சுவாதி திருநாள் நினைவு நடனம்: பார்வதி ரவிகண்டசாலா அபாரம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
00:00

ஸ்ரீகிருஷ்ண கான சபாவின் மகாராஜா சுவாதி திருநாள் நினைவு சிறப்பு நடன நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
கிருஷ்ணகான சபையினர், பார்வதி ரவிகண்டசாலாவிற்கு மகாராஜா சுவாதி திருநாள் நினைவு நடன நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தனர். அதுவும் முற்றிலும் இலவசமாக என்பது கூடுதல் சிறப்பு. நிகழ்ச்சியைக் காண, கணிசமான அளவு கூட்டம் இல்லாவிட்டாலும், முடியும்போது பரவாயில்லை என்று சொல்ல வைத்தது.
நிகழ்ச்சிக்கு, சித்ராவிஸ்வேஸ்வரன், கலாவதி நாராயணன், கோபிகா வர்மா போன்ற நடனக் கலைஞர்கள் வந்து சிறப்பித்து கடைசி வரை இருந்தனர்.
சுவாதி திருநாளின் கீர்த்தனைகள் என்றவுடன் குறிப்பிட்ட சில அடதாள வர்ணங்கள், பத வர்ணங்கள், பதங்கள், ராகமாலிகை கீர்த்தனங்கள் என உண்டு. குறிப்பாக, பாவயாமி ரகுராமம் என்ற எம்.எஸ்., அம்மாவின் குரலில் கேட்ட பாட்டு நினைவுக்கு வரும்.
பாட்டு, கருவி இசை, நடனம் என அனைத்திலுமே சுவாதி திருநாளின் கீர்த்தனங்கள் அதிகம் இடம் பெறுவதில்லை. அதற்கு முக்கியமான காரணம், இவரது படைப்புகள் முக்கால்வாசி வடமொழியில் அமைந்திருப்பதாகும். குறுகிய காலத்தில் வாழ்ந்திருந்தாலும் 400 கிருதிகளை செய்துள்ளார். ஒரு சமஸ்தான ராஜாவாக இருந்து கொண்டு, கலையில் இத்தனை ஆர்வம் கொண்டு, பலமொழிகளில் பாடல்களை இயற்றியுள்ளார்.
ஆங்கில மொழியிலும் சிறப்பு பெற்றவர். தென்னிந்திய இந்துஸ்தானி இசை முறைகளை ஒன்றுபடுத்த முயன்றவர்.
இவர் இயற்றிய பதங்களில் நாயகன், நாயகியின், சிருங்கார ரசம் கொண்ட, பொருள் செறிவுள்ள பாடல்கள், அதுவும் வடமொழியில் பாடுவார்கள். அப்படி இருக்க, இதை நடனத்தில் கொடுக்க வேண்டுமென்றால், வார்த்தைக்கு வார்த்தை பொருள் புரிந்து ஆட வேண்டும். அப்படி இதுவரை யாரும் செய்யாத அரிய முயற்சியை பார்வதி செய்துள்ளார்.
தேன் சொட்டும் குரலுக்கு சொந்தக்காரரான ஸ்ரீகாந்த், நிகழ்ச்சிக்கு தொடக்கமாக "சரஸிஜநாப நின்சரண' என்ற சவுராஷ்டிர ராக கீர்த்தனையைப் பாடினார் அடுத்து, "பார்வதி கோபால கபாஹிமாம்' என்ற ரேவகுப்திராக மிச்ரசாபு தாளத்தில் அமைந்த மிக வித்தியாசமான அமைப்பு சுவாதி திருநாள் கீர்த்தனையை தேர்ந்தெடுத்து ஆடினார். தில்லானா பாணியில், துவக்கமே மிக அருமையாக ரசிகர்களுக்கு கிடைத்தது.
சரணங்கள் கொண்ட பாடலை ஸ்ரீகாந்த் பாட, கண்டதேவி விஜயராகவன் மிக அழகாக அதை வாங்கி, வாசித்து மெருகு ஊட்டினார். முருக சங்கரியின் மிக நேர்த்தியான நட்டுவாங்கத்திற்குதன் முழு ஒத்துழைப்பை மிருதங்கத்தில் கொடுத்தவர் விஜயராகவன்.
சிறந்த அபிநயத்தின் ஒவ்வொரு சாகித்யத்திற்கும் அழகாக சிட்டைஸ்வரம் நல்ல அமைப்பு. நீண்ட நாட்களுக்கு பிறகு பார்வதி ரவியின் சிறந்த தனி நடனத்தையும் பார்த்த திருப்தியும் இதில் கிடைத்தது.
- ரசிகப்ரியா

Advertisement

 

மேலும் கலை மலர் செய்திகள்:Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.