பெண் மாற்றுத்திறனாளிகளின் தாயம், "தியாகம்'!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

பிறக்கும்போதே, இடது கை இல்லாமல் ஊனமாக பிறந்தவர் அமுதசாந்தி.
ஆனால், சாதிக்க வேண்டும் என்ற வேகத்தோடு வளர்ந்தவர்.
ஆசிரம வாழ்க்கை, இவரது உள்ளத்தில், சேவை மனப்பான்மையை விதைத்து, விருட்சமாக வளரச் செய்தது.
இதன் காரணமாக, முதுகலை படிப்பை முடித்ததும், கிடைத்த வேலையை விட்டு விட்டு, கிராமப்புற ஊனமுற்ற பெண்களுக்கு சேவை செய்வதற்காகவே, மதுரையில் கடந்த 2005ல், "தியாகம் பெண்கள் அறக்கட்டளை'யை துவக்கினார்.
வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல், உடல் தகுதியின்மை, பொருளாதார வசதியின்மை, கல்வியறிவின்மை, சமூகச் சூழல் ஆகியவற்றை காரணம் காட்டி, தங்களைத் தாங்களே முடக்கிக் கொள்ளும் ஊனமுற்ற பெண்கள், உழைப்பதற்கு துணிந்து கூலியை பெறத் துவங்கும் போதுதான், அவர்களுக்கான மரியாதை இங்கு சாத்தியம் என்பதை உணர்ந்தார்.
வீட்டை விட்டு வெளியே வராத வரை, மாற்றுத்திறனுடையோர் வாழ்வில், எந்தவொரு மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதை, அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் உணர்த்தினார்.
இதன் காரணமாக, கிராமங்களில் முடங்கிக் கிடந்த ஊனமுற்ற பெண்களுக்குள், உற்சாகத்தையும், "நம்மால் முடியும்' என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியவர். அவர்கள், மதுரை நகர் பகுதியில் வந்து இலவசமாக தங்குவதற்கு, ஒரு இல்லத்தை ஏற்பாடு செய்தார். பின், அவர்களின் விருப்பம், கல்வி, திறமை அடிப்படையில், தையல் முதல் கம்ப்யூட்டர் வரை கற்றுத்தர, இல்லத்திலேயே இலவசமாக ஏற்பாடு செய்தார்.
தொடர்ந்து மாலைநேரக் கல்வி மையம், சுய உதவிக்குழு, நட்பு வட்டம், கலைக்குழு, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் மையம், ஆகிய எட்டு பிரிவுகள் துவங்கப்பட்டு, இன்றைய தேதிக்கு, மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள, 42 கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான ஊனமுற்ற சகோதரிகள் பலன் பெற்று வருகின்றனர்.
தாங்கள் கற்றுக் கொண்ட பயிற்சிகளால், அதை தொழிலாக மட்டுமில்லாமல், வாழ்வாகவே மாற்றிக் கொண்டனர். இதனால், பாரமாக இருப்பர் என்று நினைத்த அந்த பெண் பிள்ளைகள்தான், தற்போது மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள தம் பெற்றோருக்கு, ஆயிரமாயிரமாய் சம்பாதித்து கொடுத்து, குடும்பத்தை தாங்கி பிடித்து வருகின்றனர்; பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.
தியாகம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும், "நைட்டி' போன்ற உடைகள், தரத்தாலும், நியாயமான விலையாலும் மிகவும் பிரசித்தம் பெற்றுள்ளன. அந்த ஆடைகளை, உடல் ஊனமுற்ற பெண்களிடம் கொடுத்து விற்பனை செய்வதன் மூலம், உடல் ஊனமுற்ற பெண்கள் பலர், தற்போது சிறுதொழில் முனைவர்களாகவே, அடையாளத்தையும், பெருமையையும் பெற்றுள்ளனர்.
"கிராமங்களில் உள்ள உடல் ஊனமுற்ற பெண்களே... உங்கள் பலம் உங்களுக்கு தெரியாது. உங்களால் முடியாதது எதுவுமில்லை, உங்களது ஒரே முயற்சி, "தியாகம் பெண்கள் அறக் கட்டளை'யுடன் தொடர்பு என்பதாக மட்டும் இருக்கட்டும். அதன்பின், உங்கள் வாழ்க்கையில் கவலைகளுக்கும், வேதனைகளுக்கும் வேலையில்லை...' என்று சொல்லும் அமுதசாந்தியின் முழக்கமே, துளிர்த்தே தீரும் நம்பிக்கையின் விதை என்பதுதான்.
தொடர்புக்கு: 9345213417, 0452-2602195.
***

எம். லதா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kuppujothikumar .K.P. - madurai,இந்தியா
14-நவ-201313:19:32 IST Report Abuse
kuppujothikumar .K.P. இப்சாவின் வணக்கம் ,இன்றைய தினமலரில் தங்களை குறித்தும் தங்கள் பணிகள் குறித்தும் பகிர்ந்து உள்ளீர்கள் ...உங்கள் பணிகள் மிக சிறப்பாக உள்ளது ....தங்களின் பணி இன்னும் பல மக்களை சென்றடையவும் சிறந்த சமுக மாற்றத்தை உருவாக்கவும் இப்சாவின் அன்பு கலந்த வாழ்த்துகள் ..... IPSA TRUST சாந்தி நகர் மதுரை -625018....9344307183
Rate this:
Share this comment
Cancel
வைஷ்ணவி - மதுரை,இந்தியா
20-ஜூன்-201216:32:29 IST Report Abuse
வைஷ்ணவி நன்றி! உங்களைப் போல் மன தைரியம் படைத்தவர்களால் நம் நாடு வளர்ச்சி அடைகிறது.
Rate this:
Share this comment
Cancel
Kavitha - chennai,இந்தியா
20-ஜூன்-201212:47:39 IST Report Abuse
Kavitha Hands off to u.....Madam Amutha shanthi............All the Very Best......continoue ur work not only in madurai go ahead to over all tamilnadu.........thank u.......
Rate this:
Share this comment
Cancel
bhuvi - சென்னை,இந்தியா
20-ஜூன்-201210:43:50 IST Report Abuse
bhuvi ஆல் தி பெஸ்ட் மேடம் ......
Rate this:
Share this comment
Cancel
மோகன்ராஜ் - சென்னை,இந்தியா
19-ஜூன்-201220:09:31 IST Report Abuse
மோகன்ராஜ் All the best Amudha madam
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHELDER,நெதர்லாந்து
17-ஜூன்-201201:58:59 IST Report Abuse
GOWSALYA தலைதாழ்த்தி வணங்குகிறேன் அமுதஷாந்தி .....உடல் ஊனம் ஊனமல்ல:மன ஊனமே ஊனம் " என்று சொல்லியிருக்காக .....வாழ்க உங்கள் பணியும் தொண்டும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.