இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

விஜய் நடிக்கும், "தலைவன்'
"துப்பாக்கி' படத்தையடுத்து, கவுதம்மேனன் இயக்கும், "யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்கிறார் விஜய். அதையடுத்து, ஏ.எல்.விஜய் இயக்கும், "தலைவன்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் டிசம்பர் மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திரைக்கு வருகிறது. "தாண்டவம்' படத்தை முடித்ததும், இப்படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இறங்குகிறார் ஏ.எல்.விஜய்.
சினிமா பொன்னையா.

ஒரே படத்தில் நான்கு தேசிய விருது கலைஞர்கள்!
வசந்த் இயக்கி வரும், "மூன்று பேர் மூன்று காதல்' படத்தில், நான்கு தேசிய விருது பெற்ற கலைஞர்கள் நடிக்கின்றனர். சேரன், தம்பி ராமய்யா, அப்புக்குட்டி மற்றும் டைரக்டர் வசந்த் ஆகியோர் தான், அந்த நான்கு கலைஞர்கள். இதில், வசந்த், "தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற குறும்படத்துக்காக, தேசிய விருது பெற்றுள்ளார்.
சி. பொ.,

காஜல் அகர்வால் பெஸ்ட்!
"ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தையடுத்து, கார்த்தியை வைத்து, "ஆலின்னால் அழகு ராஜா' என்ற படத்தை இயக்குகிறார் ராஜேஷ். இதில் நடிக்க முதலில் ஹன்சிகாவிடம் பேசி வந்தார். ஆனால், இப்போது காமெடி கதைக்கு, அவரை விட காஜல் அகர்வால் பெஸ்ட்டாக இருப்பார் என்று, காஜலிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் ராஜேஷ்.
சி. பொ.,

நயன்தாரா ஆர்வம்!
தமிழ், தெலுங்கில் ரீ - மேக் ஆகும், "த டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால், "சில்க் கதையில் நடிக்க நானும் ஆர்வமாக உள்ளேன்...' என்று கூறி, அப்படத்தை தன் பக்கம் இழுத்து வரும் நயன்தாரா, இந்திப் பதிப்பில் வித்யாபாலன் நடித்ததை விடவும், கூடுதல் கிளாமர் காட்டி நடிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி வருகிறார். அடுத்தடுத்து சொன்னால் தொடுத்த காரியம் முடியும்!
எலீசா.

ஹன்சிகா பக்கம் சாயும் ஹீரோக்கள்!
நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டு அலைந்து கொண்டிருந்த படாதிபதிகள், இப்போது ஹன்சிகா பக்கம் திரும்பி விட்டனர். மேலும், ஹன்சிகாவை ராசியில்லாத நடிகை என்று தவிர்த்த இளவட்ட ஹீரோக்களே, "ஒரு கல் ஒரு கண்ணாடி' வெற்றிக்கு பிறகு, இப்போது அவர் பக்கம் சாய்ந்திருப்பதால், தெலுங்கு படங்களை ஏறகட்டி விட்டு, முழுநேர தமிழ் நடிகையாகியுள்ளார் ஹன்சிகா. ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்!
எலீசா.

விவகாரமான மீரா ஜாஸ்மின்!
காதல், தோல்வியில் முடிந்ததால், ஒரு வருடமாக நடிக்காமல் இருந்த மீரா ஜாஸ்மின், "அர்ச்சுன ரங்கதர் வீடு' என்ற மலையாள படத்தில், ரீ என்ட்ரி ஆகியுள்ளார். இந்த படத்தில் மானபங்கப்படுத்தப்படும் இளம் பெண் கேரக்டரில் நடித்துள்ள மீரா ஜாஸ்மின், இனிமேல் இமேஜ் பற்றி கவலைப்படாமல், எந்த மாதிரியான விவகாரமான கதைகள் என்றாலும், நடிக்கத் தயாராகி விட்டதாக கூறியுள்ளார். கிடைச்சா கஞ்சி தண்ணி, கிடைக்கட்டா குழாய் தண்ணி!
எலீசா.

யோசனையில் சந்தானம்!
சந்தானத்துக்கு இருக்கிற மார்க்கெட்டை கருத்தில் கொண்டு, அவரை ஹீரோவாக நடிக்குமாறு சிலர் கேட்கின்றனர். ஆனால், ஏற்கனவே, தான் ஹீரோவாக நடித்த, "அறை எண் 305ல் கடவுள்' என்ற படம் ஓடாததால், மீண்டும் ஹீரோவாக நடிப்பதா, வேண்டாமா என்ற பலத்த யோசனையில் உள்ளார் சந்தானம்.
சி. பொ.,

"சாக்லேட் பாய்' இமேஜ் மாறுமா?
"பேராண்மை' படம், தன் சாக்லேட்பாய் இமேஜை மாற்றும் என்று நினைத்தார் ஜெயம் ரவி; ஆனால், நடக்கவில்லை. அதனால், இப்போது சமுத்திரகனி இயக்கத்தில், தான் நடிக்கும், 50 வயது கொண்ட முதிர்ச்சியான வேடம், அந்த இமேஜை மாற்றும் என்று நினைக்கிறார். அதனால், இவ்வேடத்தில் நடிக்கும் முன், நிறைய ஹோம்ஒர்க் செய்யப் போகிறார்
ஜெயம் ரவி.
சி. பொ.,

"ரவுடி ரத்தோர்' குழு நஷ்ட ஈடு!
பிரபுதேவா இயக்கியுள்ள, "ரவுடி ரத்தோர்' படத்தில், "ஜிந்தா தா ஜிந்தா தா' என்ற வேறொரு படப் பாடலை அனுமதி பெறாமல் பயன்படுத்திஉள்ளனர். இதனால், ஐதராபாத்தை சேர்ந்த ஒரு இசை நிறுவனம், 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரியது. மறுத்தால் நீதிமன்ற பிரச்னையாகி விடுமென்று, பணத்தை கொடுத்து சத்தமில்லாமல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.
சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthi - cbe,இந்தியா
19-ஜூன்-201216:06:17 IST Report Abuse
vasanthi super
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.