கூகுள் பக்கங்களை நீக்க விண்ணப்பம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
00:00

கூகுள் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர், கூகுள் இணைய தளங்களில், அதன் யு-ட்யூப் தளத்தில், தகவல்களை, வீடியோ கிளிப்களை பதியலாம். இந்த சுதந்திரத்தினை கூகுள் அளித்துள்ளது. ஆனால், அரசியல் மற்றும் தனிநபர் மீது காழ்ப்புணர்ச்சி உள்ள பலர் இந்த சுதந்திரத்தினைப் பயன்படுத்தி மிக மோசமான, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பதிக்கின்றனர். இதனால், பாதிக்கப்படுபவர்கள் கூகுள் நிறுவன நிர்வாகிகளுக்கு அவற்றை நீக்க வேண்டிய காரணத்தினைக் கூறி நீக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். சிலவற்றை நீக்குமாறு அரசே ஆணையிடுகிறது. சிலவற்றை நீக்க நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன.
கூகுள் தன் ஆண்டறிக்கையில் எந்த தளங்கள், தகவல்கள் எதற்காக நீக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கூகுள் நிறுவனத்திற்கு வந்துள்ளன. இவற்றில் பாதிக்கும் மேலான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்பட்டன. பன்னாட்டளவில் பல அரசு நிர்வாகிகள் அரசியல் நோக்கத்திற்காகப் பல தகவல்களை நீக்குமாறு கேட்கின்றனர். தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் தகவல்களை மட்டுமே கூகுள் நீக்கிவருகிறது.
நீதிமன்றத்திலிருந்து 461 ஆணைகள் பெறப்பட்டு, இந்த ஆறு மாத காலத்தில், 6,989 பதிவுகள் நீக்கப்பட்டன. ஆணை யிடப்பட்டவற்றில் 68% மட்டுமே நிறை வேற்றப்பட்டன. தனிப்பட்ட முறையில் 546 விண்ணப்பங்கள் வந்ததாகவும் அவற்றில் 46% நீக்கப்பட்டதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் ஈரான் நாட்டு அரசுகள், கூகுள் நிறுவனத்திடம் அறிவிக்காமல் தாங்களே தளங்களை தடை செய்துவிடுகின்றன.
போலந்து நாட்டிலிருந்து ஏஜென்சி ஒன்று குறித்து அவதூறாகவும் தவறாகவும் தகவல் தந்த தளம் நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.ஸ்பெயின் நாட்டு நிர்வாகம் 270 வலைமனைகள் மற்றும் அவற்றில் குறிப்பிட்ட லிங்க்குள் யாவும் நீக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டது. இவை யாவும் பொது வாழ்வில் ஈடுபடுவோரைப் பற்றிய அவதூறு தளங்களாகும். கனடா வழங்கிய பாஸ்போர்ட் மீது ஒருவன் சிறு நீர் கழித்து, அதனை கழிப்பறையில் எறிந்துவிடும் வீடியோ பதிவினை, கனடா நாட்டு அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், கூகுள் இந்த விண்ணப்பங்கள் யாவற்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் செய்தியாகும்.
ஆனால், தாய்லாந்து நாட்டின் அரச குடும்பத்தினர் குறித்து அவதூறாக வெளியிடப்பட்ட 149 வீடியோ பதிவுகள் நீக்கப்பட்டன. ஏனென்றால், அது தாய்லாந்து சட்டத்திற்கு எதிரானதாகும். தீவிரவாதத்தினைத் தூண்டிய ஐந்து வீடியோ பதிவுகள், பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க நீ . அமெரிக்க அரசு அனுப்பிய விண்ணப்பங்களில், 42% வீடியோ பதிவுகள் (187) நீக்கப்பட்டன. இவை யாவும் தனி நபர் குறித்த அவதூறுகளாகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X