கவிதைச்சோலை!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

இருத்தல்!
* மனதிற்குள் ஆயிரம் பிரச்னை
வைத்துக் கொண்டே இன்முகத்தோடு
புன்முறுவல் பூத்துக் கொள்கிறோம்...
நம் புகைப்படங்களில் அழகு
சேர்த்துக் கொள்ள!

* உள்ளுக்குள்ளே பூகம்பங்கள்
ஓராயிரம் தகதகத்து எரிமலைக் குழம்யை
கக்கிக் கொண்டிருக்க...
வெளிப்படையாய் நாம் சேர்ந்து வாழ்வதைக்
காட்டிக் கொள்ள!

* ஓலமிடும் சோகங்கள்
கண்ணாமூச்சிகாட்டி
விளையாடிக் கொண்டிருக்க...

* உனக்கும் எனக்கும் அலைவரிசை
ஒரே வரிசையில் ஓடாமல்
தடம்புரண்ட தண்டவாளங்களாய்
இரு வேறு கோணங்களில்
பறந்து கொண்டிருக்க...

* இன்னும் ஒரே கூரையின் கீழ்
ஒன்றாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
வலிகளைச் சுமந்து கொண்டு!

* தாம்பத்யம் என்ற பெயரோடும்,
தாலி இட்ட வேலியோடும்...
இரட்டை மாடு பூட்டிய
வண்டிபோல, ஏதோ சுமைகளைத்
தாங்கிக் கொண்டே...

* ஏனோ இனம் புரியாத
இத்யாதிகளுடன் எதிர்கால
சந்ததியரின் மகிழ்ச்சிக்காகவும்...

* இறுமாப்போடு இயன்றவரை
அருமையான ஜோடியாய்
நல்ல பெற்றோராய் வாழ
முயற்சித்துக் கொண்டே...

* நீயும், நானும் இன்னும்
வெட்ட வெளியில்
ஏகாந்தத்தில் எதையோ
பேசிக் கொள்கிறோம்
பெருமூச்சுக்களோடு...

* இனிப்பும், கசப்பும் கலந்தது தான்
வாழ்க்கை என
நமக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு
கோப தாபங்களை
காற்றோடு மோதிக் கொள்கிறோம்...

* இருப்பினும்,
வாழ்க்கையை வாழ்ந்து
பார்த்து விட துடித்துக்
கொண்டே
விட்டுக்கொடுக்க மனம் வராமல்
போலியாய் வறட்டுக்
கவுரவங்களோடு...

* இருத்தல் என்னும் நிலையில்
இன்னும் இருந்து கொண்டே
வாழ்க்கையை வீணாக
வாழ்ந்தோ, வீழ்ந்தோ,
இழுத்துக் கொண்டிருக்கிறோம்
நுரை தள்ளியவாறு!
ரஜகை நிலவன், துபாய்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmanan - madurai,இந்தியா
23-ஜூன்-201216:21:40 IST Report Abuse
Lakshmanan மனதிற்குள் புதைந்துள்ள உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.....
Rate this:
Share this comment
Cancel
ம்ச்ப்.malairaj - s.kalvimadai,இந்தியா
17-ஜூன்-201215:44:57 IST Report Abuse
ம்ச்ப்.malairaj This is human being .All the best
Rate this:
Share this comment
Cancel
அம்மு - madurai,இந்தியா
17-ஜூன்-201213:28:37 IST Report Abuse
அம்மு unmaiyilayea periya unmai ithu.yarala ethayellam velia solla mudiyum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.