பகவானுக்கு எதைக் கொடுப்பது?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

சங்கீத கச்சேரிக்கு நீங்கள் போயிருக்கலாம்; பலவித பாடகர்கள் பாடியதை கேட்டிருக்கலாம். "எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே இளைத்தேன்...' என்று துவங்கும் பாடலை ஒரு கச்சேரியில், பாடகர் பாடியதும் சபையில் இருந்தவர்கள் ஒரேயடியாக சிரித்து விட்டனர்.
காரணம், பாடிய பாடகர் இரட்டை நாடிக்காரர்! "எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே இளைத்தேன்...' என்றால், சரீரம் இளைத்து விட்டது என்று பொருளல்ல! "பிறப்பதும், இறப்பதுமாக இப்படி எத்தனையோ ஜென்மங்கள் எடுத்தெடுத்து, என் உள்ளம் தேய்ந்து, இளைத்து விட்டது. பிறவியே இல்லாமல் உன்னையே (பகவானையே) அடைவது எப்போது?' என்று, உள்ளம் உருகிப் பாடும் பாடல் இது. இதை இரட்டை நாடியான அவர் பாடும்போது, சபையினர் சிரித்து விட்டனர்.
முக்தியை எப்படி பெறுவது? எந்த கடையிலும் அது கிடைக்காது. புண்ணியம் செய்தவர்களின் ஆத்மா மேலுலகம் போனால், அங்கே தான் கிடைக்கும் முக்தி. அதற்கு பகவானிடம் பக்தி இருக்க வேண்டும்; இதயத்தில், பகவானிடம் பக்தி பெருக வேண்டும்; பகவானின் நாமத்தை சொல்வது, காமக் குரோதங்களை விட்டு விடுவது போன்ற நற்குணங்களை பெற்று, பக்தர்கள் மேலே போனால், முக்தி கிடைக்கும்.
அது, ஒரே பிறவியில் கிடைத்து விடாது. முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் பக்தி இருக்குமானால் முக்தி கிடைக்கலாம். இந்த பக்தி சிறுவயதிலேயே இருந்திருந்தால், அது என்றும் நிலைத் திருக்கும். கடைசி காலத்தில் கூட, பகவான் நாமா வாக்கில் வரும். கடைசி காலத்தில் பகவான் நாமாவைச் சொல்லி உயிர் விட்டவனுக்கு முக்தி கிடைக்கும்.
பாகவதத்தில் அஜாமிளன் சரித்திரம் இதற்கு ஒரு உதாரணம்.
மனதை பகவானிடம் வைத்து விட வேண்டும்; வேறு எதிலும் வைக்கக் கூடாது. அப்படி இருந்து விட்டால், ஒரு ஜென்மா இல்லா விட்டாலும், மற்றொரு ஜென்மாவில் முக்தி கிடைக்கும். பகவானிடம் எல்லா ஐஸ்வர்யங்களும் உள்ளன. நம்மிடம் உள்ள பொருட்கள் யாவும் அவன் கொடுத்தது. அப்படி இருக்க, நாம் பகவானுக்கு எதைக் கொடுப்பது? அவனுக்குக் கொடுக்க நம்மிடம் ஒன்று உள்ளது; அதுதான் பக்தி. பகவானுக்கு நம் நெஞ்சில் சிறிய இடமாவது கொடுத்து, அவனிடம் பக்தி செய்தால், முக்தி பெறலாம்.
நாம் இதற்குத் தான், பாடுபட வேண்டும். மற்றபடி செல்வம், சுக துக்கம் எல்லாம் விதி வசப்பட்டு நிற்பவை. பக்தி, பக்தி மார்க்கம் இவை தான் முக்திக்கு ஆதாரம். மனம் இதில் ஈடுபட வேண்டும். மற்ற களியாட்டங்களெல்லாம் முக்திக்கு வழியாகாது.
***

ஆன்மிக வினா-விடை!
மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?
மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை, அதிக அளவில் ஈர்க்கும் சக்தி மாவிலையில் உண்டு. அதனால் தான் மக்கள் அதிகம் கூடும் திருவிழாக்கள், பண்டிகை, கும்பாபிஷேகம் ஆகியவற்றின் போது, மாவிலை தோரணம் கட்டுகின்றனர்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gokul Shankar S - Pollachi,இந்தியா
22-ஜூன்-201208:47:09 IST Report Abuse
Gokul Shankar S Thirumurugan - singapore, Thanks for sharing...
Rate this:
Share this comment
Cancel
Thirumurugan - Singapore,சிங்கப்பூர்
21-ஜூன்-201214:26:09 IST Report Abuse
Thirumurugan திரு. ரவி, மாவிலைக்கு என்றே உள்ள ஒரு தனித்துவம் அது. மரத்தில் இருந்து பறித்து சில நாட்கள்... ஆம் சில நாட்கள் ஆகியும் மாவிலைகள் உயிருடன் இருக்கும். ஒளிச்சேர்க்கை செய்யும். எனவே தோரணம் கட்டிய பின்னும் சில நாட்களுக்கு அந்த இலைகள் காற்றில் உள்ள கரியமில வாயுவை எடுத்து கொண்டு, பிராண வாயுவை வெளி விடும். இந்த விஷயம் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் என் தாத்தா சொல்லி நான் தெரிந்து கொண்டேன். பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்திருந்த அவருக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தது, அத்துடன் அதனை சிறுவர்களுக்கு புரியும்படி சொல்லத் தெரிந்திருந்தது இரண்டுமே ஆச்சரியம்தான்.
Rate this:
Share this comment
Cancel
Gokul Shankar S - பொள்ளாச்சி,இந்தியா
18-ஜூன்-201210:22:33 IST Report Abuse
Gokul Shankar S வெங்கட், அவர்களே என்னுடைய கருத்தை சொல்கிறீர்களா?
Rate this:
Share this comment
Cancel
வெங்கட் - Chennai,இந்தியா
18-ஜூன்-201208:03:11 IST Report Abuse
வெங்கட் சார் ஒரு பாசிடிவ் விஷயம் சொல்லும்போது அத நீங்க அக்செப்ட் பண்றீங்களோ இலையோ ஆனா அத கிண்டல் பண்ண கூடாது. அதையும் இப்டி ஷேர் பண்ண கூடவே கூடாது. ப்ளீஸ் தப்பா எடுத்துகாதிங்க. நெறைய பேர் தினமலர் ல வர ஆன்மிக பகுதிய படிப்பாங்க. அவங்க பாசிடிவ் நெஸ் அ கெடுக்காதிங்க.
Rate this:
Share this comment
Cancel
S .Ravi - Brisbane,ஆஸ்திரேலியா
17-ஜூன்-201216:30:43 IST Report Abuse
S .Ravi மாமரத்தில் இருக்கும் பொது, மாவிலைக்கு சக்தி இருக்கலாம். மரத்திலிருந்து பறித்து தோரணமாக கட்டிய பின் அந்த இலைக்கு உயிர் கிடையாது. அதனால் மாவிலை அலங்காரத்திற்காக செய்வதே ஒழிய அறிவியல் விஷயமாக இல்லை. கரி அமில வாயுவை இழுத்து பிராணவாயுவை வெளி விடுவது எல்லா மர, செடி இலையும் செய்வதுதான், அந்த இலையும் மரமும் உயிரோடு இறக்கும் போது.
Rate this:
Share this comment
Cancel
Gokul Shankar S - பொள்ளாச்சி,இந்தியா
17-ஜூன்-201210:23:19 IST Report Abuse
Gokul Shankar S இதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..சாமி கூட கும்பிட வேண்டாம்..களங்கமற்ற மனசும், உண்மையும், அன்பும் உங்களிடம் இருந்தால் போதும்..கடவுளுக்கு நீங்கள் ஆணையிடலாம்..அவன் கேட்பான்...இது மூன்றையும் அடைவது கடினம் என்பதால் பக்தி என்ற பாதையை தேர்ந்தெடுக்கலாம்...Good Article..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.