யோகாவில் சாதனை படைக்கும் மாணவி!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

யோகாசன போட்டியில் கலந்து இதுவரை, 79 பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார், 16 வயது மாணவி சந்தியா.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த இவரது தந்தை சூரியநாராயணன், தனியார் நிறுவன அதிகாரி. தாயார் புஷ்பலதா, அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது இரண்டாவது மகள் சந்தியா தான், அந்த சாதனை மாணவி.
""என்னுடன், 5ம் வகுப்பு படிக்கும் போது, ஒரு மாணவி, யோகாசனம் செய்ததை பார்த்ததும், எனக்கும் யோகா செய்யும் ஆவல் எழுந்தது. என் தாயாரிடம் கூறியதும், இங்குள்ள கைரளி யோகா மையத்தில் சேர்த்து விட்டார்.
""அங்கு, இரண்டு ஆண்டுகள் யோகாசன பயிற்சி பெற்றேன். 6ம் வகுப்பு பயின்றபோது, இம்மையத் தில் நடந்த மாநில அளவிலான யோகாசன போட்டியில், முதல் முறையாக கலந்து கொண் டேன். 3,000 பேர் பங்கேற்ற இப்போட்டியில், 3வது இடத்தை பிடித்தேன். அது தான் என் முதல் பதக்கம்.
""அதே ஆண்டு, சென்னை நேரு விளையாட்டரங் கத்தில், மற்றொரு மாநில அளவிலான போட்டியில் கலந்து, தங்க பதக்கம் பெற்றேன்...'' என்று, தன் பதக்க அனுபவங்களை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார் சந்தியா.
சென்னை, காஞ்சி, புதுச்சேரி, கோவை என, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த யோகாசன போட்டிகளில் கலந்து, 41 தங்கம், 24 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளார்.
இப்படி மாநிலத்தில் சாதனை படைத்த சந்தியாவுக்கு, கடந்த, பிப்., 2010 திருப்பு முனையை ஏற்படுத்தி தந்தது எனலாம். சிங்கப்பூரில் நடந்த சர்வதேச யோகாசன போட்டியில், இந்தியா சார்பாக கலந்து கொண்டார்.
மூன்று பிரிவுகளில் நடந்த போட்டிகளில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்று, சாதனை மங்கையாக திகழ்ந்தார். இப்படி, 16 வயதிற் குள், மொத்தம், 79 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
""என் சகோதரி சங்கரி, ஒரு முறை பானை மீது பரத நாட்டியம் ஆடினார். இதைப் பார்த்த எனக்கும், நாமும் ஏன் பானையில் யோகாசனம் செய்யக் கூடாது என நினைத்தேன். பயிற்சியாளர் முரளி மாஸ்டர் ஆலோசனைப்படி, பானையில் யோகாசன பயிற்சியை சிறப்பாக செய்தேன். இதே போல், கண்ணாடி டம்ளரிலும் யோகா செய்தேன். தற்போது, ஆணி பலகை மீது, யோகாசன பயிற்சி பெற்று வருகிறேன்...'' என்றார்.
யோகா மட்டுமல்லாமல், பரதநாட்டியம், ஓவியம், கீ போர்டு, வாலிபால் என, சகல கலைகளிலும் ஆர்வமாக திகழும் சந்தியா, படிப்பிலும் சுட்டி. இவரது ஆர்வத்தை பார்த்து, இவர் படிக்கும் தனியார் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் ஊக்கம் அளித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி செந்தமிழ்ச்சோலை நடத்தும் இலக்கிய கூட்டங்கள், தனியார் மற்றும் பள்ளிகளில் நடைபெறும் விழாக்கள், இவரது யோகாசனம் இல்லாமல் நடக்காது. அந்தளவிற்கு யோகாவில் முத்திரை பதித்து வருகிறார்.
கம்ப்யூட்டர் இன்ஜினியராக வர விரும்பும் சந்தியா, இதுவரை யாரும் செய்திராத முயற்சியில் ஈடுபட்டு யோகாசனம் செய்து, கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார்.
பெஸ்ட் ஆப் லக் சந்தியா!
***

என். சரவணன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - திருச்சி,இந்தியா
22-ஜூன்-201217:44:13 IST Report Abuse
LAX சூப்பர் சூப்பர். ஆல் தி பெஸ்ட்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.