அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

அன்புள்ள அம்மா —
நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள். எனக்கு வயது 30. திருமணமாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். படிப்பு முடிந்த, அடுத்த மாதம் முதல், இன்று வரை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கணவருக்கு, 34 வயது. இரண்டு தங்கைகள்; திருமணமாகி விட்டது. என் கணவர் முன்கோபக்காரர். அவர், வீட்டிற்கு ஒரே பையன் என்பதால், மிகவும் செல்லமாகவும், தவறை சுட்டிக்காட்டி திருத்தவும் பெற்றோர் முற்படவில்லை. அவரே சரியாகி விடுவார் என்றனர். அதற்கு இடையூறாக நான் வந்தேன். "குடிமகன்'களை கண்டால், குழந்தை பருவத்திலேயே வெறுப்பவள் நான். என் கணவர், வாரந்தோறும் நண்பர்களுடன் சென்று மது அருந்துவார். இதனால், எங்களுக்குள் சண்டை வரும், பின் சமாதானம் ஆவோம். தற்போது, வார நாட்களிலும் ஆரம்பித்து விட்டார். சண்டை பலமானது, 15 நாட்கள் பேசாமல் இருந்தோம்.
அவருடைய தனிப்பட்ட சந்தோஷத்திற்கு பின் தான், நாங்கள் என்று என்னிடம் கூறுவார் என் கணவர். ஒவ்வொரு முறையும் சண்டை போடும் போது, "இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன்; திட்டமாட் டேன்...' என்று மன்னிப்பு கேட்பார். ஆனால், மீண்டும் அதை தான் செய்கிறார்.
நான் பல வருடங்களாக, ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். என்னுடைய படிப்பை விட, என் பொறுப்பை நம்பி, நிறுவனம் என்னை மேலாளராக பணியமர்த்தியுள்ளது. என் கணவர் அடிக்கடி நிறுவனத்தை மாற்றுபவர். காரணம், அவரது முன்கோபம். தற்போது, ஏழு மாதங்களாக, ஒரு நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். என்னை விட, இப்போது அவர் அதிகம் சம்பாதிக்கிறார். அடிக்கடி அவர் எங்களை தனியே விட்டுவிட்டு, அவரது தாய் வீட்டில் தங்குவார். காரணம், அங்குதான் நண்பர்கள் <உள்ளனர். அவரது பெற்றோரும், அவர் எது செய்தாலும் கண்டிக்கமாட்டார்கள்..
அவரால், நான் பட்ட துயரங்கள், வேறு எந்தப் பெண்ணிற்கும் வரக்கூடாது. ஆயினும், அவரை பிரிய எனக்கு மனமில்லை. இன்று, நாளை சரியாகி விடுவார் என்ற நம்பிக்கை.
ஒரு நாள் இரவு 10:30 மணிக்கு, அவருக்கு போன் வந்தது. மெதுவாக ஒரு நிமிடமே பேசினார். எப்போதும் அவர் போனில் பேசுவது, நேரில் பேசுவது போல இருக்கும். நான் எழுந்து அவரை பார்த்தேன், போனை கையில் வைத்திருந்தார். யார் என்றதற்கு, ஆபீசில் இருந்து என்று சொல்லி விட்டார். எனக்கு இதுநாள் வரை, அவர் மீது இல்லாத சந்தேகம் அன்று வந்தது. அடுத்த நாள் போனை பார்த்தேன், அவர் அந்த நம்பரை அழித்துவிட்டு, வேறு ஒரு நம்பரை டயல் செய்திருந்தார். சந்தேகம் வலுத்தது. அன்று மாலை வருவார் கேட்கலாம், என்று நினைக்க, "மாலை 6.00 மணிக்கு நண்பரின் அப்பா இறந்து விட்டார், அங்கு செல்கிறோம், நாளை தான் வருவேன்...' என்று கூறி சென்று விட்டார். நான் மிகவும் குழப்பமடைந்தேன். நான்கு வருடங்களாக, அவர் மீது இந்த சந்தேகம் வந்தது கிடையாது. ஏதோ, தவறு செய்கிறார் என்று, இரவு 9:30 மணிக்கு போன் செய்து, "தனியே காரில் செல்கிறீர்கள் எனக்கு இனம் புரியாத கவலையாக இருக்கிறது...' என்றேன். அவர் "தைரியமாக இரு, காலையில் வந்து விடுவேன்...' என்றார். அவர் செல்கிறேன் என்று சொன்ன இடம், வந்த நேரம், சென்ற நேரம், எல்லாம் தவறாக இருந்தது.
நான், அவருடைய நம்பரிலிருந்து சென்ற, போன் கால் லிஸ்ட் எடுக்க சொல்லியிருந்தேன். லிஸ்ட் வந்தது, ஒரு நம்பருக்கு கடந்த, ஐந்து நாட்கள் மட்டும் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்., சென்றிருந்தது. அதன் முகவரியும் கிடைத்தது,
என் போனிலிருந்து அழைத்தால், அது ஒரு பெண், தவறான பெயரை கூறினாள். நான், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். அன்று மாலை என் கணவரை, கோவிலுக்கு அழைத்து சென்று விசாரித்தேன்.
அவர் முதலில் இல்லை என்றார், "என்னிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கிறது' என்ற பிறகு கூறினார்...
இரவு 11.00 மணிக்கு, பஸ்சில் வரும் போது என்னிடம் நம்பர் கொடுத்தாள். தொடர்ந்து பேசினாள், நானும் பேசினேன். அவள் மற்றும் அவளுடன் இரண்டு பேர் சேர்ந்து, அன்று இரவு வெளியில் தங்கினோம். மது அருந்தினோம் தவறு செய்யவில்லை. அவர்கள் கல்லூரி மாணவியர் என்றார்.
"என்னை ஏமாற்றி விட்டாய், எனக்கு துரோகம் பண்ணி விட்டாய், இனி வேண்டாம்...' என்றேன். அவரும் அழுதார், "இனி, சாகும் வரை உனக்காக வாழ்வேன்...' என்றார். "உங்களை மன்னிக்க மாட்டேன்; ஆனால், அதை மறக்க முயற்சி செய்கிறேன்...' என்றேன். சென்ற மாதம், மீண்டும் அனைத்தும் நடந்தது. ஆனால், தற்போது அவர் எங்களை கண்டுகொள்வதில்லை. அவர் சந்தோஷத்தை பெரிதாக நினைக்கிறார். நான் என்ன செய்வது? அவரை, அவர் வழியிலே விடுவதா? நான் மாறுவதா? அவரை பிரிந்து தனியாக வாழலாமா?
என்னைப் பற்றி:
நான் மாதம், 17,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். எனக்கு மூன்று சகோதரிகள். நான் கடைசி பெண், அனைவரும் குடும்பத்துடன் வாழ்கின்றனர், எனக்கு சகோதரர்கள் இல்லை, பெற்றோர் வயதானவர்கள். என் காலம் வரை, நான் தான் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும். வேலையிலும், வீட்டிலு<ம் கண்டிப்புடன் செயல்படுபவள். எதையும் தனியே சமாளிக்கும் தைரியம் உண்டு. அவர் இப்படி ஆனதற்கு என்னிடம் எதுவும் தவறு இருக்கிறதா? அந்த பெண்ணை என்ன செய்வது, அவளுக்கு எதாவது தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு நல்ல பதிலை எனக்கு சொல்வீர்கள் என்று காத்திருக்கிறேன்.
இப்படிக்கு அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —
உன் கடிதத்தை படித்தேன்.
தவறு செய்த கணவனை பிரிந்து வாழலாமா, கணவனோடு கூட்டு சேர்ந்து, தவறு செய்த பெண்ணை தண்டிக்கலாமா போன்ற பல யோசனைகளை, மனதிற்குள் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறாய்.
வீட்டுக்கு ஒரே மகன் என்பதால், செல்லம் கொடுத்து உன் கணவனை குட்டிச்சுவராக்கி விட்டிருக்கின்றனர் அவரது பெற்றோர். நண்பர் களுடன் குடித்துக் கும்மாளம் போட, பெற்றோர் இருப்பிடம் தான் பாதுகாப்பானதாய் இருந்திருக் கிறது உன் கணவனுக்கு. உன் கணவனோடு சேர்ந்து, உன் மாமனாரும் குடிப்பாரோ, என்னவோ?
உன் கணவனுக்கு, உன் மீதும், குழந்தை மீதும் அன்பிருக்கிறது. வீட்டு சாப்பாட்டின் மீது, நிரந்தர அபிமானமாக இருந்தும், அவ்வப்போது விடுதி சாப்பாடுக்காகவும், நாக்கை தொங்க போட்டுக் கொண்டு திரிகிறான்.
நீ மாதா மாதம் சம்பாதித்துத் தரும், 17 ஆயிரம் ரூபாய் சம்பளம், அவனுக்கு மிக மிக தேவையான ஒன்று. அதனால் தான், அவனை நீ கோவிலுக்கு கூட்டிச் சென்று விசாரிப்பதற்கெல்லாம் உடன் படுகிறான். மன்னிப்பும் கேட்கிறான். "இனி, சாகும் வரை உனக்காக வாழ்வேன்...' என, அரசியல்வாதி போல் வாக்குறுதியும் தருகிறான்.
உன் கணவன் விஷயத்தில், என்ன மேல் நடவடிக்கைகள் எடுப்பது என பார்ப்போம்.
நீ இப்போதிருக்கும் கறார் கண்டிப்புடனேயே, உன் கணவனை வழி நடத்து. மகனை நேர்வழிப் படுத்தச் சொல்லி, மாமனார், மாமியாருக்கு நெருக்கடி கொடு.
உன் கணவனுக்கு, முழு உடல் பரிசோதனை செய்து, உயர் ரத்த அழுத்தமிருக்கிறதா என பார். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், முன்கோபம் வரும். தகுந்த மருத்துவம் பார்த்து, அதை கட்டுக்குள் கொண்டு வரலாம் நீ.
உன் கணவனோடு சேர்ந்து, தவறு செய்த பெண்களை எல்லாம், தண்டிக்க வேண்டுமெனில், நீ மாவோயிஸ்ட் போல ஆயுதம் தாங்க வேண்டி வரும். இது தேவையா செல்லம்?
மொத்தத்தில், உன் கணவன் பிரச்னையை, எடுத்தேன் - கவிழ்த்தேன் என கையாளாதே மகளே. உன் அவசர முடிவுகள், மகனையும், உன் வயதான பெற்றோரையும், மூன்று சகோதரிகளின் குடும் பத்தையும், பாதித்து விடக் கூடாது. உன் கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த, அவனை, "டி - அடிக்ஷன்' சென்டருக்கு அழைத்துச் செல். ஆல்ஹகாலிக் அனானிமஸ் கூட்டங்களில், அவனை கலந்து கொள்ள வை. திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடுவனுக்கு, எய்ட்ஸ் நோய் வரும் என முன்னெச்சரிக்கை செய்.
உன் வாழ்வில் நீ விரும்பும் மாற்றங்கள் கட்டாயம் நிகழும் மகளே; காத்திரு!
என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (113)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சலீம் சவுதி அரேபியா - திருவண்ணாமலை,இந்தியா
23-ஜூன்-201216:29:02 IST Report Abuse
சலீம் சவுதி அரேபியா ஹலோ (விஜயா u s a )::::::::::: இது ஒன்றும் அமெரிக்கா இல்ல. தமிழ் நாட்டு பெண்மணி. எந்த ஒரு பழகத்தையும் எளிதில் ஜன்னல் வழியாக தூக்கி போட முடியாது, பொறுமையாகதான் செயல் பட முடியும். விஜயா... அந்த பெண்மணிக்கு உன்னால் நல்ல ஆண் மகனை காண்பிக்க முடியுமா ( சாதாரண விஷயம் அன்பால் குணப்படுத்தி விடலாம் ) அன்பால் தான் எங்களுக்கு காந்தி தாத்தா விடுதலை வங்கி கொடுத்தார், அராஜகத்தால் அல்ல.
Rate this:
Share this comment
Cancel
Venku - T.N,இந்தியா
23-ஜூன்-201212:38:49 IST Report Abuse
Venku vijay USA .. usa ..மாற்றுச் சிந்தனையுடன் எழுதியுள்ளீர், இன்னும் தெளிவு படக் கூறி இருந்தால் நன்று .
Rate this:
Share this comment
Cancel
மான்விழி - சென்னை,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-201209:52:39 IST Report Abuse
மான்விழி ஐயோ correct ஆ சொன்னீங்க விஜய் usa ..... இங்கு இந்த நாட்டமை கொசு தொல்லைகளை தங்க முடியலப்பா ..... குறிப்பா ஒருத்தரை சொன்னா அவ்வளவுதான் இன்னொருத்தர் நமக்கு அட்வைஸ் பண்ணியே கொன்னுடுவாங்க ...... பாத்து ...................
Rate this:
Share this comment
Cancel
Vijay_USA - USA,யூ.எஸ்.ஏ
22-ஜூன்-201223:08:00 IST Report Abuse
Vijay_USA இங்கு கருத்து எழுதியிருக்கும் அனைவரும் பெண் என்பவளுக்கு மனம் என்று ஒன்று உண்டு...அதில் ஆசாபாசங்கள் உண்டு என்பதையே மறந்துவிட்டனர்! இங்கு எத்தனை பேர் ஆண் மாறவேண்டும் என்று எழுதியுள்ளனர்? ஆயுள் தண்டனை என்பது 14 வருடம்...நன்னடத்தையில் அதற்கு முன்னே வெளியேறிவிடுகிறார்கள். ஆனால் பெண்? சாகும் வரை தண்டனை அனுபவிக்கிறாள்..இது போன்ற ஆண்கள் திருந்தியதாக சரித்திரம் இல்லை! திருந்தியவர்கள் இருந்தால், அது அவர்களாகவே இல்லை..அதிரடியாகத் திருத்தப்பட்டவர்கள் தான். பெண்ணே பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக நாட்ட..இது உடம்பில் சீழ் பிடித்த பகுதி மாதிரித்தான். வெட்டி எரிந்து விட்டு மிச்சம் இருக்கும் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள். குறிப்பு: இந்த பெண் சம்பாதிப்பதால் திமிராக எழுதியுள்ளார், பெற்றோரை காப்பாற்ற காரணம் தேடுகிறாள், சந்தேகிக்கிறாள் என்றெல்லாம் எழுதியுள்ள உங்கள் வார்த்தைகளில் தான் - திமிர், ஆணவம், சந்தேகம் எல்லாம் நிறைய உள்ளது! ஒன்று எனக்கு புரிகிறது - இங்கு சிலர் ஒரு குரூப்பாக சேர்ந்து நாட்டாண்மை பண்ணுகிறார்கள்..அதை தவிர்த்து உங்கள் வீட்டிலுள்ள ஓட்டைகளை அடைக்க வழியைப் பாருங்கள்! Too many cooks, really spoiled the food here!
Rate this:
Share this comment
Cancel
தமிழா - சென்னை,இந்தியா
22-ஜூன்-201212:24:18 IST Report Abuse
தமிழா சத்யா - வாஷிங்டன்,யூ.எஸ்.ஏ மற்றும் JANAKI - நியூDELHI,இந்தியா அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் ..
Rate this:
Share this comment
Cancel
புதியவன்ராஜ் - புதுதில்லி,இந்தியா
22-ஜூன்-201210:29:46 IST Report Abuse
புதியவன்ராஜ் நண்பர் தமிழா, அரசு நிறுவனமும் அலை பேசி நடத்துகிறது. அவர் மிகவும் இலகுவாக அழைப்பு விபரம் பெற்றதாக சொல்லவில்லையே.
Rate this:
Share this comment
Cancel
JANAKI - நியூDELHI,இந்தியா
21-ஜூன்-201222:08:37 IST Report Abuse
JANAKI பிறன் மனை நோக்குவது சில ஆண்களின் பிறவிக் குணம். இந்த மாதிரி மனிதர்களை மணந்தவர்கள் தங்களின் கணவன்மார்களை சி.ஐ.டி வேலை பார்ப்பதை காட்டிலும், அவர்கள் மீது தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் நல்ல குணங்களை பாராட்ட வேண்டும். குடும்பத்தில் அமைதியும் சந்தோசமும் இருந்தால் இவர்கள் மனைவியே கதி என இருப்பார். அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் அன்பால் காட்டு விலங்குகளையே அடக்கும் போது கணவனை அடக்க முடியாத அன்பு இருந்தால் எதுவும் சத்தியமே .ஜானகி . புது டில்லி
Rate this:
Share this comment
Cancel
தமிழா - சென்னை,இந்தியா
21-ஜூன்-201217:21:22 IST Report Abuse
தமிழா ஒரு நண்பர் கூறியிருந்தார். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மற்றொருவருடைய தொலைபேசி அழைப்பை பெற முடியும் என்று... முதலில் அந்த நண்பர் தகவல் அறியும் சட்டம் என்னவென்று தெரிந்து கொள்ளட்டும். RTI - Only for Government and Public Sectors not for Private companies. If you have any issues on Private companies such as Mobile phone etc need to file a complaint its regulating authority TRAI. If TRAI doesn't help you then you can file RTI against TRAI. அந்த பெண் கால் லிஸ்ட் அவ்வளவு ஈசியாக பெற்றிருக்க முடியாது. அதையும் மீறி அந்த பெண் பெற்றிருக்கிறாmf.... அப்பா எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்திருக்க முடியும்..... சந்தேகத்துடன் வாழ்ந்திருப்பார் போலும்....
Rate this:
Share this comment
Cancel
புதியவன் ராஜ் - புதுதில்லி,இந்தியா
21-ஜூன்-201214:51:31 IST Report Abuse
புதியவன் ராஜ் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் வந்து எங்களுடன் கருத்தை பரிமாறிக்கொள்ளும் கௌசல்யா மேடம் அவர்களுக்கு நன்றி. பிரவீன், பொது தளத்தில் கடிதம் எழுதுபவர் எல்லா விபரங்களையும் கூற வேண்டும் என்று எதிர் பார்க்க முடியாது. அழைப்பு விபரங்களை எப்படி பெற்றார் என்பது இங்கு பிரசினை அல்ல. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கூட பெறலாம். முழு விபரம் தெரியாமல் ஒருவரின் கூற்றை சந்தேகப்படுவது சரி அல்ல.
Rate this:
Share this comment
Cancel
cat - bangalore,இந்தியா
21-ஜூன்-201210:19:00 IST Report Abuse
cat தமிழன் சார் உங்கள் கொள்கைக்கு கோடி வணக்கங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.