அம்மா!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

கண்ணாடி முன் நின்று, தன் தலையை அரைமணி நேரமாக கலைத்துக் கலைத்து சீவீ கொண்டிருந்தான் சித்தார்த். அது, பதினெட்டு வயசின் இயல்பு... அப்படித்தான் செய்வர் என, சுபாஷினி புரிந்து வைத்திருந்தாள்.
ஆனால், ""அம்மா... எவ்வளவு நேரமாச்சு... சீக்கிரம் டிபன் வைக்க மாட்டியா... நான் காலேஜ் கிளம்ப வேண்டாமா?'' என்று வெறுப்புடன் மகன் கத்துவது, அவளுக்கு புதுசு. கொஞ்ச நாளாத் தான் இப்படி... ""ரெடியாயிடுச்சு... வா சாப்பிட...''
""என்ன இது... இன்னிக்கும் உப்புமாதானா?''
""சித்தார்த்... பத்து நாளைக்கப்புறம் இன்றுதான் உப்புமா செய்யறேன். ஏதோ, தினமும் செய்யற மாதிரி சலிச்சுக்கறே... உனக்குத்தான் உப்புமா பிடிக்குமே!''
""எப்பவும் டேஸ்ட், ஒரே மாதிரியாதான் இருக்குமா... இப்ப எனக்குப் பிடிக்கலை.''
இந்த உரையாடல், சாதாரண தன்மையுடன் நடக்கவில்லை. இருவரும் முக சுளிப்புடனும், சலிப்புடன் பொறுமை யின்றியும் கத்திக் கொண்டனர்.
""வீட்டில, அப்பான்னு ஒருத்தர் இருந்திருந்தா, உனக்கு பயமிருந்திருக்கும். அதான் பத்து வருஷத்துக்கு முந்தியே துரத்திட்டியே, உன் ராஜ்ஜியம் தானே... நீ செய்வதை நான் சாப்பிட்டுத் தானே ஆகணும்...''
அதிர்ந்து, அவனை திடுக்கிடலுடன் பார்த்தாள் சுபாஷினி. வாயடைத்துப் போயிற்று, தன் மகனா இப்படிப் பேசுகிறான்.
""எனக்கு சாப்பாடே வேண்டாம்... உண்மையைச் சொன்னா முறைக்கறே...'' கையைக் கழுவிக் கொண்டு, புது பைக்கில் பறந்து விட்டான். அது, அவள் வாங்கிக் கொடுத்த பைக் தான்.
"என்னாச்சு இவனுக்கு... இவ்வளவு சுடு சொற்களை ஏதோ, மலர் தூவுவது போல் தூவிவிட்டுப் போக, இவனால் எப்படி முடிகிறது?'
அலுவலகத்திற்கு நேரமாகி விட்டதை உணர்ந்தும், டைனிங் டேபிள் மேல் தலை கவிழ்த்து கதறி அழுதாள் சுபாஷினி.
தனி மனுஷியாக, அவனை பத்து வருஷம் ஆளாக்கி விட்டதற்கு இதுதான் பரிசா?
அவன் விலகிக் கொண்டே போவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு எட்டு வயது பிஞ்சு சித்தார்த்தும், பத்து வருஷம் முந்தி, முட்டி மோதிய கணவன் வெங்கட்டின் ஞாபகமும் வந்தது.
முதல் சில வருடங்கள், திருமண வாழ்க்கை இனிக்கத்தான் செய்தது. வெங்கட் கிடைத்ததற்கு பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
"உன் இதழுக்கு புன்னகிக்க மட்டும் தான் தெரியுமா சுபாஷினி... நான் கொடுத்து வைத்தவன்...' என்று, எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்து தான், இல்லறத்தை நடத்தினான் வெங்கட்.
நல்ல பாம்பு போல், சுமதி என்ற பெண் அவன் இதயத்தில் நுழைந்து விஷமாகி விட்டாள். அவனும் அனுமதித்தான். பிறகு, கட்டியவள் முகம் பார்க்கக் கூட கசந்தது. கண்களை சந்திக்காமல் சுவர் பார்த்துப் பேசினான்.
"என்னங்க... என்னாச்சு... இப்பவெல்லாம் குழந்தையை கூட கொஞ்சுவதில்லை...' ஆதங்கமாகக் கேட்டாள். அவன் வெற்றுப் புன்னகையை பதிலாகத் தந்தான்.
சேர்ந்துதான் படுத்தனர். ஆனால், அவன் முதுகு காட்டியே படுத்துக் கொண்டான். தான் காலாவதி ஆகிவிட்டது புரியாமல் கலங்கினாள் சுபாஷினி.
பரபரப்புடன் கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள்.
"சற்று சதை போட்டிருப்பதால் பிடிக்கலையா... முடியின் அடர்த்தி குறைந்து விட்டது; அதுதான் காரணமா... அக்கறையாக அலங்கரித்துக் கொள்வதில்லை; அதுவாக இருக்குமோ... ஆனாலும், நன்றாகக் தானே இருக்கிறேன்...'
அவன் மனசு நன்றாக இல்லை என்பது தான் பிரச்னை என்று புரியாமல் போயிற்று.
"என்னங்க... சதை போட்டது பிடிக்கலையா... எக்சர்சைஸ் செஞ்சு எடையை குறைச்சிடறேன். முடி கொட்டிடுச்சா... இப்ப ஹெர்பல் ஆயில் பயன்படுத்தினால் சரியாயிடும். வேறு என்ன குறை... மாத்திக்கறேன். சொல்லுங்க வெங்கட்...' அவள் நெகிழ்ந்த கண்ணீர் கெஞ்சல், அவனை எரிச்சல்படுத்திற்று.
"சுபா... வீணா பிரச்னை பண்ணாதே. இந்த வயதில், உன்னுடன் என்ன ரொமான்ஸ் வேண்டியிருக்கு... எதுக்கு புதுப்பெண் மாதிரி அலையற... மகனுக்கு எட்டு வயசாச்சு...'
அவமானத்தால் முகம் சிவந்து போனாள் சுபாஷினி.
எதற்கு தவிக்கிறாள்?
அன்பான அவன் ஒரு பார்வைக்காக... இது கூடவா புரியாது, தன்னுடன் பத்து வருஷம் வாழ்ந்த அவனுக்கு. சூடான அயர்ன் பாக்ஸை நெஞ்சில் வைத்து தேய்த்து விட்டது போல் இருந்தது. அந்த ரணம் மனசை பொசுக்கிற்று. தாங்க முடியாமல், முதல் முறையாக குரல் உயர்த்தினாள்...
"ஏன் இப்படி தப்புத் தப்பாய் புரிஞ்சுக்கறீங்க... உங்களுக்கு புத்தி கெட்டுப்போச்சா?'
அவ்வளவுதான்... சுனாமி போல் ஒரு ஆட்டம் ஆடி, அவளை கண்டபடி திட்டிவிட்டு, வெளியேறி விட்டான். நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு!
எப்படி வெளியேறுவது என்று தவித்தவனுக்கு, கிடைத்த ஒரு காரணம், "எதிர்த்துப் பேசுகிறாள்... எவனுடனோ தொடர்பு...'
சுபாஷினி தன்னை நொந்து கொண்டாள். "சும்மா இருந்திருக்கலாம்... வாயை விட்டதால் இப்படியாகி விட்டதே...'
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக கேள்விப்பட்டு புரிந்து கொண்டாள், அவன் விலகினதன் காரணம், இன்னொரு பெண் என்று. அந்த மயக்கத்தில், பெற்ற குழந்தை மேல் உள்ள பாசம் கூட அற்றுப் போய், விட்டது.
தகுதியற்றவனை மனதில் வைத்து, இனி, எதற்கு கண்ணீர் சிந்தணும்?
சித்தார்த் அவள் உலகமானான். இருவருக்குள் அவ்வளவு பாசம், நெருக்கம். சந்தோஷமாக இருந்தனர்.
எப்படி புகுந்தது இந்த பேதம்? வயது காரணமா; வேறு ஏதாவதா? ஏன் இப்படி தீ கங்காக வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகிறான்?
அலுவலகம் விட்டு, வீட்டிற்கு வரும் போது, மனசு பாரமாக இருந்தது. சந்தோஷமேயில்லாம சமையலை ஆரம்பித்தாள். கை தானாக மகனுக்கு பிடித்ததை செய்து கொண்டிருந்தது. பத்து மணிக்கு வாசலில் பைக் சப்தம் கேட்க, வாசலுக்கு ஓடி வந்தாள் சுபாஷினி.
""என்னடா... இவ்வளவு லேட்?''
""ஆரம்பிச்சிட்டியா... நான் என்ன சின்னக் குழந்தையா... நீ போட்ட கண்டிஷன்ஸ்... ஆறு மணிக்கெல்லாம் வீடு வந்திடணும். சிகரெட்டா நோ; ப்ரெண்ட்ஸ் நோ; சினிமா நோ; உன்னை மட்டுமே சுத்திக்கிட்டு... ச்சே சிங்கிள் பேரன்ட்டோட மகனா இருக்கிறது, எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்...''
கத்தினான். புத்தகங்களையெல்லாம் விசிறி அடித்தான்... "டிவி' வால்யூம் கூட்டி அலற விட்டான்.
""சாப்பிடுப்பா... கோவிச்சுக்காதே. பத்தாயிடுச்சே வரலையேன்னு பதறிட்டேன்பா,'' அவன் தலை கோதி சொன்னாள் சுபாஷினி.
""எனக்கு சாப்பாடு வேண்டாம். பிடிக்கலை. இந்த சிறை வாழ்க்கை பிடிக்கலை,'' தட்டில் இருந்த அன்னம், அவனால் தட்டிவிடப்பட்டு, தரையெங்கும் சிந்தி சிதறியது. என்ன ஒரு ஆங்காரம்.
""என்னடா கண்ணா இது... ப்ளீஸ்டா கோபிக்காதே. இனிமே எதுவும் கேட்க மாட்டேன். சாப்பிடுப்பா, எனக்கிருக்கறது நீ மட்டும்தானே கண்ணு... நீயும் இப்படிப் பேசினா, அம்மா எங்கேடா போவேன்?''
""அம்மா... கையெடுத்துக் கும்பிடறேன். என் விஷயத்லே தலையிடாதே; என்னை விட்டுடு... லேடீஸ் க்ளப் போ. சோஷியல் சர்வீஸ் பண்ணு... நகைக்கடை, துணிக்கடை போ.... என் சுதந்திரத்தில் கை வைக்காதே, நான் எட்டு வயது சித்தார்த் இல்லை... ச்சே சதா கண்காணிச்சுக்கிட்டு.''
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய், சுபாஷினியால் தாங்க முடியவில்லை. "மகனே விரட்டுகிறானே... அவனை விட்டுவிட்டு எங்கே போவது?'
சித்தார்த் இரண்டு நாட்கள் வீட்டுக்கே வரவில்லை. வேண்டா வெறுப்பாக மூன்றாம் நாள் வீட்டிற்கு வந்தான். பெரிய நவ்தால் பூட்டு தொங்கிற்று.
"இரவு பத்து மணிக்கு அம்மா எங்கு போய் விட்டாள்... நகைக் கடையா; புடவை கடையா; லேடீஸ் கிளப்பா?'
""ஹாஸ்பிடலுக்கு.... செல்லை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டே, என்ன புள்ளடா நீ?'' அவனை எரித்து விடுபவள் போல் பார்த்து, மருத்துவமனை பெயர் சொல்லி, சாவி தந்தாள் பக்கத்து வீட்டு மாமி. மனசு தடதடக்க மருத்துவமனை சென்றான் சித்தார்த்.
அவனை ஆழமாகப் பார்த்தாள் டாக்டர் ஷாலினி. அதில், ஏளனம் இருந்தது; பரிதாபமும் எட்டிப் பார்த்தது.
""ஏண்டா... ஏண்டா... உன்னை மாதிரி பசங்களுக்கு அறிவுங்கறதே கிடையாதா... காலேஜ் வந்திட்டா, நீ பெரிய மனுஷனாயிடுவியா... கல்வி அறிவைத்தான் வளர்க்கும்... நீ, திமிரை வளர்த்துக்கிட்டே. இதோ பார்...''
ஒரு காலி சீசாவை அவன் பக்கம் டேபிளில் உருட்டி விட்டாள். தூக்க மாத்திரைகள் இருந்த சீசா.
""போராடி மீட்டிருக்கோம்.... அம்மா சொன்ன முதல் வார்த்தை என்ன தெரியுமா... "அவன் நிம்மதியா இருக்கட்டும். என்னை ஏன் காப்பாத்தினீங்க... சுதந்திரத்தை இழந்திட்டானாம்...' இப்ப தாயையே இழக்க இருந்தியே... போ... போ... உன் அப்பாவை தேடிக் கண்டுபிடித்து, கூட இருந்து பார். அந்த பொம்பள உனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்து, எப்படி, "ட்ரீட்'பண்றா பாரு... அப்ப புரியும் உன் தாயோட அருமை. ச்சே... சாரி சித்தார்த் ஐ அம் ரியலி அஷேம்ட் ஆப் யூ...''
இருவரும் மவுனமாக ஒருவரை ஒருவர் பார்த்தனர். பிறகு மெல்ல டாக்டர் ஷாலினி சொன்னாள்...
""சித்தார்த்... நான் கூட கணவரை பிரிந்தவள் தான். ஆனால், என் கணவர், இன்றும் தன் மகனை பார்த்துப் போகிறார். அவன் டாக்டருக்குப் படிக்கிறான். என்னிடம் பணம் இல்லையா என்ன... ஆனால், அவர் படிக்க வைக்கிறார். மகனை கண்டிக்கிறார். பாசம் காட்டுகிறார்... என்கிட்ட பிடிப்பு இல்லை என்ற வலி... அவர், என் மகனிடம் காட்டும் பாசம் கண்டு மறந்து போகிறேன். அவருக்கு இன்னொரு குடும்பம் இருக்கு.''
பிரமித்து விழித்தான் சித்தார்த். இப்படியொரு அப்பாவா... ஆனால், இவன் அப்பா?
""உன் அப்பா எங்கிருக்கிறார்... என்ன செய்கிறார் தெரியுமா... ஒரு நாளாவது போன் செய்து, உன்னை பற்றி விசாரித்தாரா... பொண்டாட்டிய தலைமுழுகிற ஆண்களைக் கூட மன்னிக்கலாம். ஆனால், பெற்ற பிள்ளையை தலைமுழுகுகிற தகப்பனை மன்னிக்கவே முடியாது. புரிந்து கொள்...''
""தப்பு பண்ணிட்டேன் டாக்டர்...'' கண்ணீர் வழியக் கூறினான்.
""சரி... காம் டவுன். சிங்கிள் பேரன்ட்டான அம்மாவின் வலியை, நீ புரிஞ்சுக்கணும். அப்பப்ப அம்மாவுக்கு நேரம் ஒதுக்கணும்... தூக்கி எரிஞ்சிட்டுப் போன உங்கப்பா, இந்த பத்து வருஷம், உன் தேவை என்னன்னு கேட்டு நடந்திருக்காறா?
""இல்லாத அப்பாக்கிட்ட பாசத்தைக் காட்டி, இருக்கிற அம்மாவை இழக்கப் பார்த்தியே... புரிஞ்சுக்க சித்தார்த். கடினமான வார்த்தைகளை புரிந்து கொள்ள, டிக்ஷ்னரி இருக்கு. கடினமான வாழ்க்கைப் பயணத்தைக் கடக்க, அம்மாதான் டிக்ஷ்னரி. அவளை இழந்துடாதே! இன்னிக்கு
மதர்ஸ் டே. போ... உன் அம்மாவை பார்த்து, அன்பா இரண்டு வார்த்தை பேசு. அதான் அவங்களுக்கு ஆக்சிஜன்.''
எழுந்து கொண்டாள் டாக்டர் ஷாலினி. அவன் முதுகை தட்டிக் கொடுத்தாள். அவன் கண்ணீர் நின்றது.
எட்டு வயது சித்தார்த்தின் பாசத்தை நெஞ்சில் சுமந்து, பூங்கொத்துடன் செல்லும் பதினெட்டு வயது சித்தார்த்தை, கனிவுடன் பார்த்தாள் டாக்டர் ஷாலினி.
***

சங்கரி அப்பன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gokul Shankar S - Pollachi,இந்தியா
22-ஜூன்-201209:06:15 IST Report Abuse
Gokul Shankar S Tamil Madayan, அவர்களே.. ஒரு கதையை படித்து விட்டு அதில் வருவது நடை முறையில் செய்து பாரக்கலாம் என்று நினைப்பவர்களை என்ன சொல்வது...ஆனால் உங்கள் கருத்தை என்னால் முற்றிலும் மறுக்க முடியவில்லை..நீங்கள் சொல்வது போல் ஆட்களும் இருக்கின்றனர்..எனவே முடிந்தவரை "POSITIVE VIBRATION" இருக்கட்டும்... - ஏனுங்க மான்விழி, அவரும் எல்லா பெண்களையும் சொல்லவில்லை..பொதுவாகத்தான் சொல்லி இருக்கிறார்...கணவன், மனைவி இருவரும் தங்கள் பிள்ளைகள் முன் ஒருவரை ஒருவர் கண்ணியமாக நடத்த வேண்டும்...[அதுக்கு அப்புறம் தனியா வேணும்னா கணவனை கூட்டி போய் அடியுங்கள் அவரும் சத்தம் போடாமல் வாங்கி கொள்வார் ] Just for Fun ... :-)
Rate this:
Share this comment
Cancel
மான்விழி - சென்னை,யூ.எஸ்.ஏ
21-ஜூன்-201201:05:22 IST Report Abuse
மான்விழி பாலா/// இந்தியா loosa பா நீ ////////////////////// எல்லாம் பெண்களையும் தப்பபா பேசாதிங்க .... ஆண்கள் பெண்ண்கள் ரெண்டுதுளையும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருகாங்க boss
Rate this:
Share this comment
Cancel
thamizh Madayan - வெத்தலப் பாக்கம் (Bethel Park),யூ.எஸ்.ஏ
21-ஜூன்-201200:19:50 IST Report Abuse
thamizh Madayan கோகுல் ஷங்கர், பொள்ளாச்சி: சிலந்தி கூடு கட்டுவதைப் பார்த்த ராபர்ட் புரூசிலிருந்து முயல் நரியைத் துரத்துவதைப் பார்த்த கட்ட பொம்மன் வரை பலர் தன்னிச்சையான செயல்களிலிருந்து பாடம் பயின்றது சரித்திர உண்மை. பல கதைகள் இவ்வாறு அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்த கற்பனைக் கதைகளிலிருந்து பாடம் பயில்பவர்கள் பலர் இருக்கிறார்கள், தற்கொலை முயற்ச்சியால் அவள் பிரச்சினை தீர்ந்தது, நானும் அப்படியே செய்தால் என்ன என்று சிலர் எண்ணக்கூடும், எனவே தற்கொலை முயற்ச்சியத் தவிர்த்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
பாலா - India,இந்தியா
19-ஜூன்-201223:19:42 IST Report Abuse
பாலா எதோ பெண்கள் எல்லாம் தியாக ப்ரிமங்கள் போல் எழுதப்பட்டுள்ளது. இவள் அன்பாக கணவனிடம் இருந்திருந்தால் அவன் ஏன் இவளையும் குழந்தையையும் விட்டு போகபோகிறான்? குழந்தையாக இருந்தபோது சித்தார்த் பார்த்ததைதான் வளர்ந்தபின் அன்னைக்கு சொல்லிருகின்றான், இது ஆசிரியர் எழுத்திலிருந்தே தெரிகிறது. அப்புறம் என்ன வியாக்கியானம். அவரை போட்டால் துவரையா முளைக்கும்? இது பெண்கள் சிந்திக்க வேண்டிய விஷயம், கணவன் அடுத்தவள் கூட ஓடி போகவேண்டும் என்றுதான் இல்லை, ஏன் உன் கூட இருக்கும் போதே செத்தும் போகலாம், அப்போது குழந்தைகள் உன்னை பற்றி என்ன முடிவுக்கு வருகிறதோ அதுதான் உனக்கு தண்டனை. குழந்தைகள் முன் நீ உன் கணவரை மரியாதையுடன் நடத்தினால் தான் உனக்கும் மரியாதையை.
Rate this:
Share this comment
Cancel
சுகராகம் சுரேஷ் - madurai,இந்தியா
19-ஜூன்-201212:52:50 IST Report Abuse
சுகராகம் சுரேஷ் ஆழமான கருத்து இன்றைய இளய சமுகத்துக்கு தேவையான ஒன்று வாழ்த்துக்கள் ... சங்கரி அப்பன்.
Rate this:
Share this comment
Cancel
Gokul Shankar S - Pollachi,இந்தியா
19-ஜூன்-201209:45:49 IST Report Abuse
Gokul Shankar S tamil மடையன், அவர்களே நீங்க சொல்லும் கதையின் முடிவு எல்லாமே தன்னிச்சியாக நடப்பது (accident, losing leg, fri leaves him etc., ) அது எப்படி அந்த பயன் மனதை மாற்றும்? அதில் அம்மாவின் பங்கு ஏதும் இல்லையே என்று தானே பயனுக்கு நினைக்க தோன்றும்? அதனால் அவன் மண்டையில் நன்றாக உரைக்கும் படி தற்கொலை முடிவை எடுத்து இருக்கிறார் அந்த அம்மா...அவள் உயிரை விடவும் அவள் குழந்தையின் சந்தோசம், நிம்மதி தான் முக்கியம் என்று உணர வைக்கிறாள்... :-)
Rate this:
Share this comment
Cancel
Mrs. Rajesh - San Francisco,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-201209:59:52 IST Report Abuse
Mrs. Rajesh nice story, but wrong timing, Today is Father's day. Not all fathers are bad :( could have been better timed to publish the story
Rate this:
Share this comment
Cancel
ஜகன் - chennai,இந்தியா
17-ஜூன்-201223:38:45 IST Report Abuse
ஜகன் கத ஒன்னும் அவ்வளவு திருப்பதியா இல்லைங்க.
Rate this:
Share this comment
Cancel
thamizh Madayan - வெத்தலப் பாக்கம் (Bethel Park),யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201217:16:13 IST Report Abuse
thamizh Madayan இங்கே பல இடுகைகள் (postings ) கதைகள் ஒருவரின் கற்பனை என்று பாராமல், நிஜங்களின் நிஜமான பிரதிபலிப்பு என்ற நோக்கத்தில் உள்ளன. இவ்விடம் தற்கொலை முயற்சியால் பிரச்சினை தீர்ந்தது எனும் கருத்தைப் பரப்புவது நல்லதல்ல. இம்முறை கதை சொல்லும் பாணியை (technique) திறனாய்வு செய்யாமல், மாற்று முடிவுகள் கோடி காட்ட முயற்சிக்கிறேன்........[முடிவு 1 சுபாஷினிக்கு ஒரு விபத்து. மயக்கத்தில் பேசியதை டாக்டர் ஷாலினி கேட்டு சித்தார்த்திடம் சொல்கிறார் ] ........[ முடிவு 2 சித்தார்த்துக்கு விபத்து. ஊனம் அல்லது விகாரம். நண்பி விலகுகிறாள். சுபாஷினி விலகவில்லை. சித்தார்த் உண்மை அன்பை உணர்கிறான் ] .... [ முடிவு 3 சித்தார்த் அப்பாவை தேடி கண்டுபிடிக்கிறான். சுமதி சொத்துக்கு பங்கு கேட்க அடி போடுவதாக குற்றம் சாட்டி கன்னா பின்னா என்று திட்டுகிறாள். அப்பா பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். சித்தார்த் உண்மையை உணருகிறான்.] ...[முடிவு 4 சித்தார்த்தின் நண்பன் ஒரு கல்லூரியை/துறையை விரும்புகிறான். அம்மா வேறு துறை/கல்லூரிக்கு செல்ல சொல்கிறார். "என்னைப் பற்றி என்னை விட அம்மாவுக்குத் தெரியும். தனக்கு கஷ்டம் வந்தாலும் எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பார். எனவே அம்மா சொன்ன பேச்சை கேட்பேன்" என்று சொல்கிறான். சித்தார்த் திருந்துகிறான் ]
Rate this:
Share this comment
Cancel
ராஜ்பார்த்திபன் - புதுக்கோட்டை,இந்தியா
17-ஜூன்-201212:20:03 IST Report Abuse
ராஜ்பார்த்திபன் இது எனக்காகவே எழுதப்பட்ட கதை போல் உள்ளது. கௌசல்யா அம்மா, அன்று நீங்கள் எனக்கு சொன்ன ஆறுதலின் முழு அர்த்தம் தான் இது. இக்கதையில் இருக்கிற அப்பாவை நினைத்து ஏங்குகிறான். நான் இல்லாத கற்பனை அப்பாவை நினைத்து ஏங்குகிறேன். அவ்வளவேதான் வித்தியாசம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.