இரண்டு சிம் நோக்கியா இந்தியாவில் முதலிடம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
00:00

பன்னாட்டளவில் சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களிடம் தன் முதல் இடத்தினை நோக்கியா விட்டுக் கொடுத் திருக்கலாம். ஆனால், இந்தியாவில், இரண்டு சிம் போன்களில் நோக்கியா நிறுவனத்தின் போன்களே விரும்பப் படுவதாக, நீல்சன் என்னும் நுகர்வோர் பழக்க ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் நிறுவனங்கள் கோலோச்சிய இரண்டு சிம் மொபைல் மார்க்கட்டில், நோக்கியா மிகத் தாமதமாகவே நுழைந்தது. 2010 ஆகஸ்ட் மாதத்தில் தான் நோக்கியா இரண்டு சிம் இயக்க போன்களை வெளியிட்டது. ஆனால், இந்நிறுவனத் திற்கு ஏற்கனவே இருந்த நல்ல பெயரால், வேகமாக இப்பிரிவில் முதல் இடத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவில், 7 கோடியே 10 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை இயக்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 61 சதவிகிதம் பேர் இரண்டு சிம் இயங்கும் மொபைல் போன்களை இயக்குகின்றனர். இவர்களில் 30% பேர் நோக்கியா நிறுவன போன்களைக் கொண்டுள்ளனர். சாம்சங் 16% மற்றும் மைக்ரோமேக்ஸ் 12% என்றவாறு இடத்தைப் பிடித்துள்ளன. ஜி ஃபைவ் நிறுவனம் அடுத்த 7% இடத்தைப் பிடித்துள்ளது.
கார்ட்னர் என்னும் அமைப்பு மேற் கொண்ட வர்த்தக ரீதியான ஆய்வில், இந்த ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், சாம்சங் போன்கள் விற்பனை யில் முதல் இடத்தைப் பிடித்து, இதுவரை இந்த இடத்தில் இருந்த நோக்கியாவினை தள்ளிவிட்டன. மாணவர்கள், புதியதாக வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் ஏற்கனவே அலுவலகப் பணியில் இருப்பவர்களே இரண்டு சிம் இயங்கும் போன்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். 5 முதல் 10 லட்சம் பேர் வசிக்கும் நகரங்களில் மொபைல் பயன்படுத்துபவர்களில், 21% பேர் இரண்டு சிம் போன் பயன் படுத்துகின்றனர். 40 லட்சம் பேர் வசிக்கும் நகரங்களில் 11% பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது. பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட சிம் பயன்படுத்துபவர்கள், வெவ்வேறு நிறுவனங்களின் சிம்களையே விரும்புகின்றனர்.
யூனிநார் நிறுவனம் மொத்தத்தில் 1% வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தாலும், இரண்டு சிம் பயனாளர்களில் 6% பேரைக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதே போல ஐடியா செல்லுலார் மொத்தத்தில் 10% பேர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருந்தாலும், இரண்டு சிம் வாடிக்கையாளர்களில் 15% பேரைக் கொண்டுள்ளது.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X