உஷாவின் சிறப்பு இன்னிசை | கலை மலர் | Kalaimalar | tamil weekly supplements
Advertisement
உஷாவின் சிறப்பு இன்னிசை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
00:00

மயிலை ஆர்.கே., கன்வென்ஷன் குளிரூட்டிய கலைநயம் படைத்த அரங்கத்தில், அண்மையில் மகா பெரியவர்களின் ஜெயந்தி தின அனுஷ நட்சத்திரத்தன்று சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது ஸ்ம்ருதி அமைப்பு.
இசை விதூஷி உஷா பத்மநாபனின் கச்சேரி, இந்த சிறப்பு இசையாஞ்சலி நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
விதூஷி உஷா பத்மநாபன், இசையுலகிற்கு நன்கு பரிச்சயமானவர். பளிங்கு போன்ற துல்லிய சாரீரம் உடைய இவர், மூத்த வித்வான் நங்கைநல்லூர் ராமநாதனின் சிஷ்யையாக திறமையுடன் பாட வல்லவர்.
தற்சமயம் இசை மூத்த விதூஷி சங்கீத கலாநிதி ஆர். வேதவல்லியிடம் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார்.
இயற்கையாகவே நெகிழவைக்கும் குரல் நயம் இவருக்கு உள்ளது. இவரிடம், அலட்டிக் கொள்ளாமல் அங்க சேட்டைகள் எதுவுமே இல்லாத ஒழுங்கு காணப்பட்டது.
குருவைப் போற்றித் துதிக்கும் சிறப்பு இசை நிகழ்ச்சி இது என்பதை அருமையான நிகழ்ச்சி திட்டம் மூலம், உணர வைத்தார் உஷா.
குருலேக (கவுரி மனோகரி - ஸ்ரீ தியாகராஜர்) ஆபோகியில் சபாபதிக்கு வேறு தெய்வம் (கோபாலகிருஷ்ண பாரதி) இப்படி எடுப்பிலேயே சிக்சர் அடித்த கிரிக்கெட் ஆட்டத்தைப் போல், மனம் கவர்ந்து அசத்திய உஷா பாடிய, ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர சரசுவதி (சக்ரவாகம் - டி.கே.ராஜகோபாலன் இயற்றியது) இதன் வரிகள் கருத்தைக் கவர்ந்ததோடு, கிட்டத்தட்ட ஸ்ரீ முத்துசாமி தீட்சிதருடைய கிருதியைப் போன்று, மிக நயமாக அமைந்திருந்தது.
இது போன்று, சாரங்கா ராகத்தில் அண்ணா ஸ்வாமி சாஸ்திரிகள் இயற்றிய ஸ்ரீ காமாட்சி என்கிற நயமான உருக வைத்த கிருதியும் பலே போட வைத்தது.
நாகஸ்வராளியில் ஸ்ரீ சங்கர குருவரம் கீர்த்தனத்தின் சிட்டைஸ்வரம் படுஜோராக லயம் சிறப்பாக இருந்ததைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
மகா பெரியவருக்கு மிகவும் பிரியமான கிருதியான ஸ்ரீ சுப்ரண்யாய நமஸ்தே (காம்போதி - ரூபகம்) நிகழ்ச்சியில் சிகரமாக கேட்க மிக அருமையாக இருந்தது.
மூத்த கலைஞர்கள் பாடி புகழ் பரப்பிய இந்த கிருதியை, தற்போது அதிகமாக கேட்க முடியாத நிலையில், இங்கு கேட்டபோது, மனம் மிகழ்ச்சியில் துள்ளியது.
நிகழ்ச்சியின் நிறைவாக ஸ்ரீ சாமா சாஸ்திரிகள் அருளிய கனகசைவ விஹாரிணி (புன்னாக வராளி) மற்றும் மகா பெரியவர் எப்போதுமே விரும்பும் உலக அமைதியை வலியுறுத்தும், "மைத்ரிம் பஜ' பாடலும் உஷாவின் குரலில் மனம் நெகிழ்ந்து நிகழ்ச்சி குரு அஞ்சலியாக நிறைவு பெற்றது. இவை எம்.எஸ்., அம்மா ஆல் டைம் பேமஸ் பாடல்கள்.
பத்மநாபா வயலின் வாசிப்பில் நல்ல அனுசரணை இருந்தது. மன்னார்கோவில் பாலாஜியின் லயம் சிறப்பாக இருந்தது. தனி ஆவர்தனம் கடும் உழைப்புடன் மெருகாக இருந்தது வாசிப்பு.
-மாளவிகா

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.