சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
00:00

எங்களில் பலருக்கு இருந்த சந்தேகத்தினை விண்டோஸ் ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்து வது குறித்த கட்டுரையில் தீர்த்து வைத்துள்ளீர்கள். சோதனை செய்து பார்க்கத் துடித்த எங்களைப் போன்ற கணிப்பொறி அறிவியல் மாணவர்களுக்கு, உங்கள் எச்சரிக்கை நல்ல டிப்ஸ். நன்றி.
-சி. பரத் ராஜகுமார், கிருஷ்ணன் கோவில்.

தொடர்ந்து புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் தொழில் நுட்ப மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்பு சரியாகவே கணிக்கப் பட்டுள்ளது. நிச்சயம் இந்த மாற்றங்கள் ஏற்படும். தகவல் தொழில் நுட்பத்துறையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு நம் வாழ்விலும் முன்னேற்றம் ஏற்படும் என்பது உறுதி.
-கா. பாண்டியன், மதுரை.

விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ தொகுப்பினை இயக்கிப் பார்க்க, உபரி அல்லது தனியொரு கம்ப்யூட்டர்தான் சிக்கல் இல்லாதது என்பதை அடித்துச் சொல்லியுள்ளது நல்ல மருந்தாக உள்ளது. இருக்கிற கம்ப்யூட்டரில் இதனை இன்ஸ் டால் செய்து, ஆர்வக் கோளாறில் தவறு செய்திட இருந்தேன். மிக்க நன்றி.
-டி.சாந்தினி, விருதுநகர்.

புதிய தேசிய தொலை தொடர்புக் கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் மக்களுக்கு நன்மை தருவதாகவே உள்ளது. இவற்றை அப்படியே நிறுவனங்கள் கடைப் பிடிப்பதனை அரசு உறுதி செய்திட வேண்டும். கொள்கை அறிவிப்போடு நின்றுவிடக் கூடாது.
-சி.இளந்தென்றல், கோவை.

கிராமப் புறங்களில் தொலை தொடர்பு வசதிகள் மேன்மை அடைவது மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். தேவையற்ற மக்கள் கூட்டம் நகரங்களில் பெருகுவது தடுக்கப்படும். இதனால், பல சிக்கல்கள் தீர்ந்து நாடு வளமான காலத்தை நோக்கிச் செல்லும் என்பது உறுதி.
-சா. ராஜ்குமார், சென்னை.

ரயில்வே டிக்கட்களைக் கூட பிரிண்ட் எடுக்க வேண்டாம் என்று அரசு சலுகை தந்திருக்கும் வேளையில், நாம் பிரிண்ட் எடுக்கும் முன் யோசிக்க வேண்டிய விஷயங்களை நன்றாக விளக்கி தந்திருக் கும் உங்களுக்கு எங்களின் பாராட்டு. பிரிண்ட் தானே, ஒரு பேப்பரில் என்ன வந்திடப் போகிறது என வீணாக்கும் பலருக்கு இது ஒரு நல்ல அறிவுரை. இது போல பல விஷயங்களிலும் உங்கள் வழி காட்டுதலை எதிர்பார்க்கிறேன்.
-டி.தாமோதரன், ஓய்வு பெற்ற ஆசிரியர், செங்கல்பட்டு.

விஸ்காபுலரி இணைய தளத்தினை என் மகள், மகனுக்கு அறிமுகப்படுத்தி அவர் களுக்கிடையே போட்டியை உருவாக்கி னேன். பள்ளியில் படிக்கும் அவர்களின் ஆங்கிலச் சொல்லறிவு தொடர்ந்து வளம் பெற்று வருகிறது. குழந்தைகளின் கல்வி சார்ந்த தளங்களை ஒவ்வொரு வாரமும் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
-பேரா. கே. ஞானமூர்த்தி, சென்னை.

காலவரையறையுடன் கூகுள் தேடல் தளத்தில் தேடலை மேற்கொள்ளலாம் என்பது புதிய செய்தியாக உள்ளது. இந்த வசதி ஏற்கனவே இருந்தும் நான் இதுவரை தெரியாததால், பயன்படுத்தவில்லை. கவனத்திற்கான டிப்ஸ் கொடுத்தமைக்கு நன்றி.
-எஸ். சாபு மரைக்காயர், உத்தமபாளையம்.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 15 தொகுப்பு குறித்த தகவலைத் தொடங்கிவிட்டீர்கள். எதனையும் முந்தித் தரும் உங்களுக்குப் பாராட்டுக்கள். வேர்டில் பி.டி.எப். பைல் படிக்கும் வசதி தரப்பட இருப்பது நல்ல முன்னேற்றம் தான். மைக்ரோசாப்ட் இது போல பல விஷயங்களைத் தன் ஆபீஸ் முழுத் தொகுப்பில் இணைப்பது பயனுள்ள ஒரு விஷயமாகும்.
-சி. முத்துராஜ், கோவில்பட்டி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X