தூங்கு
Rate this:
Share this comment
Cancel
வெங்கட் - salem,இந்தியா
19-ஜூன்-201215:03:33 IST Report Abuse
வெங்கட் அண்ணா செய்தது எதுவும் தியாகங்கள் கிடையாது. மொழி, இனம் என்று ஒரு குறுகிய வட்டத்தினுள் தமிழர்களை சிறை படுத்தியது வேண்டுமானால், சாதனையாக கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
இனியவன் - Chennai,இந்தியா
19-ஜூன்-201211:09:46 IST Report Abuse
இனியவன் அட என்னங்க ஷங்கர் என்னனவோ சொல்றேங்க. இது எல்லாம் எப்ப நடந்திச்சி?
Rate this:
Share this comment
Cancel
Shankar - பெங்களூர்,இந்தியா
18-ஜூன்-201216:42:36 IST Report Abuse
Shankar "அண்ணாதுரை" அரசியல் நாகரீகம் இல்லாமல் பல முறை பேசியுள்ளார் / தனது கட்சியினர் பேசியதை கண்டிக்காமல் இருந்திருக்கிறார். பெரிதாக, கொள்கை பிடிப்பு எல்லாம் கிடையாது. ஆனால், கருணாநிதிக்கு அவர் 100 மடங்கு மேல். காமராஜை குடியாத்தம் தொகுதியில் திமுக எதிர்க்குமா என்ற நிருபர்கள் கேள்விக்கு, காமராஜ் ஆணா, பெண்ணா, அழியா என்று எனக்கு தெரியாது என்று பதில் அளித்தவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது மாணவர்களை தூண்ட "படிப்பை" விட எதிர்ப்பு முக்கியம் ( செப்டம்பர் போனால் மார்ச், மார்ச் போனால் செப்டம்பர் ) "அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு" என்று முழங்கி விட்டு, திராவிட நாட்டையே சுடுகாட்டுக்கு அனுப்பியவர்கள். ராஜாஜியை "குல்லுக பட்டர்" என்று சொல்லிவிட்டு, அவரோடேயே கூட்டணி வைத்து "மூதறிஞர்" என்றவர்கள் காமராஜை "அண்டங்காக்கை" என்று அரசியல் நாகரிகம் இன்றி அழைத்தவர்கள் இது சிறு பட்டியல் தான், இன்னும் நீளும். "அண்ணாதுரை" யை அவருடைய புலமை, பெருந்தன்மைக்காக பாராட்டலாம். ஆனால், தியாகி என்பதெல்லாம் அபத்தம்.
Rate this:
Share this comment
Cancel
இனியவன் - Chennai,இந்தியா
18-ஜூன்-201213:42:31 IST Report Abuse
இனியவன் அண்ணா தியாகி இல்லையா? கமெண்ட் போட்டா கொஞ்சம் விளக்கமும் போடுங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
18-ஜூன்-201209:17:01 IST Report Abuse
sundaram திரு. பார்த்திபன் அவர்களே, தனF சுக துக்கங்களை மற்றவர்களுக்காக ஊருக்காக நாட்டுக்காக துறப்பதுதான் தியாகம். மக்களுக்காக மக்களின் துயர் துடைக்க முன்வரும்போது தன் துயரினை எண்ணாமல் இருப்பதுவே தியாகம். அண்ணா சிறந்த பேச்சாற்றல் உள்ளவர் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அண்ணா காலத்தில் அவரை மிஞ்சிய பேச்சாற்றல் கொண்டவர்களும் இருந்தார்கள். அதே நேரம் அந்த பேச்சாற்றலால் பொருள் வளம் சேர்க்கும் தொழில் நுட்பம் அக்காலத்தில் இல்லை. அதனால் அண்ணா பேசிய காலகட்டங்களில் யாருமே தனது பேச்சாற்றலால் பொருள் ஈட்டவில்லை. உங்களுக்கு புரியும்படி சொல்வதாக இருந்தால் திரு விக, ஜீவா, கண்ணதாசன், ம. பொ.சி, நெடுஞ்செழியன் போன்றவர்களும் தங்களது பேச்சாற்றலால் பொருள் வளம் சேர்க்கவில்லை. இவர்களும் பேச்சாற்றல் கொண்டவர்களே. அதுமட்டுமின்றி அண்ணா மக்களுக்காக சேவை என்று இறங்கியது அறுபத்தேழுக்குப்பின்னரே. அதுவரை அவர் இந்து மதத்தினரையும் காங்கிரஸ் இயக்கத்தினரையும் வசை பாடுவதிலேயும் இந்து நூல்களை இழிவுபடுத்துவதிலுமே தன் நேரத்தை செலவழித்தார். ஆனால், அவர் முதலமைச்சராக பதவி ஏற்ற மறு கணமே இந்துக்களை வசை பாடுவதை நிறுத்திக்கொண்டது அவர்க்கு மேலும் புகழைக்கூட்டியது. பெருமை சேர்த்தது.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHELDER,நெதர்லாந்து
18-ஜூன்-201205:08:37 IST Report Abuse
GOWSALYA பார்த்தீபன் சொன்ன மாதிரி தான் நானும் படித்தேன். அவருடைய வரலாற்றுப் புத்தகத்தில். அதோடு ,அவர் இறக்கும்போது அவரிடம் ஒரு நயா பைசா கூட இருக்கவில்லை என்றும் படித்தேன். புத்தகம் பொய்யா?...என்னவென்று தெரியவில்லை.......திருமதி.கௌசல்யா.
Rate this:
Share this comment
Cancel
17-ஜூன்-201223:57:29 IST Report Abuse
பார்த்திபன் நாகராஜன் கருணாநிதி அநியாயங்கள் செய்த போதும், அதை அண்ணா அவர்கள் தட்டி கேட்டதில்லை ... இதை அவரின் "பொறுமை" குணம் என வரையறுக்காதீர். அது அவரின் "கோழைத்தனம்".
Rate this:
Share this comment
Cancel
பார்த்திபன் - சென்னை,இந்தியா
17-ஜூன்-201216:55:09 IST Report Abuse
பார்த்திபன் தன் சொந்த வாழ்க்கையில் தனக்கென சொத்து சேர்த்துக் கொள்ளாதவர் அண்ணா. அவரது திறமையும், பேச்சாறலும் அவரை முதல்வராக்கியது. ஆனால், அதைப் பயன்படுத்தி தன் பொருள் வளத்தைப் பெருக்கவில்லை அவர். அது தியாகமில்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.