நூறு கோடிக்கும் மேலான மொபைல் பயனாளர்கள் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
Advertisement
நூறு கோடிக்கும் மேலான மொபைல் பயனாளர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
00:00

உலகில் மிக அதிகமான எண்ணிக்கையில் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் கொண்ட நாடாக, சீனா இடம் பெற்றுள்ளது. அண்மையில் இந்த எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டியதாக, சீன அரசின் அதிகார பூர்வ அறிவிக்கை கூறுகிறது. (அமெரிக்க நாட்டில் மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 33 கோடி மட்டுமே. )
சீனாவில், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 4 கோடியே 30 லட்சம் புதிய மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டன.
சீனாவில் கூடுதல் வசதிகள் கொண்ட மொபைல்களே அதிகம் விரும்பப்படுகின்றன. குறிப்பாக, ஸ்மார்ட் போன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சீனர்களின் விருப்பமான சிஸ்டமாக மொபைல் போன்களில் பயன்படுத்தப் படுகிறது. அங்கு பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில், 68% போன்களில் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தப் படுகிறது. இது மூன்று மாதங்களுக்கு முன்னர் 38% ஆக இருந்தது குறிப்பிடத் தக்கது.
ஆப்பிள் நிறுவனத்திற்கும், அதன் ஐ-போன் விற்பனைக்கு சீனா முக்கிய நாடாக இடம் கொண்டுள்ளது. சென்ற 2011 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்தில் 16% பங்கினை சீனா தந்துள்ளது. அனைத்து ஐரோப்பிய நாடுகள் தந்த வருமானத்தைக் காட்டிலும் இது கூடுதல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.